புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2013


இலங்கையில் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க அரசு முயற்சி! தடுக்குமாறு மன்மோகன், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்
இலங்கையில் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க நடைபெறும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக் கோ‌ரி தி.முக. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் கடித‌ம் மூல‌‌ம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொட‌ர்பாக கருணா‌நித‌ி எழு‌தியு‌ள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ் மொழி, கலாச்சாரம், மதம் போன்றவற்றை அழிக்க, இலங்கை அரசு திட்டமிட்ட முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கிராமங்களின் பெயர்களை மாற்றி சிங்கள பெயர்களை சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றியமைத்தல், இந்து கோவில்களை இடித்தல் போன்ற வேலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக அதில் அவர் குற்றம்சா‌ட்டியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள கருணாநிதி, தமிழர்கள் ஒடுக்கப்படுவதை வெளிப்படுத்தும் பல்வேறு புள்ளி விவரங்களையும் அந்த கடிதத்தில் கருணாநிதி இணைத்துள்ளார்.
அதில், 89 தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்கள மொழியில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள திருக்கோவில் என்ற கிராமத்தின் பெயர் ஸ்ரீகோவிலா என்றும், குடும்பிமலையின் பெயர் தொப்பிகல என்றும் மாற்றப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் நெருக்கமாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகப் பெரிய கலாச்சாரத்தையும், பழமைவாய்ந்த மதத்தையும் அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக கருணாநிதி தனது கடிதத்தில் குற்றம்சா‌ட்டியுள்ளார்.
எனவே, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் இந்தக் கொடுமைகளை உடனே தடுத்து நிறுத்தும் தார்மீக கடமை இந்தியாவுக்கு உள்ளதாகவும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

ad

ad