புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2013


புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள்!: கெஹெலிய ரம்புக்வெல
இலங்கையில் அமைதியின்மையையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயலும் புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள் விழுந்துள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு இன்று பிற்பகல் தகவல் ஊடகத்றை அமைச்சில் நடைபெற்றபோதெ அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:
இலங்கையில் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட புலிகள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து தமது நிகழ்ச்சி நிரலின்படி இன்றுவரை செயற்பட்டுக் கொண்டுருக்கின்றனர்.
இலங்கையின் சிறு தவறுகளைத் தூக்கிப்பிடித்து அவற்றை சர்வதேச அரசியல்மயப்படுத்தி இலங்கையில் அமைதியின்மை ஏற்படுத்தவும் பிரிவினைக்கு வழிவகுக்கவும் தூபமிடுகின்றனர்.
நிதி வசூலிப்பு மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி வெளிநாட்டு அரசியல்வாதிகளை தமது வலையில் சிக்கவைத்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
எனினும் நாம் கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து மனச்சாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடனும் பொறுமையுடனும் செயலாற்றி வருகிறோம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

ad

ad