புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2013




            டி.டி.ஹெச். என்கிற புதிய வியாபார முறையை கொண்டு வர கமல் என்கிற தனியொரு ஹீரோ போராடிக்கொண்டிருக்க... "மறந்தும் மறைமுக ஆதரவைக் கூட கமலுக்கு கொடுத்துவிடக்கூடாது' என்பதில் தெளிவாக ஒதுங்கி நின்றார்கள் மற்ற கதாநாயகர்கள். 

அதேசமயம்... "கல்லும் முள்ளும் கமலுக்கு மெத்தை. எப்படியும் போராடி அதில் புதிய பாதை போட்டுவிடுவார். அந்தப் பாதையில் போய் நம்ம சம்பளத்தை எப்படி உயர்த்திக்கலாம்' என்ற கனவில் கணக்குப் போட்டபடி இருந்தார்கள்.nakeran

"கமல் என்கிற பெரிய கலைஞன் காயப்பட்டுவிடக்கூடாது. அவரின் கஷ்டத்திற்கு கைகொடுப்போம்' என்கிற முடிவை எடுத்திருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும், சம்மேளனமும் மற்ற ஹீரோக்களின் கனவை அடித்து நொறுக்கியிருக்கிறது.


வால் மார்ட்... ரீல் மார்ட்!

நூறு கோடி ரூபாய் முதலீட்டில் "விஸ்வரூபம்' தயாரிக்கப்பட்டிருப்பதால் அந்த முதலீட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் கமல் இறங்கியபோது "டி.டி.ஹெச்.சில் படம் ரிலீஸ்' என்கிற ஐடியாவை கமலுக்குச் சொன்னவர் "விஜய் டி.வி.' மகேந்திரன். அந்த திட்டத்திற்கு ஃபைனான்ஸியலாகவும், லீகலாகவும் வடிவம் கொடுத்தவர் ஆடிட்டர் சண்முகம்.

ஆந்திர அரசியல்வாதியான ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கமான பொட்லூரி வி.பிரசாத்தின் பி.வி.பி. சினிமா நிறுவனத்திற்கு நெருக்கமான ஆடிட்டர் சண்முகம்தான் கமலையும், பி.வி.பி.யையும் இணைத்தவர். பட்ஜெட் எகிறியதால் "விஸ்வரூப'த்திலிருந்து பி.வி.பி. விலகியபோதும், "விஸ்வரூப'த்தின் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராக சண்முகம் இருந்தே வருகிறார். இந்த கூட்டுத் திட்டத்தின்படி கமல் டி.டி.ஹெச். ரிலீஸ் திட்டத்தை அறிவித்தபோது, திரையரங்க உரிமையாளர் சங்கம் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. "வால்மார்ட் வந்தால் சில்லறைக் கடை வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்க்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களான டி.டி.ஹெச். சினிமாவை சின்னத்திரையில் ரிலீஸ் செய்தால் சில்லறை வர்த்தகர்கள் போல் இருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்' என அதி தீவிரமாய் கமலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தது. "டி.டி.ஹெச். ஆயுதம் என்னைக் காப்பாற்றிக்கொள்ளத்தான். தியேட்டர்காரர்களை அழிக்க அல்ல' எனச் சொல்லிவிட்டு கமலும் விடாப்பிடியாக இருந்தார். கொங்கு மண்டல சினிமாப்புள்ளியான திருப்பூர் சுப்பிரமணியமும் "அவங்க இப்படித்தான் எதிர்ப்பாங்க. ரிலீஸ் நேரத்தில் படம் போட ஓடி வருவாங்க. இருநூறுக்கும் மேலான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்' என கமலிடம் சொல்லியிருந்தார்.

எல்லாமே சொதப்பியது!

"உங்க டி.டி.ஹெச்.சில் எங்க படத்தை ரிலீஸ் பண்ணிக்கங்க. அதற்கு "இவ்வளவு' தொகை கொடுத்திடுங்க' என டி.டி.ஹெச். நிறுவனங்களிடம் "அவுட்ரேட்' முறையில்தான் முதலில் பேசியிருந்தார் ஆடிட்டர் சண்முகம். ஆனால் "அவுட்ரேட் வேண்டாம். பெர்ஸண்டேஜ் பிரித்துக் கொள்வோம்' என  டி.டி.ஹெச். கம்பெனிகள் டீலிங்கை திருப்பிப் போட்டது. இருப்பினும் பனை மரம் வச்சவன் பலன் பெற முடியாது. அடுத்த சந்ததிக்குப் பலன் கிடைக்கட்டும்... என்கிற முடிவில் அதற்கும் கமல் சம்மதித்தார். ஆனால் 56 தியேட்டர்களே படத்தை வெளியிட முன்வந்தது.

தியேட்டர் சங்கத்துக்கு நீதிமன்ற நோட்டீஸ்!

"நான் தயாரித்த படத்தை எப்படி வியாபாரம் செய்வது என்பது எனது உரிமை. ஆனால்  "டி.டி. ஹெச்.சில் படம் போட்டால், தமிழக திரையரங்குகளில் படத்தை வெளியிடமாட்டோம்' என தியேட்டர் சங்கம் கூறுகிறது. எனது வியாபார உரிமையை மீட்டுத் தர வேண்டும்' என டெல்லி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் கமல். இதற்கு விளக்கம் கேட்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணா மலை, செயலாளர் "ரோஹினி' பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் ஸ்ரீதர், திரையரங்க சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் உட்பட 13 பேர்களுக்கு உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

வார்த்தை விளையாட்டு!

