புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2013




     தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் அமைக்கப்பட்ட பென்னிகுயிக்கின் சிலையையும் மணி மண்ட பத்தையும் ஜெ.’ ஏக படாடோப மாகத் திறந்துவைத்திருக்கிறார்.

 மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் முன்பு பெரியாறு வழியாக கேரளா சென்று,  அங்கே விரய மாகக் கடலில் கலந்துகொண்டி ருந்தது. இதைப் பார்த்த ஆங்கி லேயரான கர்னல் ஜான் பென்னிகுயிக், முல்லைப் பெரியாறு அணையைத் தன் சொந்தக்காசில் கட்டி,  அந்த -நக்கீரன் 
மழைநீர் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளுக்கும் கைகொடுத்தார். எனவே பென்னிகுயிக்கை இந்த மாவட்டங்களின் விவசாயிகள், தங்களின் குலதெய்வம் போலவே கொண்டாடிவருகின்றனர்.  இதை உணர்ந்த ஜெ.’ பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், இந்த 5 மாவட்ட விவசாயிகளின் ஓட்டைக் குறிவைத்து பென்னிகுயிக் சிலையையும் மணி மண்டபத்தையும் உருவாக்கினார். கொட நாட்டில் இருக்கும் ஜெ.’ வழக்கம் போல் இதை வீடியோ கான் பரன்ஸ் மூலம் திறந்துவிடலாம் என்று கருதிய நாம், பென்னி குயிக்கின் பிறந்த நாளான ஜனவரி 15-ல் ஜெ.’ நேரில் சென்று திறப்பதுதான் பென்னிகுயிக்கிற்கு தமிழகம் செய்யும் பெருமை யாக இருக்கும் என்று கடந்த மாதம் 16-ந் தேதி நக்கீரனில் எழுதியிருந்தோம்.


இது ஜெ.’வின் கவனத்துக்குப் போக, ஜனவரி 15-ல் நேரில் வந்து பென்னிகுயிக் சிலையையும் மண்டபத்தையும் திறந்து வைக்கிறேன் என மாவட்ட நிர்வாகத்துக்குப் பச்சைக்கொடி காட்டினார். உடனே மாவட்ட நிர்வாகமும் ர.ர.க்களும் தடபுட லான ஏற்பாடுகளில் இறங்கினர். 500-க்கும் மேற்பட்ட ப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன.  பாதுகாப்பும் பலப்படுத்தப்பட் டது.  முல்லைப் பெரியாறு அணை விவ காரத்தில் தமிழக அரசோடு மோதல் போக்கைக் கடைப் பிடித்துவரும் கேரள அரசும், இந்த விழாவிற்கு எவ்வளவு விவசாயிகள் கூடுகிறார் கள் என்று  தனது உளவுத்துறையின ரை அனுப்பி கண்காணிப்பில் ஈடு பட்டது. ஆனால் முல்லைப் பெரியாறு போராட்ட அமைப்பினரோ, அதன் பாசன விவசாயி களோ இந்த விழாவில் கலந்துகொள் ளாமல் புறக்கணித்துவிட்டனர். 

ஏன் இப்படி? என முல்லைப் பெரி யாறு அணை மீட்புக்குழு தலைவரான ரஞ்சித்திடம் நாம் கேட்டபோது ""எங்க ளை மதித்து யாரும் அழைப்பைக் கொடுக்கலை. அதைவிடுங்க. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது ஏகப்பட்ட வழக்குகளைப் போட்டு இந்த அரசு அலைக்கழித்து வருது. இதை அரசு வாபஸ் வாங்கணும்ன்னு கோரிக்கை வச்சோம். அதை முதல்வர் ஜெ.’ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அவர் கட்சி தாவிகளான நாஞ்சில் சம்பத்து களுக்கு மட்டும்தான் இரக்கம் காட்டு வார் போலிருக்கிறது. விவசாயிகளான எங்களை கோர்ட்டுக்கு அலையவிடும் அரசை கண்டித்துதான் நாங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை''’ என்றார் காட்டமாக. ""விவசாயிகளின் கோபத்தை உணர்ந்த அமைச்சர்கள், கிராமம் கிராமமாக ஆட்களைப் பிடித்து, லோயர்கேம்பிற்கு வாகனங்களில் அள் ளிக்கொண்டு வந்தார்கள். ‘ஒவ்வொரு வார்டுக்கும் 2 வாகனம்ன்னு அனுப்பி னாங்க.. கூட்டத்துக்கு வர்றவங்களுக்கு ரெண்டு வேளை சாப்பாடும் கைச் செலவுக்குப் பணமும் தாராளமா கொ டுத்தாங்க. அதனால்தான் நாங்க மாட்டுப் பொங்கல்ன்னு கூடப் பார்க்காம உற் சாகமா வந்திருக்கோம்''’ -இது மதுரை யில் இருந்து வந்திருந்த மகளிரணி சந்திராவின் வாக்குமூலம்.


12 மணிக்குதான் விழா என்ற போதும் அதிகாலையில் இருந்தே கிராம மக்களை அழைத்து வந்து விழாப் பந்தலுக்குள் உட்காரவைத்துகொண்டே இருந்தனர்.  நேரம் ஆக ஆக ர.ர.க்களை கன்ட்ரோல் பண்ணமுடியாமல் காக்கிகள் திக்குமுக் காடினர். தொகுதி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் பெயரையும் கூடலூர் நகர சேர்மன் அருண்குமார் பெயரையும் அழைப்பிதழில் போடவில்லை என்று அவர்கள் தரப்பு ஆதரவாளர்கள் அதிருப்தி யில் இருந்தனர். இந்தத் தகவல் மேலே போக, அவர்கள் இருவரும் மேடையில் உட்காரவைக்கப்பட்டனர். இதே விழாவில் தமிழக அரசின் விருதுக்கு அறிவிக்கப்பட்ட தா.பாண்டியன் உள்ளிட்டவர்களும் ஜெ.’கையால்; விருதுபெறுவதற்காகக் காத்திருந்தனர். ஹெலிகாப்டரில் வந்த ஜெ.’ சரியாக 11.55-க்கு விழா மேடையருகே அமைக் கப்பட்டிருந்த ஹெலிபேடில்,  வந்து இறங்கினார். நேராக பென்னி குயிக்கின் சிலையையும் மணி மண்ட பத்தையும் திறந்துவைத்து விட்டு மேடை ஏறுவார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, ஜெ.’வோ நேராக மேடை ஏறினார். ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள் ஜெ.’வுக்குப் பல்லாண்டு பாடியும் கலைஞரைச் சாடியும் தங்கள் திருப்பணியை நிறைவுசெய்தனர். நிறைவாக மைக் பிடித்த ஜெ. முதலில் பென்னிகுயிக் பற்றி சொல்லத் தொடங்கினார். இதைகேட்டதும் கூட்டம் மெல்ல மெல்லக் கலையத்தொடங்கியது. ‘

ஜெ.’வோ ""முல்லைப்பெரியாறு அணை விவகாரத் தில் கேரள அரசை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக் கைத் தொடர்ந்திருக்கிறோம். நீதிமன்றம் நமக்கு சாதக மான தீர்ப்பை வழங் கும் என்று நம்பு கிறேன்.’ முல்லைப் பெரியாறு அணை யைக் கட்டிய பென்னி குயிக்கிற்கு மணி மண்டபம் அமைத்த தைப்போல் அடுத்து கல்லணையைக் கட் டிய கரிகால் சோழ னுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்'' என்று அறிவித்துவிட்டு, கடைசியாக சிலையையும் மணி மண்டபத் தையும் திறந்துவைத்துவிட்டு 2.45-க்கெல்லாம் கொடநாட்டுக்குப் புறப்பட்டுவிட்டார்.

இந்த விழாவில் தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் ஏககெடுபிடி காட்டிய அதிகாரிகள், மலையாள மனோ ரமா போன்ற பிறமொழி இதழ்களுக்கு மட்டும் ராஜமரியாதை கொடுத்தனர். ஆனால் இந்தவிழா பற்றி செய்தி வெளியிட்டிருக்கும் மலையாள மனோரமாவோ ‘ "பென்னிகுயிக்கிற்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது, அவர் கட்டிய அணையால் பயன்பெறும் 5 மாவட்ட விவசாயிகளின் ஓட்டுக்களைப் பெறுவதற்காகத்தான். அதுபோல் ஜெயலலிதா, தஞ்சை டெல்டா பகுதி  விவ சாயிகளின் ஓட்டுக்களைப் பெறுவதற்காகத்தான் கல்ல ணை கட்டிய கரிகால் சோழனுக்கும் மணிமண்டபம் கட்ட இருக்கிறார்'’ என்று ஜெ.’வின் பென்னிகுயிக் மற்றும் கரிகால் சோழன் ஆகியோர் மீதான பாசத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.  

ad

ad