புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013


ஐக்கிய நாடுகள் சபை, இலங்கைக்கு மீண்டும் எச்சரிக்கை
பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை, மனித உரிமை கடப்பாடுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பிழையான செய்தி ஒன்றை கொண்டு செல்லும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. 
ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான விசேட நிபுணர், கெப்ரில்லா நோல், இது இலங்கையின் உள்விவகாரம் என்பதால் தமது கருத்தை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துக் கொள்ளவில்லை என்று இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்
எனினும் இது சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முரணான செயலாகும்.
எனவே இலங்கை அரசாங்கம், நீதித்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் பிழை செய்த நீதிபதி ஒருவரை விசாரணை செய்யும் போது அடிப்படை நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் கெப்ரில்லா குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கெப்ரில்லா தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசாங்கம், அதற்கான பதிலையும் அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் அவர், மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பிரதமநீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நடைமுறைகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கெப்ரில்லா அறிவித்துள்ளார்.

ad

ad