புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2013




            மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், பரபரப்புக்குக் குறைவில்லாமலே நடந்து முடிந்திருக்கிறது.

டிசம்பர் 31-ந் தேதி சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு வெங்கடேஷ்வரா பேலஸ் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் ஜெ.

கடந்த ஆண்டும் டிசம்பரில்தான் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது சசிகலா வும் அவரது உறவினர்களும் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட நேரம் என்பதால், அப்போதும் எதிர்பார்ப்பு இருந்தது. செயற்குழுவில் இருந்தும் அப்போது சசி நீக்கப்பட்டார். அப்போது பொதுக் குழுவில் பேசிய பி.ஹெச்.பாண்டியன், ""அம்மா கட்சியைக்கட்டிக் காத்து வளர்த்து வைத்திருக்கிறார். அதில் கருநாகம் புற்றெடுக்க, கரையான் வந்து குடி யேறிய கதையாய் குடியேறியவர்கள், இப்போது காணாமல் போய்விட்டார்கள்''’என்று பெருமிதப் பட்டார்.

இப்போது மீண்டும் சசிகலா கார்ட னுக்கு வந்திருப்பதால் அவரை ஜெ., பொதுக்குழுவிற்கு அழைத்து வருவாரா? மீண்டும் சசி செயற்குழு உறுப்பினராக அறிவிக்கப்படுவாரா? என்றெல்லாம் ஜெ.’வரும்வரை ர.ர.க்கள், தங்களுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தனர்.

பொதுக்குழுவிற்கு வரும் ஜெ.வை வரவேற்க, கார்டனில் இருந்து வானகரம் வரை வழி நெடுக விளம்பரப் பலகைகளையும், கொடி தோரணங்களையும் கட்டியிருந்தனர். சரியாக 10 மணிக்கு ஜெ.’மட்டும் தனியாக காரில் வந்து இறங்க, ர.ர.க்களின் விழிகள் வியப்பால் விரிந்தது. 


மேடையில் ஜெ.வோடு மதுசூதனன், பொன்னையன், பி.ஹெச்.பாண்டியன், ஓ.பி.எஸ்., வளர்மதி, விசாலாட்சி நெடுஞ்செழியன் போன் றோர் அமர்ந்தனர். முதலில் செயற்குழு கூடு கிறது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த கொஞ்ச நேரத்தில் பொதுக்குழு தொடங்குவ தாக அறிவித்தனர். எடுத்த எடுப்பிலேயே, தயார் செய்யப்பட்ட தீர்மானங்களில் முதல் 15 தீர்மானத்தை மாநில மாணவரணி செயலாளர் உதயகுமார் வாசித்தார். அதில் சில்லறை வர்த்த கத்தில் அன்னிய முதலீட்டைக் கொண்டுவரும் மத்திய அரசைக் கண்டிக்கும் தீர்மானம், தமிழகத்தில் தயாராகும் மின்சா ரத்தை தமிழகத்துக்கே கொடுக்க வலியுறுத் தும் தீர்மானம் போன்றவை இருந்தன.

அடுத்த 10 தீர்மானத்தைப் படிக்க வந்த செம்மலை, ""டெல்லிக்கு நான் போகும் போதேல்லாம் அங்குள்ளவர்கள் அம்மா வைப் பற்றித்தான் விசாரிப்பார்கள். அவர் களிடம் நான்... "அம்மா மூளையால் மட்டு மே முடிவுகளை எடுப்பவர் இல்லை. அவர் இதயத்தாலும் முடிவுகள் எடுப்பவர்' என்று சொல்வேன்''’என ஜெ.வின் மனதைக் குளிர வைத்துவிட்டு தீர்மானத்துக்குப் போனார்.

அவர் தீர்மானத்தைப் படிக்கத் தொடங்கியபோது சட்டென ஜெ.’எழுந்தார். சரசரவென பின்பக்கமாக இறங்கி ரெஸ்ட் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். உடனே பாதுகாப்புப் படையினரும் எழுந்து அவரை நோக்கி ஓட ஆரம்பித்தனர். இதனால் மேடையில் இருந்த பிரமுகர்கள் திகைத்துப் போனார்கள். பெரிய திரையில் மேடை நிகழ்வை ஒளிபரப்பிய கேமரா, ஜெ.’இல்லாத மேடையைக் காட்ட இயலாமல் செம்மலை யின் பக்கமே திரும்பிவிட்டது.

