புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2013



            ற்பழிப்புக் களுக்கான கார ணங்கள் குறித்து  சங்கராச்சாரியார் கள் கூட கருத்து சொல்ல ஆரம் பித்துவிட்டார்கள். பாலுணர்வும் பாலி யல் எண்ணங்களும் இல்லாத உயிர் களே இல்லை.  நம் தேசமோ பாலியல் பலாத் கார கைதுகளில் பரபரப்பாகிவிட்டது. டெல்லி nakkeeranமாணவியைப் பறிகொடுத்த பிறகுதானே இத்தனை வேகம். சட்ட நடவடிக்கைகளால் இதனை தடுத்துவிட முடியுமா? வக்கிரத்தை மனதுக்குள் சேகரித்தபடியே இருக்கும் மனிதர் கள் தண்டனைக்கு பயந்து,  தனிமனித ஒழுக்கத் தைக் கடைப்பிடித்துவிடுவார்களா என்ன? யதார்த்தமாகக் கேட்கும் இது போன்ற கேள்வி களும் கூட இங்கே சர்ச்சை ஆகிவிடுகிறது. ஆனாலும், "நம்மை ‘ஸ்கேன்’ செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறோம்'  என  தகிக் கும்  பொதுநல ஆர்வலரான தங்கம் “""வக்கிரக் குப்பைகள்தான் எங்கெங்கும் பரவிக் கிடக் கின்றனவே... அவை களை அப்புறப்படுத் தும் காரியங்களை அரசாங்கமோ, சமூக அமைப்புக்களோ முனைந்து செய்வதில் லையே...''’’ என்கிறார் ஆதங்கத்தோடு. 

வக்கிரக் குப் பைகள் எவை எவை? 


""டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் டெல்லி மாஃபியா என்ற பெயரில் திரைப்படம் ஆகிறது.  செய்தித்தாள்களில்  பதைபதைப்புடன் இதைப் படித்த எத்தனை பேர் திரையில் அந்தக் கற்பழிப்பு காட்சி வரும் போது சகிக்க முடியாமல் கண்களை மூடிக்கொள்வர்? நிச்சயம் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். மாறாக, காம உணர்வுகளே அப்போது அவர்களை ஆக்கிரமித் திருக்கும். இந்த நிஜம் சுடத்தான் செய்யும். இதற்கு கடந்த கால உதாரணங்கள் நிறைய இருக்கிறது.  1971-ல் வெளி யான ஹிந்தி திரைப்படம் "தோரஹா.' கற்பழிப்பு காட்சிக் கென்றே வசூலைக் குவித்தது. அப்படி ஒரு சினிமாவை தமிழில் எடுக்காமல் விட்டுவிடுவார்களா? இத்தனைக்கும் அந்தத் திரைப்படத்தின் கதைக்களம் தமிழ்க் கலாச்சாரத் துக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதது.  கணவனின் விருப்பத்துக்காக கேளிக்கை விடுதிகளில் மது அருந்திச் சீரழியும் கதாநாயகியின் பாத்திரம் அது. தமிழ் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடக்காவிட்டால் என்ன? வசூலைக் குவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, "அவள்' என்ற பெயரில் அது ரீமேக் ஆகி தமி ழகத்திலும் வெளி வந்தது.  வெண்ணிற ஆடை நிர்மலாவை டூ பீஸில் உரித்துக் காட்டினார் கள். இந்தப் படத்தில் வில்லன் வேடம் கட்டிய  ஸ்ரீகாந்த், தொடர்ந்து எத்தனை படங்களில் துகில் உரிகின்ற காட்சிகளில் நடித்தார் என் றெல்லாம் எண்ணிக்கொண்டிருக்க முடியாது.  ஆம்! அது கணக்கிலடங்காதது. தொடர்ந்து 1972-ல் ரிலீஸ் ஆன "கங்கா', "ஜக்கம்மா' போன்ற கர்ணனின்  ‘சீன்’ படங்களும் இளம் ரசிகர் களை திரை அரங்குகளுக்கு இழுத்தன.  

