புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013


எனக்கு பிரதி அமைச்சு பதவி வழங்கி ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துவிட்டார்!

புதிதாக அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றத்திற்கமைய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சினை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கும் வழங்கியமையானது இந்நாட்டின் ஜனாதிபதி சிறுபான்மை சமூகத்திற்கு பெற்றுத்தந்த
மிகப்பெரிய கௌரவமாகும் என நேற்று புதிதாக பதவியேற்ற பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தன்கைவசம் வைத்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் பதவியை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதியான முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியுள்ளதனால் வட, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றலாம். 

கடந்த முப்பது வருட கால பயங்கரவாத யுத்திற்கு பின்னர் நாடு முழுவதும் குறிப்பாக கிழக்கை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டிய ஒரு தேவைப்பாடு உள்ளது. 

இந்தத் தேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் இணைந்து பூர்த்திசெய்ய முடியும். 

நாடு முழுவதும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் மக்களை மேம்படுத்தி வறுமையை ஒழித்து தனியார் முதலீடுகளை இட்டு உல்லாசத்துறையை விரிவுபடுத்தி ஏனைய உற்பத்திப் பொருட்களை உற்பத்திசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து இந்த நாட்டை சிறந்த நாடாக குறித்த அமைச்சினூடாக மாற்றியமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

ad

ad