புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013




         சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேசன் ஒளிபரப்பை சென்னையிலும் துவக்க முடிவெடுக்கப்பட்டு சமீபத்தில் இதற்கான தொடக்க விழாவை துவக்கி வைத்தார் ஜெயலலிதா.

சென்னையில் டிஜிட்டல் ஆக்ஸஸ் சிஸ்டம் அமல்படுத்த வேண்டும் என்கிற மத்திய அரசின் உத்தரவு இருப்பதால், இதற்கான அனுமதியை கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால், இந்த அனுமதியை மத்திய அரசு நிராகரித்துள்ள நிலையில் மத்திய அரசோடு மோதிக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.nakeran

கேபிள் டி.வி. டிஜிட்டல் உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய கேபிள் டி.வி. வட்டாரங்களில் ஒரு ரவுண்ட் அடித்தோம். கேபிள் டி.வி. உரிமையாளர்கள் பொதுநலச் சங்கத்தின் தலைவர் சகிலனிடம் நாம் விவாதித்த போது,’’""சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய 4 பெரு நகரங்களிலும் கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. டிஜிட்டல் ஒளிபரப்பை செட்-அப் பாக்ஸ் மூலம்தான் ஒளிபரப்ப முடியும். டிஜிட்டல் ஆக்ஸஸ் சிஸ்டத்தின்படி ஒளிபரப்பு செய்ய சென்னையில் 8 நிறுவனங்களுக்கு உரிமம் (லைசென்ஸ்) தந்திருக்கிறது தகவல்- தொழில் நுட்ப ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய். இந்த நிலையில், அரசு கேபிள் டி.வி.யை சென்னையிலும் நடத்த விரும்பும் தமிழக அரசு, இந்த லைசென்ஸை கேட்டு ட்ராய்க்கு விண்ணப் பித்திருக்கிறது. ஆனால், அதனை நிராகரித் திருக்கிறது ட்ராய். காரணம், கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபடக்கூடாது என்பது ட்ராயின் விதிமுறைகளில் ஒன்று. கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையில் மாநில அரசு ஈடுபட் டால் அது மட்டுமே இயங்கக்கூடிய நிலையை ஏற்படுத்துவர். தனியார் நிறுவனங்கள் இந்த சேவையை ஒளிபரப்ப முடியாத ஒரு சூழல் உருவாகும். அந்த நிலை உருவானால் ஆளும் கட்சி தொடர்பான செய்திகள் மட்டுமே மக்களுக்குப் போய்ச்சேரும். உண்மைச் செய்திகளுக்கு தடை விழும். மீறும் சேனல்கள் மிரட்டப்படும் அல்லது அவர்களது ஒளிபரப்புகள் துண்டிக்கப் படும் என்கிற நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாது. இந்நிலை தொடரும்போது கருத்துரிமை பெரிய அளவில் பாதிக்கப்படும். அதனால்தான் அதை மனதில்கொண்டு கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையில் அரசுகள் ஈடுபட லைசென்ஸ் தரக்கூடாது என்பதற்கேற்ப விதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது ட்ராய்''’ என்கிறார்.

ஆனால், இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் விதிகளை திருத்தி அமைக்குமாறு மத்திய அரசிடமும் ட்ராயிடமும் கோரிக்கை வைப்பதற்குப் பதிலாக, தங்களது குடும்ப தொலைக்காட்சிகளின் நலன்களுக்காகவே அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசனுக்கு அனுமதி தரக்கூடாது என்று மத்திய அரசை தி.மு.க. நிர்பந்திப்பதாக ஒரு குற்றச்சாட்டை வீசியிருக்கிறார் ஜெயலலிதா. 

