புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2013


தமிழ் பாடசாலைகளின் சிங்களம் கற்பிக்க இராணுவத்தை அனுமதித்து, மறுக்கப்பட்டமையின் பின்னணியில் மர்மங்கள் : சுட்டிக்காட்டிய ஆசிரியர்கள்


கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகளின் சிங்களம் கற்பிப்பதற்கு படையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பின்னணியில் மர்மமான பல காரணங்கள் பல இருப்பதாக சில ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
கடந்த 3ம் திகதி முதல் கிளிநொச்சி கல்வி வலயத்தில் சுமார் 103 ஆசிரியர்கள் தமிழ் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையினைத் தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென அந்த அனுமதி மறுக்கப்பட்டதாக, ஈ.பி.டி.பி யினால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை விடுத்திருந்தது.
இதேபோல் படையினருக்கு வழங்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டதற்கு காரணமானவர் அமைச்சர் டக்ளஸ் எனவும் அவர்கள், சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஆனால் இவ்வாறு படையினருக்கு அனுமதி வழங்கப்பட்டால் வடக்கில் மிகப் பரந்தளவில் போராட்டங்களை நடத்துவோம், இதற்கான அரசாங்கம் வருத்தப்படு ம் நிலையேற்படும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறீதரன், சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்தும் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வந்திருந்தனர்.
இதன் பின்னணியிலேயே இந்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதுடன், இந்த நிறுத்தம் தற்காலிகமானதாகவே அமைந்துள்ளது.
அதாவது இந்தப் பிரச்சினையினை கல்விப் புலத்திலிருந்து யாரெல்லாம் எதிர்க்கிறார்கள், யாரெல்லாம் விடயத்தை வெளியே கொண்டுசெல்கின்றார்கள் என்பதை அவதானிப்பதற்கே படையினர் இந்த தற்காலிக இடைநிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள் பலர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்நிலையில் இராணுவத்தினரின் கற்பித்தல் செயற்பாடு வடக்கில் தமிழர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது எனவும் சில ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகத்தினால் நடத்தப்பட்ட தமிழ் மொழி கற்கையை முடித்துக் கொண்ட 1484 இராணுவ வீரர்களுக்கு அண்மையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சியிலுள்ள பாரதிபுரம் உயர் காலாற் படை பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் 36 இராணுவ உயர் அதிகாரிகளும், 1484 வீரர்களும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா சான்றிதழ்களை வழங்கி வைத்தார் எனவும் அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

ad

ad