தமிழக அரசின் கேபிள் டி.வி.க்கு டி.ஏ.எஸ். உரிமத்தை வழங்காத மத்திய அரசைக் கண்டித்து அவர் தீர்மானத்தைப் படித்தபோது கூட, கைத்தட்டல் இல்லை. 25-வது தீர்மானமாக ""வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் அல்லும் பகலும் பாடுபட்டு வெற்றிக்கனியைப் பறித்து, அதை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப் போம்''’என்று அவர் படித்தபோது மீண்டும் மேடைக்கு வந்த ஜெ.,’அந்தத் தீர்மானத் துக்குத் தானும் கை தட்டினார்.

கட்சியின் பொருளாளர் என்ற முறை யில் வரவு-செலவு கணக்கைப் படிக்கவந்த ஓ.பி.எஸ். ‘""நம்மோடு கூட்டணிவைத்த ஒருவர், இப் போது செல்லாத காசான தீயச் சக்தியோடு கூட்டணி வைத்துக்கொண்டு நடுத்தெருவுக்கு வரப்போகிறார்''’என்று ஜெ.வின் முகத்தில் சிரிப்பை பொங்க வைத்துவிட்டு ‘""அ.தி.மு.க.வின் வங்கிக் கணக்கில் இப்போது டெபாஸிட்டாக இருப்பது 118 கோடி. அதற்கு வட்டியே 9 கோடி வருகிறது'' என்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். "இது எப்படி?' என ஒரு சீனியர் ர.ர.விடம் நாம் கேட்டபோது, ""சிலரிடம் வசூல் பண்ணியதையெல் லாம் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் ஐடி யாப்படி கட்சிக் கணக்கில் டெபாஸிட் பண்ணிட் டாங்க. கட்சிக் கணக்கில் வரவு வைத்தால் அதுக்கு வரியும் கிடையாது''’என்று நம் காதில் கிசுகிசுத்தார்.

கருப்புத் துண்டோடு பகுத்தறிவாளராக காட்சி தந்துவந்த நாஞ்சில் சம்பத்... நெற்றியில் சந்தனப்பொட்டு, திருநீறு என பக்திப்பழமாய் மாறி மேடையேறினார். ""யசோதை வானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் அருகே கண்ணன் படுத்திருக்கிறான். அப்போது யசோதை நிலாவைப் பார்த்து "உன்னைச் சுற்றி ஒளியும் ஒளிவட்டமும் இருக்கிறது என்று கர்வப்படாதே. அதைவிடவும் ஒளி வீசும்படி எங்கள் கண்ணனின் திருமுகம் இருக்கிறது' என்றாள். அதேபோல் கடும் புயலுக்கு மத்தியிலும் சோதனைகளுக்கு மத்தியிலும் பிரகாசிக்கிறார் அம்மா''’என சிலாகித்தார்.


அடுத்து மைக்முன் வந்த வளர்மதி, விஜயகாந்த்தையே இலக்காக வைத்துக்கொண்டு தாக்குதலை ஆரம்பித்தார். ""அந்தக் காட்டெருமைக் குக் கடிவாளம்போட்டு அம்மாதான் நாட்டுக்கு இழுத்து வந்தார். இப்பதான் தெரியுது அது பன்றின்னு...''’என்று டாப் கியருக்குப் போனார்.

கே.பி.முனுசாமியோ, ""அறிஞர் அண்ணா ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடறேன்னு சொன் னார். அதை அவராலேயே நிறைவேத்த முடியலை. 2011 தேர்தலின்போது அம்மா 54 வாக்குறுதிகளைக் கொடுத்தாங்க. அந்த 54-ஐயும் அம்மா நிறைவேற்றிவிட்டார்''’என்று உற்சாகம் காட்டினார்.

அமைச்சர் வைத்திலிங்கம் ""மத்தியில் காங்கிரசும் வராது. பா.ஜ.க.வும் வராது. இடையில் யாராவதுதான் வருவாங்கன்னு அத்வானியே சொல்லிக்கிட்டிருக்கார். குறைந்தபட்சம் 40 எம்.பி.க்களை வைத்திருக்கக் கூடிய மாயாவதி, மோடி, நிதிஷ்குமார், மம்தா, முலாயம்சிங் இவங்களை எல்லோரும் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா மாயாவதியை முலாயம் ஒத்துக்கமாட்டார். மோடியை நிதிஷ்குமார் விடமாட்டார். மம்தாவை இடதுசாரிகள் விடமாட்டாங்க. அப்படிப் பார்த்தா அம்மாதான் அடுத்த பிரதமர். இதை எல்லோருமே ஏத்துக்குவாங்க''’என்று கூற... ஜெ.’முகத்தில் பூரிப்பான பூரிப்பு. 

