புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013


பூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாம்களை மூடக்கோரி நடைபயணம் செய்த 50 பேர் கைத

பூந்தமல்லி அருகே உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாம்களை மூடக்கோரி நடைபயணம் மேற்கொள்ள இருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். 


இலங்கை அகதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை மூடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (17) பூந்தமல்லியில் இருந்து செங்கல்பட்டுக்கு நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தனர். 

இதற்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் குமாரதேவன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். 

அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சிறப்பு முகாம்களை மூடக்கோரி கோஷமிட்டனர். தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் மகேஷ்குமார் தலைமையில் உதவி கமிஷனர் அய்யப்பன், இன்ஸ் பெக்டர் அழகு, சித்தார் ராவ் உள்பட ஏராளமான பொலிஸார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடையை மீறி நடைபயணம் செல்ல முயன்றனர். அவர்கள் அனைவரையும் பொலிஸார் கைது செய்தனர். 

ad

ad