புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2013


கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இலங்கையில் தற்காலிக தடை! கெஹலிய அறிவிப்பு
கமலஹாசன் தயாரித்து நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு இலங்கையில் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.  அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல இதனை அறிவித்துள்ளார்.
கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமையால் அதனை இலங்கையில் தடைசெய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் ‘விஸ்வரூபம்’ திரைப்பட விளம்பர சுவரொட்டிகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படமும் கமலஹாசனின் படமும் இணைந்து காட்சிப்படுத்தப்பட்டமையை இலங்கையின் சிங்கள ஊடகங்கள் பெரிதுபடுத்தி செய்திகளை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கைத் துறையும் கூறியுள்ளது.
இருப்பினும் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று  இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.

ad

ad