புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2013




            ந்திய ராணுவ வீரர்களான சுதாகர்சிங், ஹேம்ராஜ் இருவரையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 8-ந்தேதி அத்துமீறி நுழைந்து சுட்டுக்கொன்றதோடு அதில் வீரர் ஹேம்ராஜின் தலையை துண்டித்து எடுத்துச்சென்றது நாடுமுழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்விதிமுறைகளுக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை தாண்டிய இக்கொடுஞ்செயலை வன்மையாக கண்டித்திருக்கிறார்கள் பிரதமர் மன்மோகன்சிங்கும், இந்திய ராணுவத்தளபதி பிக்ராம் சிங்கும். நக்கீரன் 

அதுமட்டுமல்ல... இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம்  புதைத்திருந்த கண்ணிவெடிகளையும்  புகைப்பட ஆதாரத்துடன் காண் பித்து  கண்டித்திருக்கிறது இந்திய ராணுவம்.  பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் என்று இந்திய விமான படை தளபதி என்.ஏ.கே. பிரௌ வுன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்பிரச்சினை சம்பந்தமாக இரு நாடு களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துவிட்டது. இதனால், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மிகப்பெரிய போர் நடக்கப்போகிறதோ என்கிற அச்சமும் பதட்டமும் உருவாகிக் கொண்டி ருக்கிறது. பாகிஸ்தானின் இந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கு என்ன காரணம்? இதனால் போர் மூளுமா?


பாகிஸ்தானுக்கு பலமுறை சென்று வந்துள்ள மூத்தப்பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர் செல்வத்திடம் பேசினோம். ""இது இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினையோ காஷ்மீர் எல்லை பிரச்சினையோ அல்ல. அப்படி இதை பார்க்க ஆரம்பித்தால் பிரச்சினைக்கு ஆணிவேரான விஷயத்தை விட்டுவிட்டு வேறொரு சிக்கலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். 

பாகிஸ்தானில் ஓர் ஆட்சி (பாகிஸ் தான் மக்கள் கட்சி) சர்தாரி தலைமையில் ஜனநாயக முறையில் பொறுப்பேற்று முதல் தடவையாக தனது ஆட்சிக்காலத்தை முடிக்கப்போகிறது. இதனால் ஜனநாயகம் வலுப்பெற வாய்ப்புண்டு. இதுவரை பாகிஸ் தானில் ஜனநாயக ஆட்சி  என்பது கவிழ்க் கப்பட்டதுதான் வரலாறு. காரணம், பாகிஸ் தானில் ஜனநாய கத்துக்கு ஆபத்து வருவது இரண்டுவகை.

அதில் ஒன்று... அதிக செல்வாக்குடன் கூடிய ராணுவம் ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டு  செயல்படுவது. மற்றொன்று ராணுவம் மட்டுமல்லாமல் ஆயுதம் ஏந்திய பல குழுக்களும்  எதிராக இயங்குவது.  இவர்களுக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இல்லை. ஜனநாயகம் வலுப்பெறு வதை இவர்கள் விரும்புவதில்லை. இந்தியா, இங்கிலாந்து நாடுகளைப் போல ஜனநாயகம்-ராணுவம்- நீதி என ஒருமித்த ஒற்றைப் பரிமாண அரசாங்கமாக செயல்படுவதில்லை பாகிஸ்தான்.


நமது ராணுவத்தினரை சுட்டுக்கொன்றது நியாயமல்ல. அந்த விதமும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால், எதனால் இந்த கொடூரம் நடந்தது? சற்று பின்னோக்கி போய் பார்த் தால் புரியும்.  இந்தியா-பாகிஸ் தான் இடையே இரண்டு வகை எல்லைகள் உண்டு. ஒன்று.. சர்வதேச எல்லை (International Border)  இது குஜராத்தி லிருந்து ஜம்மு- காஷ்மீர்வரை நீண்ட தூரமாக இருக்கும்.  இதில், எந்தவிதமான சிக்கலும் எல்லைப் பிரச்சினையும் இல்லை. இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போதே இரண்டுநாடுகளும் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைதான்.

இரண்டாவது எல்லை என்பது எல்.ஓ.சி. (line of control) இதில்தான் பிரச்சினை. இந்த எல்.ஓ.சி. என்பது இரண்டு நாடுகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லை அல்ல. இந்தியாவை பொறுத்தவரை  எல்.ஓ.சி.யை கடந்து காஷ்மீரை தன்னுடைய பிரதேசமாக கருதுகிறது. காஷ்மீர் மக்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதில், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப இப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்பது பாகிஸ்தானின் நிலைப்பாடு. 

எல்.ஓ.சி. என்பது என்ன?  போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால எல்லைதான்  எல்.ஓ.சி. இந்த இடைக்கால எல்லை வழியாகத்தான் எல்லைதாண்டிய பயங்கரவாதமும் நடக்கிறது. இந்த எல்லைதான் உலகத்தின் மிக அதிகமான ராணுவ குவிப்பு எல்லையாக கருதப்படுகிறது. இந்த எல்லையில் பல மைல்களுக்கு கம்பிவேலிகள் கொண்ட தடுப்புக்களை உருவாக்கியிருக்கிறது இந்தியா. 

ஆனால், கடைசி காலத்தில் தனது மகன்களோடு வாழவேண்டும் என்று நினைத்த 70 வயது மூதாட்டி ரேஷ்மாபி இந்திய ஆட்சிக்குட்பட்ட காஷ்மீரிலிருந்து  (ஊரி  என்ற பேரூருக்குள் உள்ள சரோண்டா என்ற சிற்றூரிலிருந்து)  பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள தனது மகன்கள் வீட்டுக்கு கடந்த செப்டம்பர் மாதம்  போய்விட்டார்.  ஒரு மூதாட்டி எப்படி எல்லையை கடந்துசென்றார் என்று அதிர்ச்சி அடைந்தது இந்திய ராணுவம்.  உண்மை யை சொல்லவேண்டுமென்றால்... எல்.ஓ.சி. என்று எல்லை பிரித்தாலும்  இந்தியா- பாகிஸ்தானுக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இருப்பவர்கள் மாமா மச்சான்கள் என்று அழைத்துக்கொள்ளும் அளவுக்கு உறவினர்கள்.  இருநாடுகளுக்குத்தான் எல்லை. அவர்களுக்கு  இது எல்லை இல்லை. 

ஆனால், மூதாட்டி  இந்த எல்லையை கடந்து சென்றது இந்திய ராணுவத்துக்கு கோபத்தை உண்டாக்கிவிட்டது.  இதனால், எல்லைப்பாது காப்பிலுள்ள இந்திய ராணுவத்தின்  ‘ஒன்பதாவது மரத்தா லைஃப் இன்ஃபெண்டரி ரெஜிமெண்ட்’ டீமை அழைத்து  அந்த இடத்தில் புதிய பாதுகாப்பு கண்காணிப்பு பங்கர்களை  (அரண்களை) அமைத்தது. 

2003-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிடையே ஏற்படுத்தப்பட்ட எல்.ஓ.சி. போர் நிறுத்த ஒப்பந்தப்படி  எந்தவிதமான கட்டுமான பணியும் எல்.ஓ.சி.க்கருகே செய்யக்கூடாது என்பது முக்கிய மான ஒப்பந்தம்.  இந்த ஒப்பந்தத்தை இந்தியா மீறிய காரணத்தினால்தான்  கடந்த செப்டம்பர்- அக்டோபர் மாதங்களிலிருந்தே அந்தப் பகுதியில் ஒருவிதப் பதட்டம் உருவாக ஆரம்பித்தது.  இந்தியா வின் ஒப்பந்த மீறலை டிப்ளோமேட்டிக் சேலன்ச் எனப்படும் ராஜ தந்திரத்தோடு அணுகாமல் ராணுவ ரீதியாக எதிர்கொள்ள  முடியும்  என்று நினைத்து   ஷெல்களை அடித்து தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தான் ராணுவம்.  

அந்த ஷெல் தாக்குதல்களால்  25 வயது முகம்மது சஃபி, 20 வயது சசீனா பானு, ஒன்பதாவது படிக்கும் சிறுவன் லியாகத் அலி மூன்றுபேரும் பரி தாபமாக கொல்லப்பட்டார்கள். நவம்பர் மாதம் புது வருடத்தை நோக்கிய சமயத்தில் ராணுவத் தளவாடங்களில் மூவ்மெண்ட்ஸ் ஆரம்பித்துவிட்டது. ஜனவரி 6-ந்தேதி இந்தியா- பாகிஸ்தானுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. 

இந்திய ராணுவம் பாகிஸ்தானின் சுவன்பத்ரா விலுள்ள கண்காணிப்பு போஸ்ட்டில் தாக்குதல் நடத்த இதில் ஒரு பாகிஸ்தான் ராணுவவீரர் கொல்லப்படுகிறார். மற்றொரு வீரர் பலத்த காயம் அடைகிறார். இந்திய ராணுவம் எல்.ஓ.சி.யை கடந்து தாக்குதலை நடத்தியிருக் கிறது என்று குற்றம் சாட்டியது பாகிஸ்தான் ராணுவம். 

ஆனால், இந்திய ராணுவமோ எல்லையை கடந்து போகவில்லை. இங்கிருந்து நாங்கள் நடத்திய தாக்குதலில் அவர்கள் காயமடைந்திருக்கலாம் என்றது.  இதே போல்தான், தற்போது இந்திய ராணுவ வீரர்களை நாங்கள் எல்லை தாண்டி வந்து சுட்டுக்கொல்லவில்லை என்றும்  தலையை நாங்கள் கொண்டு போகவில்லை என்றும் மறுக்கிறது பாகிஸ்தான். இந்த பதட்டச்சூழலில் இந்தியா- பாகிஸ்தானுக்கிடையே போர் மூளுமா என்று கேட்டால்  "மூளாது'’ என்பதுதான் எனது பதில்.  காரணம்... இதை விட மோசமான வன்முறைகள் நடைபெற்றபோதும்கூட அது போராக மாறவில்லை. 

முதல் வன்முறை: இந்திய நாடாளுமன்றம் தாக்கப் பட்டது.  அப்போதுகூட இரண்டு நாடுகளும் எல்லையில் ராணுவத்தைக் குவித்தன. ஒருவரையொருவர் கடுமை யாக விமர்சித்துக்கொண்டனர். ‘ ஆபரேஷன் பராக்ரம்’ என்றழைக்கப்பட்டு எட்டுமாத எல்லை ராணுவ குவிப்பாக மட்டுமே இருந்ததை மறக்கமுடியாது.

இரண்டாவது வன்முறை:  இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ நகரிலிருந்து பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள முசாஃப்ராபாத்துக்கு பஸ் போக்குவரத்தை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் ஸ்ரீநகரில் இறங்குவதற்கு முதல்நாள் அங்கு மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்குப் பிறகும் அங்கு துவங்க இருந்த பஸ் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. அதுவும் போராக மாறவில்லை.


மூன்றாவது வன்முறை: மும்பை நகரத்தின்மீது தொடுத்த மாபெரும் தாக்குதல்... இதை தொடர்ந்து கடுமையான முறையில் பாகிஸ்தான் அமைப்புகளை இந்தியா கண்டித்து வந்திருந்தாலும் போராக மாற வில்லை. அதேபோலத்தான் இந்த முறையும் இருபுறமும் ஒருவருக்கொருவர் கடுமை யாக விமர்சித்துக் கொள் வார்களே தவிர போர் மூளும் அபாயம் இல்லை.  இதை உறுதியாக கூறுவதற்கு காரணம், பாகிஸ்தானின்  உண்மையான பிரச்சினை என்பது அதன் கிழக்கு  எல்லையான இந்தியாவுடன் அல்ல.  மாறாக, 2014-ல் அமெரிக்க தலைமையிலான சர்வதேச ராணுவம் வெளி யேறப்போகிறது. 

அப்போது, பாகிஸ்தானின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கப்போவது அதன் வடமேற்கு எல்லையான ஆப்கானிஸ் தானுடன்தான். ஏற்கனவே, சில தாலிபான் அமைப்புகள் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த வார்லார்டு (ரஹழ் ப்ர்ழ்க்) என்றழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் பாகிஸ்தான் ராணுவத்தையும் பாகிஸ்தான் அரசியலமைப்பையும் குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  இந்தச் சூழலில் தன்னுடைய வடமேற்கு பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்தி செல்வதையே பாகிஸ்தான் விரும்புகிறது.   

இரண்டு எல்லைகளில் போர் என்பதை பாகிஸ்தானி லுள்ள அரசியல் தலைமையும், ராணுவத் தலைமையும் விரும்பவில்லை. ஆனால், ராணுவத்துக்கும் அரசியலுக்கும் எதிரான சில சக்திகள் பாகிஸ்தானில் உள்ளன. இந்த சக்திகளை பொறுத்தவரையில் பாகிஸ்தானின் கிழக்கு எல்லையான இந்திய பகுதியில் சிக்கல்களை ஏற்படுத்தி ராணுவத்தின் பார்வையை இந்தப் பக்கம் திருப்பிவிட்டால் தங்களுடைய ஆதர்ச பிரதேசங்களான பாகிஸ்தான், ஆப் கானிஸ்தான் எல்லை பகுதியை தங்கள் முழுக்கட்டுப் பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று நம்புகின்றன இந்த சக்திகள். இந்த சக்திகளின் சதிக்கு  புதுடெல்லியும் இஸ்லாமாபாத்தும் பலியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதே இன்றைய காலத்தின் முக்கியமான செயல் ஆகும்'' என்கிறார் விரிவாக.

-மனோசௌந்தர்

ad

ad