புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2013


திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவித்தோர் தமிழர் உரிமை பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள்!- பாஸ்க்கரா
திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவித்த, குறிப்பாக சிறுபான்மை இனத்தைச் சார்ந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இனி வரும் காலங்களிலாவது சிறுபான்மை சமூகத்தின் உரிமை பற்றி பேசி சமூகத்தை ஏமாற்றுவதை கைவிடவேண்டும் என  கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆண்டாண்டு காலமாக தமது சொந்த நலனுக்காக அரசுடன் இருந்து தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் சிறுபான்மை இனக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சாதகமாக செயற்பட்டதன் பின் மக்கள் நம்பும்படி பசுப்பு வார்த்தைகளைத் தெரிவித்து வந்தது புதிய விடயம் அல்ல.
அதேவேளை மாகாண சபை தமிழ் பேசும் மக்களின் தீர்வோ அன்றி குறைந்த பட்ச சலுகையோ இல்லை என்ற வேளையிலும் அதில் உள்ள அட்பசொற்ப அதிகாரங்களையும் எடுப்பதற்கு ஆதரவு தெரிவித்தல் என்பது தமிழ் பேசும் மக்களின் தலைவிதி எப்படிப் போனாலும் தமது தலைவிதி நன்றாக இருந்தால் சரி என்ற நிலைப்பாட்டில் ஆதரவு தெரிவித்த சிறுபான்மை இனக் கட்சி உறுப்பினர்கள் உள்ளதை அவர்களின் செயல் தெட்டத்தெளிவாக மக்களுக்கு புடம்போட்டு காட்டுகின்றது.
எனவே இனிவரும் காலங்களில் ஆதரவு தெரிவித்த சிறுபான்மைக் கட்சிகள் தாம் தனித்துவத்துடன் இயங்குகிறோம், இல்லையேல் தமிழ் பேசும் மக்களின் உரிமை செயற்பாட்டை நாம் என்றும் காட்டிக்கொடுத்ததில்லை என்று அறிக்கை விட்டுக்கொண்டு தாமும் குழம்பி மக்களையும் குழப்பாமல் தாம் அரசு சார்பு நிலைப்பாடு என்ற ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் மக்கள் தமது செயற்பாடுகளை நிதானத்துடன் செயற்பட வசதியாகவும் உதவியாகவும் உலகத்திற்கு தெளிவான செய்தியை சொல்லவும் வசதியாக இருக்கும்.
தமிழ் பேசும் மக்களின் இரு மாகாணங்களில் ஒன்றாக அமையக் கூடிய கிழக்கு மாகாணத்தின் தேர்தல் காலத்தில் சொன்ன பசுப்பு வார்த்தைகளை நம்பி ஏமார்ந்த மக்கள் வடக்குத் தேர்தலை எதிர்பார்த்த வேளை, மாகாண சபையில் உள்ள அதிகாரத்தைக் குறைத்து பலாப்பழத்தில் உள்ள சுளைகளை எடுத்தபின் உள்ள தோல் சக்கையான நிலையே மாகாண சபைக்கு உள்ளது.
அதேவேளை திவிநெகும சட்ட மூலத்தை எதிர்த்தவர்களை இவ்வேளையில் பாராட்டாமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

ad

ad