புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


எம்.பி சிறிதரன் லாப்டொப்பில் ஆபாச வீடியோவாம் ATHIRVU-PHOTOS
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறிதரன் அலுவலகத்தில் சி- 4 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது தானே நீங்கள் அறிந்த விடையமாக இருக்கும். ஆனால் புதுக் கதையும் இதனுடன் அதற்போது இணைக்கப்பட்டுள்ளது. அதாவது சிறிதரன் அலுவக வெடிகுண்டு பாட் - 2 (பாகம் 2) 


அதிர்வு இணையத்துக்கு அனாமதேயமாக அனுப்பப்பட்ட மின்னஞல் ஒன்றில் 25 புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. வன்னியில் கலாச்சார சீரழிவுக்கு, எம்.பி சிறிதரனே காரணம் என்ற தலைப்பிடப்பட்ட இந்த மின்னஞ்சலில் பல படங்கள் உள்ளது. நேற்றைய தினம், (சனிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு எம்.பி சிறிதரன் அவர்களின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது என்பது யாவரும் அறிந்த செய்தி. ஆனால் அங்கே சோதனை நடைபெறும்போது, ஒருவர் புகைப்படத்தையும் எடுத்துள்ளார். குறிப்பிட்ட அந் நபரே, அதனை அனுப்பியிருக்கவேண்டும். செய்திகளை அனுப்பினால், கண்மூடித்தனமாகப் பிரசுரிக்கும் இணையம் என எண்ணி, எமக்கு புகைப்படங்களை அனுப்பிவிட்டார்கள் ! வெடிமருந்து புரளி ஒருபுறம் இருக்க, எம்.பி சிறிதரன் அவர்கள் தான், இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைய உறுதுணையாக இருந்தார் என்றும், அதுக்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தை அவர் பிரிவ்கேசில் கண்டெடுத்ததாகவும் மின்னஞ்சலில் எழுதப்பட்டுள்ளது. இவற்றை நம்ப எவரும் தயார் இல்லை !

சோதனை நடைபெற்ற வேளை எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாம் இங்கே இணைத்துள்ளோம். அதில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர், கைகலில் CD ஒன்றை எடுக்கிறார்கள். பின்னர் அங்கே இருக்கும் லாப்டொப்பில் அதனைப் போடுகிறார்கள். உடனே ஆபாசப்படங்கள் தெரிகிறது. அதனை புகைப்படம் எடுத்து எனுப்புகிறார்கள். இது தான் ஆதாரமாம். மேலும் மரணத்தில் துளிர் விடும் கனவு என்னும் நூல், மற்றும் தேசத்தின் குரல் நாழிதழ் என்பன அங்கே காணப்பட்ட, பிரீவ்-கேசில் இருந்தது என்று புலனாய்வுத் துறையினர் கூறியுள்ளார்களாம். தமிழ் ஈழ உணர்வுகளை பிரதி பலிக்கும் இன் நூல்லையும், பத்திரிகையையும் , தவிர மிகுது அனைத்துமே சோடிக்கப்பட்ட ஆதாரங்களே. இலங்கை அரசாங்கத்தின் குறி தற்போது எம்.பி ஸ்ரீதரன் பக்கம் திரும்பியுள்ளது என்பது நன்கு புலனாகிறது. இதில் மிகவும் வேடிக்கையான விடையம் என்னவென்றால், அலுவலகத்தில் காணப்பட்ட பிரீவ் -கேசில், பல காண்டம் பக்கெட்டுகள் காணப்பட்டதாகவும் இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது தான் !























ad

ad