புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2013


துறையூர் : மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஆசிரியர்

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வேங்கடத்தானூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு அறிவியல் ஆசிரியராக சுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் மீது மாவட்ட கல்வி அதிகாரி ஜெயக்குமாருக்கு பாலியல் தொல்லை தொடர்பாக பல புகார்கள் வந்தன.

அதன்பேரில் விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரி ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து காஜா மாலை மகளிர் மன்ற தலைவர் பாத்திமா மன்னன் தலைமையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் துறையூர் லதா, அந்தநல்லூர் ஈவ்லின் ஜெனட், மணப்பாற பரிமளா, தா.பேட்டை மாலதி, மணி கண்டம் ஸ்டேன்லி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை பள்ளிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
5 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்களும், திடுக்கிடும் சம்பவங்களும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
விசாரணையை முடித்து விட்டு வந்த அதிகாரிகள் கூறியதாவது:- இந்த நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் சுந்தரம் மீது வரப்பெற்ற புகார்கள் என்று உண்மை என்று தெரிய வந்துள்ளது. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும் ஆபாச வார்தைகளை அவர் பேசி வந்துள்ளார்.
மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், மாணவி ஒருவரை பார்த்து, நீ மிகவும் செக்சியாக இருக்கிறாய் என்று கூறி வகுப்பறையிலேயே முத்தம் கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது. தொடர்ந்து அவர் செய்து வந்த பாலியல் தொல்லை குறித்து அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சுந்தரம் மீது 4 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பள்ளியை மூடி போராட்டம் நடத்துவோம் என்று பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் திருவேங்கடத்தானூர் கிராமத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad