புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2013


சபரிமலையில் ஐயப்பனுக்கு 
தங்க ஆபரணப்பெட்டி தூக்கும் தமிழர்!
சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க ஆபரண பெட்டி சுமந்து செல்வதில் மூன்றாவது முறையாக தமிழர் பங்கேற்றார். தமிழகத்தை சேர்ந்த அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வ தொண்டர்களாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஆண்டு தோறும், பம்பை, நீலிமலை, அப்பச்சிமேடு பகுதிகளில் சேவை செய்து வருகின்றனர். 
 

பக்தர்களுக்கு தேவையான முதல் உதவிகள், சரணம் அடைந்த பக்தர்களை அவர்களது ஊர்களுக்கு அனுப்புவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இவர்களது சேவையை பாராட்டும் விதமாக, மண்டல பூஜை அன்று ஐயப்பனை அலங்கரிக்கும் தங்க ஆபரண பெட்டியை சுமந்து செல்வதற்கு சன்னிதான நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

 தமிழகத்தின் சார்பில் நான்கு பேர் ஆண்டு தோறும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு திண்டுக்கல், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ராமையா, மதுரை பாண்டி, தேனி மனோகரன், தஞ்சாவூர் சுப்பிரமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ராமையா மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஐயப்ப சேவா சங்கத்தின் தென் மண்டல பொறுப்பாளராக இருக்கும் இவர் கூறுகையில்,"" சேவா சங்கத்தினரின் தன்னார்வ தொண்டர்களின் சேவையில், சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு, மண்டல பூஜை அன்று ஐயப்பனை அலங்கரிக்கும் தங்க அங்கி, ஆபரணங்கள் கொண்ட பெட்டியை சுமந்து செல்ல வாய்ப்பளிக்கப்படுகிறது. வருங்காலங்களில் இளைஞர்களும் சேவா சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார். 

ad

ad