புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013

 ஐகோர்ட், மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
சென்னையில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை பொழுதுபோக்கிற்கான முக்கிய இடமாக மெரினா கடற்கரை உள்ளது. விடுமுறை நாட்களில் அங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் மெரினாவில்
கூடுவது வழக்கம். 

இவ்வாறு கூடும் மக்கள், கடற்கரை மணலில் அமர்ந்து உணவுப் பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதால் அப்பகுதியில் குப்பைகள் சேருகின்றன. அவை அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மெரினா கடற்கரையின் அழகை பாதுகாக்கக் கோரி காந்திஜி நுகர்வோர் அமைப்பு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வியாபாரம் என்ற பெயரில் மெரினா கடற்கரை அசுத்தமாக்கப்படுகிறது என்றும், இதற்கு காரணமான கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தனர். 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட், மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

ad

ad