இந்த நீதிமன்ற நோட்டீஸ் விவகாரம் வெளியே கசிந்தால் "நமக்கும் நோட்டீஸ் வருமோ?' என சங்க உறுப்பினர்களிடம் பதட்டம் ஏற்படும் என்பதால் அதைக் கமுக்கமாக அமுக்கிய தியேட்டர் சங்க நிர்வாகிகள், "எங்கள் தொழில் முறைக்கு விரோதமாக இருப்பதால் "விஸ்வரூபம்' படத்தை திரையிடமாட்டோம் என்றுதான் அறிக்கை கொடுத்தோம். கட்டாயமாக திரையிடக்கூடாது என தியேட்டர்காரர்களை நிர்பந்திக்கவில்லை' என வார்த்தை விளையாட்டை வைத்து பதில் விளக்கம் தயாரித்துக்கொண்டிருந்த நிலையில்தான்... கமலுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

க்ளைமாக்ஸின் முதல் ஸீன்!

"டி.டி.ஹெச். ஒளிபரப்பில் கமல் பிடிவாத மாக இருந்தாலும், அது அவருக்கு லாபகரமாக இருக்கப்போவதில்லை. 50 தியேட்டர்களில் மட்டும் படம் வெளியானால் அந்தப் படைப் பும் மக்களிடம் முழுமையாகச் சென்று சேராது. இது கமலுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுக்குமே' என ஃபீல்பண்ணிய கார்ப்ப ரேட் நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு நிர் வாகி, தியேட்டர் சங்கத்துக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளரிடம் பேசினார். கமலின் அபிமானியான அந்த தயா ரிப்பு நிர்வாகி ஏற்பாட்டில் கீழ்மட் டத்தில் கடந்த 6-ந் தேதி இரவு ரோஹினி இண்டர்நேஷனல் ஹோட் டலில் கூட்டம் நடந்தது. அதில் இரு தரப்புக்கும் சாத்தியமான விஷயங் கள் குறித்து ஆராயப்பட்டது.

க்ளைமாக்ஸின் இரண்டாவது ஸீன்!

7-ந் தேதி இரவு ஹோட்டல் ஹயாத்தில் அபிராமி ராமநாதன், திருச்சி ஸ்ரீதர், ஆடிட் டர் சண்முகம், "சத் யம் சினிமாஸ்' உரிமையாளர் சொரூப் ரெட்டி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

"கமல் இந்தக் கூட்டத்திற்கு வரவேண் டாம். அவ்வளவு பெரிய கலைஞனுடன் நேருக்கு நேர் பேசும்போது எங்க மனசு மாறிப் போகும். அவர் இல்லாமலே பேசுவோம்' எனச் சொல்லி தியேட்டர்காரர்கள் தங்கள் வாதங் களை வைத்தனர்.

"முதலில் வெளிநாட்டு ரிலீசுக்கு "விஸ்வ ரூபம்' படத்தை லோட் செய்வதை நிறுத்துங் கள்'  என கேட்டுக்கொள்ள, ஆடிட்டர் சண்முகம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

"கமல் பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரித்திருக் கிறார். மற்ற பொங்கல் படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து தியேட்டரை கமிட் செய்துவிட்டோம். அதனால் பொங்கலுக்குப் பிறகு "விஸ்வரூப'த்தை ரிலீஸ் பண்ணுங்கள். சுமார் நானூறு தியேட்டர்களில் போடுகிறோம்' இதன்மூலம் கமலின் நஷ்டத்தை நாங்கள் தவிர்க்கிறோம். அந்தச் சமயம் வெளிவருவதாக இருக்கும் மணிரத்னத்தின் "கடல்', அமீரின் "ஆதிபகவன்' படங்களை வேறு தேதிக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யலாம். கமலுக்கு நாங்கள் செய்கிற மரியாதை ஸோலோவா "விஸ்வரூபம்' ரிலீஸ் ஆகச் செய்வதுதான். அதனால் தியேட்டர் ரிலீசுக்கு முன் டி.டி.ஹெச். ரிலீஸை கைவிடுங் கள்' என சொன்னார்கள். இந்த விபரங்கள் கமலுக்கும் கமலின் அண்ணன் சந்திரஹாசனுக்கும் உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்டது.

கமலின் சம்மதத்தைப் பெற்று " டி.டி.ஹெச். ஒளிபரப்பு இப்போது இல்லை' என சந்திரஹாசன் தெரிவிக்க... நள்ளிரவு தாண்டியும் நடந்த அந்தக் கூட்டத்தின் முடிவில்  டி.டி.ஹெச். நிறுவனங்களுக்கு  " "விஸ்வரூபம்' டி.டி.ஹெச். ஒளிபரப்பு தற்சமயம் இல்லை' என மெயில் அனுப்பப்பட்டது. 

க்ளைமாக்ஸின் மூன்றாவது ஸீன்!

யாரும் எதிர்பாராத ட்டுவிஸ்ட்டாக 8-ந் தேதி அமைந்தது. முந்தின இரவு 12 மணிக்கு அனுப்பப்பட்ட மெயிலுக்கு பகல் 12 மணி அளவில் மெயிலில் வந்தது ரியாக்ஷன்.

"" "விஸ்வரூபம்' படத்தைக் காண எங்கள் சந்தாதாரர் கள் ரீ-சார்ஜ் கூப்பன்கள் வாங்கியிருக்கும் நிலையில் "ரிலீஸ் இல்லை' என்பது எங்கள் வியாபாரத்தை நஷ்டப்படுத்தும். அதனால் 27 கோடி ரூபாய்  நஷ்டஈடு கேட்டு உங்கள் மீது வழக்குத் தொடுப் போம்'' என ராஜ்கமல் இண் டர்நேஷனல் நிறுவனத்திற்கு மெயில் தட்டியது ஏர்டெல்  டி.டி.ஹெச். நிறுவனம்.

ஹோட்டல் சