புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2013



பொன்.ராதாகிருஷ்ணன் : தமிழக மக்கள் ஒரு ஊழலற்ற நேர்மையான, தூய்மையான அரசு அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தமிழக மக்களின் பிரச்சினை களை உளப்பூர்வமாக எடுத்துச் சென்று தீர்வு காண்பதில் தேசிய அரசியலில் தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சிகள் தோற்றுப்போய் விட் டன. நேர்மையான அரசியலையும், தமிழக கலாச்சாரத்தையும் வளர்க் கக்கூடிய வகையில், தமிழக விவசாயிகள், மீனவர், 
          பா.ஜ.க.வில் தலைவர் பதவிக்கு ஒருவர் இரண்டாவது முறை போட்டியிடலாம் என்கிற சட்ட திருத்தம் வந்தபிறகு அகில இந்திய அளவில் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். முதலாமவர் நிதின் கட்கரி. இவர் தேசிய தலைவர். இரண்டாமவர் பொன்.ராதாகிருஷ்ணன். இவர் தமிழ் மாநில தலைவர். பொன்னார் என பா.ஜ.க.வினர் அழைக்கப்படும் இவர் தலைவரான பிறகு பா.ஜ.க.வின் உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்ட ஜெட் வேக வளர்ச்சிதான் இவரைப் பலத்த போட்டிக்கு இடையில் வெற்றி பெற வைத் துள்ளது. இவரை பொங்கல் கொண்டாட்டம் முடிந்ததும் சந்தித்தோம்...

நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக பா.ஜ.க.வின் பலம் என்ன?

பொன்.ராதாகிருஷ்ணன் : தமிழக மக்கள் ஒரு ஊழலற்ற நேர்மையான, தூய்மையான அரசு அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தமிழக மக்களின் பிரச்சினை களை உளப்பூர்வமாக எடுத்துச் சென்று தீர்வு காண்பதில் தேசிய அரசியலில் தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சிகள் தோற்றுப்போய் விட் டன. நேர்மையான அரசியலையும், தமிழக கலாச்சாரத்தையும் வளர்க் கக்கூடிய வகையில், தமிழக விவசாயிகள், மீனவர், நெசவாளர் பிரச் சினைகளில் தீர்வு காணக்கூடிய தகுதியும் பா.ஜ.க.வுக்கு மட்டுமே உள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங் களில் பா.ஜ.க. தலைமையிலான மாநில அரசுகள் தங்களது செயல் பாடுகள் மூலம் இதை நிரூபித்துள்ளன. இதை பொதுமக்களும் மற்ற கட்சிகளும் புரிந்துகொள்ளும் வகையில் "இல்லம் தோறும் பா.ஜ.க. உள்ளம்தோறும் தாமரை' என்கிற கோஷத்துடன் பிரச்சாரம் செய்துள் ளோம். இதுதான் எங்களது பலம்.



பொதுமக்களுக்கு புரிய வைப்பது சரி. மற்ற கட்சி களுக்கும் புரிய வைக்கவேண்டும் என சொல்வது ஏன்?

பொன்.ராதாகிருஷ்ணன் : தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு தவறான பிரச்சாரம் செய்யப்படு கிறது. பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி, உயர் வகுப்பு மக்க ளுக்கான கட்சி என்கிற பிரச் சாரம்தான் அது. பா.ஜ.க. வலுப்பெற்றுவிட்டால் அதை அகற்ற முடியாது என்கிற பயத் தினால் செய்யப்படும் பிரச் சாரம் அது. உண்மையில் தாழ்த் தப்பட்ட இனத் தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பா.ஜ.க. வில் சேர்ந்துவருகிறார்கள். இதை பொதுமக்க ளுக்கு மட்டுமல்ல, இந்தப் பிரச்சாரங்களால் சில அரசியல் கட்சிகளும் பா.ஜ.க.விடமிருந்து விலகி நிற்கின்றன. அவர்களுக்கும் புரிய வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அறிவித்திருக்கிறதே?

பொன்.ராதாகிருஷ்ணன் : தி.மு.க., அ.தி. மு.க. இரண்டும் ஒரு காலகட்டத்தில் பா.ஜ.க. வுடன் சேர்ந்து கூட்டணியில் மத்திய அரசில் இடம்பெற்ற கட்சிகள்தான். தி.மு.க.வால் ஊழல் நிறைந்த காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வர முடியாது. அதனால் பா.ஜ.க.வை மதவாத கட்சி, அது ஆட்சிக்கு வரக்கூடாது எனச் சொல்கிறார்கள். ஜெயலலிதா, "கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க. அரசு காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோ கம் இழைத்துவிட்டது. அதனால் தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை' என்கிறார். ஆனால் "ஜெ.' சொல்வது நியாயமான கார ணம் இல்லை. காவிரி பிரச்சினையில் பிரதம ரை ஜெ. சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சொன்ன முதல் கட்சி தமிழக பா.ஜ.க.தான். கர்நாடகத்தில் நடப் பதைப் போல தமிழகத்தில் சர்வ கட்சி கூட் டம் நடத்த வேண்டும். அவர்களது எம்.பி.க் களைப் போல ஒற்றுமையாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றெல்லாம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். கர்நாடகத்தை ஆளும் பா.ஜ.க.வுக்கெதிராக தமிழக விவசாயி களின் நலன் காக்க நாங்கள் பேசியதைப் போல கர்நாடக மாநிலத்தில் இயங்கும் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ, பா.ம.க.வோ, விடு தலை சிறுத்தைகளோ, கம்யூனிஸ்ட்டுகளோ யாரும் குரல் கொடுக்கவில்லை. தூங்குபவர் களை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

தே.மு.தி.க. கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர தயாராக இல்லை, ஏன்?

பொன்.ராதாகிருஷ்ணன் : தி.மு.க., அ.தி.மு.க.வுக்கெதிராக மிகப்பெரிய புயலாக மக்களின் எதிர்பார்ப்புகளைத் தூண்டிய கட்சி தே.மு.தி.க. ஆனால் அந்தப் புயல் பல வீனமடைந்து அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி கரைகளை கடந்துகொண்டிருக்கிறது.

பா.ஜ.க. அனுதாபியும் நரேந்திர மோடியின் நண்பருமான சோ கூட தமிழகத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதுதான் நல்லது என்கிறாரே?

பொன்.ராதாகிருஷ்ணன் : ஜெ. தலைமை யிலான அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு, கட் டண உயர்வு என சாதாரண மக்கள் சொல் லொணா துயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஜெ. திறமையானவர். ஆனால் அவரது திறமை இன்று நடைபெறும் அவரது ஆட்சியில்  எதி ரொலிக்கவில்லை. ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஜெ. தலைமையிலான அ.தி.மு.க. பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பது சோவின் தனிப்பட்ட கருத்து.

தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று பா.ஜ.க. கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதா?

பொன்.ராதாகிருஷ்ணன் : மத்தியில் இன்று நடந்துகொண்டிருக்கும் ஆட்சி ஊழல்மிக்க பலவீனமான ஆட்சி. இன்று சீனா, சிக்கிம் மாநிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிசெய்கிறது. சின்ன நாடான இலங்கைகூட இந்தியாவை மதிக்கமாட் டேன்கிறது. பாகிஸ்தான் 2,500 தீவிர வாதிகளை வெடிகுண்டுகளுடன் அனுப்பி எல்லையில் போர் பதட்டத்தை உண்டாக்கி சீண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த காங்கிரஸ் அரசை தகர்க்க தேர்தலில் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். இந்தியா என்கிற வீடு இன்று பற்றி யெரிந்துகொண்டிருக்கிறது. அதை காப் பாற்றுவது தேசிய கடமை. ஒருவேளை தேர்தல் முடிந்த பிறகு இந்த அரசை தகர்க்க  எங்களுடன் ஒன்றுசேர வேண்டிவந்தால் அதற்கு அ.தி.மு.க. தயாராக இருக்கும் என்பது எனது நம் பிக்கை. ஜெ. எங்களுடன்தான் சேருவார். தி.மு.க. அந்த வீட்டை எரிய வைத்தவர் களின் பங்காளி என்பதால் தேர்தல் முடிந்தாலும் எங்களுடன் அணி சேராது என்பது எனது கணிப்பு.

உங்களது கட்சியை பிரதமர் வேட்பாளராக யார் முன்நடத்திச் செல்வார்?

பொன்.ராதாகிருஷ்ணன் : காங்கிரசின் ராகுல்காந்தியைப் போல தோற்றுப் போன தலைவர்கள் யாரும் பா.ஜ.க.வில் இல்லை. குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பாராளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வழி நடத்துவார் என நாடு முழுவதும் எதிர்பார்க்கிறார்கள்.

-சந்திப்பு : தாமோதரன் பிரகாஷ்

ad

ad