புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2013

பிரபல பாப் இசை பாடகியான ஷகீராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் தந்தை என்று கால் பந்தாட்ட வீரர் ஜெர்ராடு பிக்கை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர் ஷகீரா இஸபெல் மிபாரக் ரிபோல். பிரபல பாப் இசை பாடகியான இவர் நடனம், இசை கருவிகளை இசைப்பது என்று பன்முக கலைஞராக இருந்து வருகிறார்.

இவர், 2000ம் ஆண்டு பாடிய “இடுப்பு பொய் சொல்வதில்லை (ஹிப் டோண்ட் லை)” என்ற பாடலை பாடி பிரபமடைந்தவர்.
35 வயதான இவர் ஆன்டோனியா டி லா ருயா என்பவரை கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து 11 ஆண்டுகளுக்குப் பின்பு அவரை விட்டு பிரிந்தார். தற்போது, ஸ்பெயின் நாட்டு கால் பந்தாட்ட வீரரான ஜெர்ராடு பிக் என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஷகீராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இணையதளத்தில் அவர் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
குழந்தை பிறந்ததற்காக எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதை விட ஏழை எளிய குழந்தைகளுக்கு கொசுவலையும், உயிர் காக்கும் மருந்துகளும் வழங்குபடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரசவ நேரத்திலும் தனது ரசிகர்கள் மூலம் சமூக சேவையாற்ற ஷகீரா முன்வந்துள்ளதை அவரது ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

ad

ad