கற்பழிப்பு என்பது சினிமாவில் கமர் ஷியல் ஆகிவிட்ட நிலையில், கற்பழிப்பு காட்சி யில்லாத சினிமா வருவதே அப்போது அபூர்வ மாகிவிட்டது. 1973-ல் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிப'னிலும் அப்படி ஒரு காட்சி உண்டு. 1994-ல் ஹிந்தியில் ரிலீஸான "பாண்டிட் குயி'னில் அடுத்தடுத்து வரும் பாலியல் வன் முறைக் காட்சிகளும் அதை வெற்றிப் படமாக் கியது. " பருத்தி வீரன்' வரை இது தொடரத் தானே செய்கிறது. பாருங்களேன்... கவர்ச்சிகர மாக வால்போஸ்டர் ஒட்டி வக்கிரத்தை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் விற்பனை செய்கிறார் கள்? சப்புக் கொட்டி ரசிப்பதற்கு இங்கே பெருங் கூட்டம் இருப்பதை ஒத்துக்கொள்ளத் தானே வேண்டும்.  இவர்களெல்லாம் எங்கோ இல்லை. நம்மிடையேதான் இருக்கிறார்கள். 


அடப் போங்கப்பா... சினிமா என்ன சினிமா? சுண்டக்காய்... இப்ப யாரு கையில லேப் டாப் இல்ல, இண்டர்நெட் கனெக்ஷன் இல்ல. போன்லயே எல்லாத்தயும் பார்த்துட லாம். கொடூர ரேப் வெப்சைட்டெல்லாம் ஆயிரக்கணக்குல இருக்கு. அதை கோடானுகோடி பேரு பார்க்கிறாங்க. ஓ... இப்படியெல்லாம் நடக்கத்தானே செய்யுதுன்னு இதைப் பார்க்கிற பசங்க மனசு கெட்டுப் போயிடாதா? சீன் பார்த்துட்டுத்தான் ரேப் பண்ணு றாங்கன்னு சொல்லுறதுக்கில்ல. அதே நேரத்துல... இந்த மாதிரி வக்கிர புத்தி உள்ளவங்க வாய்ப்பு கிடைச்சா தப்பு பண்ணமாட்டாங்கன்னு சொல்லுறதுக்கு உத்தரவாதமில் லையே..? இது எல்லாத்தயும் விட மதுன்னு ஒரு விஷம் இருக்கே. அது உள்ளே போச்சுன்னா... எவன் எப்ப எதைப் பண்ணுவான்னு சொல்ல முடியாதே..? இப்படி தப்பு பண்ணுறதுக்கான அத்தனையும் குப்பை... குப்பையா இங்கே குவிஞ்சு கிடக்குது. அப்புறம்... கெட்ட சங்கதியெல்லாம் நடக்கத் தானே செய்யும்?'' -யதார்த்தத்தைச் சொல்கிறார் தங்கம். 

பாலியல் குற்றங்கள் குறித்த தகவல்களை அறிந்து வைத்திருக்கும் காளிராஜன்  “""சினிமாவிலோ, இணையத் திலோ ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் பல பெண்களுடன் உறவு கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை 1200 சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்கள் பலரும் பாலியல் தூண்டுதலுக்கு ஆளாகின்றனர். அவரவர் வீட்டிலும் சந்தோஷமான சமாச்சாரங்கள் நடந்தாலும், பலான சினிமாக்களையோ, போட்டோக்களையோ ரகசியமாகப் பார்ப்பதில் சுகம் காண்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் பலரும்.  உலகம் முழுவதும் 6 கோடி பேர் இலவச ஆபாச வெப்சைட்டுக் களைப் பார்ப்பதாகச் சொல்கிறார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த செக்ஸ் தெரபிஸ்ட். இவர்களில் மூவரில் இருவர், அதாவது 4 கோடி பேர் தங்கள் அலுவலகங்களிலேயே ஆபாச வெப்சைட்டுக்களைப் பார்க்கிறார்களாம். உலகம் இப்படி இருந்தால் எப்படி?''’என்று கேட்கிறார்.  

ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களா பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்?
""ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கிறார்கள். படுக்கை அறையில் இவர்களால்  முழுமையாகச் செயல்பட முடியாது என்றும், இது போன்ற காட்சிகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட செயலில்  வெளிப்படுத்த முடியாது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சரியாகச் சொல்வதென்றால், ஆபாசக் காட்சிகளைப் பார்த்துப்... பார்த்து மன ரீதியாக இவர்கள் களைத்துப் போய்விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டிவிடக் கூடிய ஹார்மோனான டோபமைன்,  ஆபாசப் படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்து உணர்ச்சிவசப்படுவோருக்கு அபரிமிதமாகச் சுரக்கிறது. டோபமைன் இப்படிச் சுரந்து சுரந்து... கடைசியில் உண் மையான இன்பத்தை அனு பவிக்கும்போது உரிய பலன்’ இத்தகையவர்களுக்கு கிடைக் காமல் போய் விடுகிறது'' என்கிறார் டாக்டர் பழனி யப்பா.  

பாலியல் வன்முறைகள் குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன. கிளம்சன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாட் கென்டல் ""பாலியல் வன்முறை களைக் குறைப்பதில் இன்டர்நெட்டுக்கு பெரும் பங்கு இருக்கிறது. மனதுக்குள் கிளர்ந்தெழும் ஆசாபாசங்களை இன்டர் நெட்டில் பார்த்தும், ஆபாச வீடியோ கிளிப்புக்களைக் கண்டு களித்தும் தணித்துக் கொள்கிறார்கள் பலர். இதனால், ஒரு பெண் வேண்டுமென்ற உணர்வே அவர்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது''’என்கிறார். அக்ரான் குடும்பக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் நிபுணரான கரன் சிமினியோ இதனை மறுக்கிறார். ""உண்மையில் ஆன்லைன் போர்னோகிராபியால் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன...''’என்று உறுதிபடச் சொல்கிறார். 

மனிதனாகப் பிறந்து மனம் தடுமாறி முரண்பட்டு நடப்பவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? 

‘பாலியல்  குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தருவதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.  ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்றான் வள்ளுவன். ஒவ்வொரு மனிதனும் தனக் குள்ளே சரி செய்ய வேண் டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. பாலியல் இச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்தி ஆக்கப்பூர்வ மான வழிகளில்  மனதைச் செலுத்த வேண்டும். நம் கலாச்சாரத்தை அழித் தொழிக்கும்  சமூகச் சீர்கேடு களைக் களைய முற்பட் டாலே போதும்.  பாலியல் குற்றங்கள் வெகுவாகக் குறைந்து விடும். 

-சி.என்.இராமகிருஷ்ணன்

 ஒரு புள்ளி விபரம்! 

"இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 24,206 பாலியல் வன்முறைகள் புகார்களாக பதிவு செய்யப்படுகின்றன.  ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன் புணர்ச்சிக்கு ஆளாகிறாள். இது போன்ற சம்பவங்களில் 94.2 சதவீதம் அந்தப் பெண்ணுக்கு வேண்டியவர்களாலேயே நடத்தப்படுகின்றன' என்கிறது என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்றவியல் பதிவுத் துறை.  இவற்றில் பெற்றோராலும், நெருங்கிய உறவினர்களாலும் நடப்பவை 1.2 சதவீதம். அக்கம் பக்கத் தினரால் நடப்பவை 34.7 சதவீதம். உறவினர்கள், நண்பர்களால் நடப்பவை 6.9 சதவீதம்.  பணியிடங்களில் மேலதிகாரிகளாலும், பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களாலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். காவல் நிலையம், மருத்துவ மனை, மகளிர் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள், தம்மிடம் அடைக்கலம் தேடி வரும் பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அத்து மீறுகின்றனர். தெருக்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் நடைபெறும் பாலியல் குற்றங்களைக் காட்டிலும், அறைக்குள் நடைபெறுபவையே அதிகம். பாலியல் வன்புணர்ச்சி குற்றச் சாட்டுக்களில் 26.4 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்ற வாளிகள் தண்டனை பெறுகின்றனர் என புள்ளி விபரம் தருகிறது என்.சி.ஆர்.பி.

ad

ad