புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013


  
இலங்கை அரச புலனாய்வில் ஐ.பி.சி ரோடியோவின் பங்கு என்ன ?
நேற்றைய தினம், இலங்கை தேசிய பாதுகாப்பு மையத்தின் இணையத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இன்றுவரை அது இயங்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இதனைத் தாக்கி ஊடறுத்த நபர்கள், அதிலுள்ள பல விடையங்களை தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். (இதனை எவராலும் பார்வையிடமுடியும்)
இத் தாக்குதல் காரர்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் பிரித்தானியாவில் இருந்து இயங்கிவரும் ஐ.பி.சி வானொலியானது தனது மின்னஞ்சல் முகவரி ஒன்றை, இலங்கை தேசிய பாதுகாப்பு மையத்தோடு ரிஜிஸ்டர் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வானொலியானது, இலங்கை தேசிய பாதுகாப்பு மையத்துடன் ஏன் தொடர்புகளைப் பேணவேண்டும் என்ற சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த வானொலி, தமிழ் தேசிய செயல்பாட்டாளர்களை தாக்குவதும், அவர்கள் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பியும் வந்துள்ளது.

பகிரங்கமாக, பல தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை ஐ.பி.சி வானொலி தாக்கி, அவர்கள் மீது சேறுபூசும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. இதனை நடாத்திவருபவர் கல்வி அறிவு குறைந்தவர் என்றும், அவர் ஒரு ஊடகவியலாளரோ இல்லை ஊடகத்தில் முன் அனுபவம் எதுவும் இல்லாதவர் என்றும், இதன் காரணமாகவே ஐ.பி.சி வானொலி இவ்வாறான வழியில் செல்கிறது என்றும் மக்கள் தமக்குள் தாமே கூறிவந்தனர். ஆனால் தற்போது இலங்கை தேசிய பாதுகாப்பு மையத்தில் ஐ.பி.சி யின் மின்னஞ்சல் பதிவாகியுள்ளது பெரும் சந்தேகங்களை மக்களிடையே தோற்றுவித்துள்ளது. இச் செய்தியானது சங்கதி இணையத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்:

ad

ad