இந்த குற்றச்சாட்டு குறித்து தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழக னிடம் கேட்டபோது,’""மத்திய அரசு எதைச் செய்ய மறுத்தாலும் அதற்கு தி.மு.க. தான் காரணம் என்று சொல்வதை ஜெயலலிதா வழக்கமாகவே வைத்திருக்கிறார். அப்படி சொல்ல வேண்டுமென்பது அவருக்குள்ளே இருக்கும் ஒரு மனோவியாதி. தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதும் இதற்கான அனுமதியைக் கேட்டபோது விதிகளை சுட்டிக்காட்டி லைசென்ஸ் தர மறுத்தது ட்ராய். உண்மை அப்படியிருக்க, ட்ராய் எடுக்கும் முடிவுகளுக்கெல்லாம் தி.மு.க. எப்படி பொறுப்பாகும்? ஜெயலலிதாதான் தனது பெயரில் இயங்கும் தொலைக்காட்சி நலன்களுக்காக அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை பயன்படுத்துகிறார். அதாவது, ஆட்சிக்கு வந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை ஜெயலலிதா துவங்குவதற்கு முன்புவரை ஜெயா தொலைக்காட்சிகள் அனைத்தும் இலவச சேனல்களாகவே ஒளிபரப்பு செய்யப்பட்டன. அந்த நிறுவனம் துவக்கப்பட்டதும் ஜெயா தொலைக்காட்சி சேனல்கள் அத்தனையையும் கட்டண சேனல்களாக மாற்றியவர் ஜெயலலிதா. அப்படி மாற்றியமைக்கப்பட்டதும் கேபிள் டி.வி.கார்ப்பரேசனோடு ஜெயா டி.வி. ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, மாதம் மாதம் பல லட்சங்களை ஜெயா டி.வி. நிர்வாகத்துக்கு கேபிள் டி.வி. கார்ப்பரேசன் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இப்படி கொள்ளையடிப்பதற்காகவே அரசு கேபிள் டி.வி.யை துவக்கியிருக்கிறார். அவரது கொள்ளையை மறைக்க தி.மு.க. மீது இல்லாத பழியைப் போடுகிறார். இப்படிச் சொல்வது அவருக்கு எப்போதும் கை வந்த கலைதான். ஆட்சியில் இருந்த போதும் சரி, இல்லாத  போதும் சரி... கலைஞர் டி.வி. இலவச சேனலாகவே ஒளிபரப்பாகிறது. அதனால் யார் கொள்ளையடிப்பது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்''’என்கிறார் அழுத்தமாக.

மேலும் இது குறித்து தகவல்-தொழில்நுட்பத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது,’’""கட்டணச் சேனல்களாக மாற்றப்பட்ட ஜெயா தொலைக்காட்சி சேனல்களுக்கு மாதம் 90 லட்ச ரூபாயை கொடுத்துக்கொண்டிருக்கிறது அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேஷன். அதேசமயம் சேனல்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் சேவைக்காகவும் அலை வரிசை இட ஒதுக்கீட்டிற்காகவும் ஒவ்வொரு சேனலிடமிருந்தும் ஒரு தொகையை கேபிள் டி.வி. கார்ப்பரேசன் வசூலிக்க வேண்டும். இதை வசூலிப்பதில் மற்ற சேனல்  களிடம் கெடுபிடி காட்டும் நிர் வாகம், ஜெயா டி.வி.யிடம் மட்டும் கெடுபிடி காட்டுவதில்லை''’’ என்று சுட்டிக் காட்டியவர்கள்,’ ""ட்ராயிட மிருந்து லைசென்ஸ் பெற்ற பிறகே கேபிள் டி.வி. கார்ப்பரேசனை துவக்கியிருக்க வேண்டும். 

அதை செய்யாமல், செட்-அப் பாக்ஸ் கொள்முதல்களுக்காக பல்வேறு தில்லு முல்லுகளை செய்து வருகின்றனர் கேபிள் டி.வி. நிறுவனத்திலுள்ள அதிகாரிகள். குறிப் பிட்ட சிலரில் லாபங்களுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறது அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்''’ என்கிறார்கள் அதிகாரிகள்.

-ஆர்.இளையசெல்வன்

ad

ad