புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2013


இலங்கைப் படையினர், தமிழ்ப்பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதலை நிறுத்துமாறு மிச்செய்ல் ஒபாமாவிடம் கோரிக்கை
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பெண்கள், படையினரால் பாலியல் துன்புறுததல்களுக்கு உள்ளாக்கப்படும் விடயத்தில் தலையிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாரியாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக அமெரிக்க இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது கோரிக்கையை வலியுறுத்தி தாம், மிச்செய்ல் ஒபாமாவுக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இலங்கையின் வடக்குகி ழக்கில், சுமார் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் போரின் போது தமது கணவர்களை இழந்துள்ளனர்.
வறுமை, மற்றும் உதவிகள் இன்றி ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் உள்ளனர்.
இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி வாழ்ந்து வருகின்றனர்.
தமது பிள்ளைகளுக்கு உரிய கல்வி வசதிகளை செய்து கொடுப்பதில் தமிழ்ப் பெண்கள் சிரமங்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே அவர்களின் விடயத்தில் தலையிட்டு அவர்களுக்கு நியாயம் தேடிக் கொடுப்பதுடன் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த உதவ வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மிச்செய்ல் ஒபாமாவிடம் கோரியுள்ளது.
அத்துடன், தமிழப்பெண்களிடம் உணவுக்காக காமத்தை கோரும் அளவுக்கு இலங்கைப் படையினர் செயற்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் போரின்போது பெண்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டனர் என்று அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன், கடந்த காலத்தில் வெளியிட்ட அறிக்கையையும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ad

ad