புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2013


முன்னேஸ்வரம் காளிதேவியின் சாபத்திற்குள்ளாகியுள்ள அமைச்சர் மோ்வின் சில்வா!
வேள்வி பூசையைத் தடுத்து நிறுத்திய அனைவரும் காளிதேவியின் சாபத்துக்குள்ளாகியுள்ளனர் என முன்னேஸ்வரம் காளிகோயிலின் பூசகர் மகேந்திரன் குருக்கள் தெரிவித்தார்.
ஆலய வளாகத்தில் அடாவடியில் ஈடுபட்ட அமைச்சர் மேர்வினுக்குத் தாம் வகித்த களனி பிரதேச அமைப்பாளர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆலயக் கதவை இழுத்து மூடிய ஹசித்த மடவல கொல்லப்பட்டுள்ளார். தடையுத்தரவு பிறப்பித்தவர்களும் தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேள்வி பூசையை அமைச்சர் மேர்வின் தடுத்து நிறுத்தியுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னேஸ்வரம் காளி கோயிலில் கடந்த செப்ரெம்பர் மாதம் 11ம் திகதி நடைபெறவிருந்த வேள்வி பூசையை மேர்வின் தலைமையிலான குழு, நேரடியாகவே அங்கு விரைந்து சென்று தடுத்து நிறுத்தியது.
அதேவேளை, அந்தக் காலப்பகுதியில் புத்தரின் புனித தந்ததாது இந்தியாவிலிருந்து வழிபாடுகளுக்குக் கொண்டு வரப்பட்டிருந்ததால் வேள்வி பூசையைத் தடுத்து நிறுத்துமாறு பல தரப்பும் அழுத்தங்களைப் பிரயோகித்தன. நீதிமன்றமும் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், திட்டமிட்டவாறு பூசை நடைபெறும் என ஆலய நிர்வாகத்தினர் உறுதியாகக் கூறினர். பின்னர் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய வேள்விப் பூசை கைவிடப்பட்டது. பிறிதொரு திகதியில் பூசை நிச்சயம் நடத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கோட்டை எனக் கருதப்படும் களனி பிரதேசத்தில் அவருக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆளுந்தரப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.
இவ்வாறு அரசியல் களத்தில் என்றுமில்லாதவாறு மேர்வினுக்குப் பின்னடைவு ஏற்படுவதற்கு காரணம் காளிதேவியின் சாபம் என்றே பரவலாகப் பேசப்பட்டது. தற்போது அமைச்சர் மேர்வினுக்கு அரசியல் களத்தில் மீண்டும் சோதனை ஏற்பட்டுள்ளது.
அவரின் பிரத்தியேக செயலாளர்கள் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், களனி பிரதேச அமைப்பாளர் பதவியையும் மேர்வின் இராஜிநாமா செய்துள்ளார். அமைச்சர் மேர்வினுக்கு இவ்வாறு பிரச்சினைகள் ஏற்பட காளிதேவியின் சாபமே காரணம் எனப் பேசப்படுகிறது.
அமைச்சர் மேர்வின் சில்வா காளிகோயிலுக்கு வந்து பரிகார பூசை செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது. கோயிலுக்கு யார் வேண்டுமானலும் வந்து பூசை செய்யலாம். அதற்கு எந்தவித தடையுமில்லை என்றார்.

ad

ad