புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2013



சென்னையில் ராமதாசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம்: கல்வீச்சு - பதட்டம்

 பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தியாகராய நகரில் இன்று அனைத்து சமூதாய தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


சிவாஜி கணேசன் சாலையில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் இன்று காலை கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்ககளை தவிர்க்க உதவி கமிஷனர் தமிழ்செல்வன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


காலை 11.30 மணி அளவில் போக் ரோடு சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், திராவிடர் விடுதலை கழகத்தினரும் திடீர் என்று திரண்டு வந்தனர். ராமதாசின் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடி கோஷங்களை எழுப்பினர். அவர்களை மண்டபம் பகுதிக்கு சென்று விடாமல் போலீசார் சாலையின் நடுவே அரண்போல நின்றனர்.

இதுபற்றி கேள்விப்பட்டதும் மண்டபத்தில் இருந்த பா.ம.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் வெளியில் வந்தனர். எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தும் இடத்தை நோக்கி அவர்கள் ஓடினர். இதனால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

உடனே போலீசாரில் ஒரு பகுதியினர் பா.ம.க.வினரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டிருந்த பகுதியில் இருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.

இதில் மணிபாரதி என்ற போலீஸ்காரரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக துணியால் அவரது தலையில் கட்டிய போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோர் விரைந்து வந்து பா.ம.க வினரை சமாதானப்படுத்தி மண்டபத்துக்குள் அழைத்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி, திராவிடர் விடுதலை கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை போலீசார் வேனில் ஏற்றி வேறு இடத்துக்கு கொண்டு சென்றனர். போராட்டங்கள் முடிந்த பின்னரே ராமதாஸ் கூட்டத்துக்கு வந்தார். இதன் பின்னர் கூட்டம் நடைபெற்றது.

ad

ad