நிறைவாக மைக் முன்வந்த ஜெ., ""இந்தமுறை நாம் தனித்து நிற்கப் போகிறோம். காங்கிரஸையும் நாம் நம்பப் போவதில்லை. பா.ஜ.க.வையும் நாம் நம்பப் போவதில்லை. எனவே தனித்து நின்று நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியையும் நாம் கைப்பற்ற வேண்டும். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்று எம்.ஜி.ஆர். பெயரை வைத்தாலும் இப்போது தான் இந்தக் கட்சி உண்மையான அகில இந்தியக் கட்சியாக மாறியிருக்கிறது. ஒரு பெண், இளமையில் தந்தையைச் சார்ந்து இருப்பாள். திருமணத்திற்குப் பின் கணவனைச் சார்ந்து இருப்பாள். முதுமையில் பிள்ளை களைச் சார்ந்து  இருப்பாள். எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நல்லதோ கெட்டதோ நானே எல்லாவற்றிலும் முடிவெடுக்கிறேன். இதை சரி என்று நான் சொல்லவில்லை. அது விதி. அது என் தலையெழுத்து''’என தன்னிரக்கத்தில் ஒரு கணம் மூழ்கியவர்...

‘கர்நாடகாவில் காங்கிரசும் பா.ஜ.க.வும் கைகோர்த்துக்கொண்டு தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் கொடுக்கக் கூடாது என்று அடம் பிடிக்கின்றன. இதற்காக காங்கிரஸைச் சேர்ந்த வீரப்ப மொய்லியும், எஸ்.எம்.கிருஷ்ணாவும் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் ஷெட்டரோடு சேர்ந்து போய் பிரதமரை சந்திக்கிறார்கள். ஆனால் இங்கே நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. டி.ஆர்.பாலு பிரதமரை சந்திக்கிறார். "காவிரி ஆணையத்தின் தீர்ப்பை அரசிதழில் போடவேண்டாம்' என்று சொல்கிறார்''’என பாலு மீது பழிபோட்டார். பின்னர் ’""86-ல் எம்.ஜி.ஆர். மருத்துவ மனையில் இருந்தபோது கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 17 லட்சம்தான். இப்போது அந்த எண்ணிக்கையை ஒரு கோடியே 50 லட்சமாக உயர்த்தியிருக்கிறேன். மின் பற்றாக்குறைக்கு யார் காரணம்? கருணாநிதிதான்''’என்று தாக்குதல் தொடுத்து விட்டு உட்கார்ந்தார்.

முக்கிய எதிர்க்கட்சிகளையெல்லாம் எதிர்த்து "தனித்துப் போட்டி' என்ற ஜெ.வின் முடிவை அ.தி.மு.க. முக்கியப் புள்ளிகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள கூட்டம் முடிந்தபின் சிலரிடம் பேச்சுக் கொடுத் தோம்.

அவர்கள் நம்மிடம், ""அவங்க ஒரு முடிவு எடுத்துட்டாங்கன்னா அதில் உறுதியா இருப்பாங்க. பணம் கொடுத்து எப்படியும் வாக்குகளை வாங்கிடலாம் என்பது அவங்க கணக்கு. ஓட்டுக்கு 3,000 ரூபாயில் இருந்து 4 ஆயிரம் ரூபாய்வரை கொடுப்பது அவங்க திட்டம். தேர்தலுக்குத் தேவையான பணத்தை மந்திரிகள் மூலமும் மற்றவர்கள் மூலமும் திரட்டியாச்சு. கட்சியிலும் நிதி நிறையவே இருக்கு. இப்ப பெரிசாப் பேசப்படும் மின்வெட்டுப் பிரச் சினை கூட காசுக்கு முன்னாடி எடுபடாமப் போயிடும். தீவிரமா எதிர்க்கட்சிகள் வரிஞ்சி கட்டிப் பிரச்சாரம் செஞ்சா, முக்கியப் புள்ளி களை அப்படியே தூக்கி உள்ள வச்சிடுவோம். அதனால் காந்தி படம் போட்ட கரன்ஸியை யும், போலீஸையும் வச்சிக்கிட்டே 40 தொகுதியிலும் நாங்க ஜெயிப்போம். எங்க வெற்றி, தீர்மானிக்கப்பட்ட வெற்றி. எலெக்ஷன் நேரத்தில் எங்க அதிரடிகளைப் பாருங்க'' என்றார்கள் வெகு நம்பிக்கையாய்.

இந்தப் பொதுக்குழு மூலம், தேர்தல் களம் நோக்கி ர.ர.க்களை கீ கொடுத்து ஓடவைத்திருக்கிறார் ஜெ.

-தாமோதரன் பிரகாஷ்
அட்டை மற்றும் படங்கள் : ஸ்டாலின்

ad

ad