புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2013


உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடமைகளுடன் சிராணி வெளியேற்றம்! ஆவணங்கள் பதிவாளரிடம் கையளிப்பு
ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சொந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கொழும்பு றோயல் பார்க்கிலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
சிராணியிடமிருந்து ஆவணங்களை பெற்றுச்சென்றார் உயர்நீதிமன்ற பதிவாளர்
கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் சென்ற உயர்நீதிமன்ற பதிவாளர், அங்கிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிடமிருந்து ஆவணங்கள் சிலவற்றைப் பெற்றுச் சென்றுள்ளார்.
மேற்படி ஆவணங்கள், முன்னாள் பிரதம நீதியரசரினால் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டிய உத்தியோகபூர்வ ஆவணங்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad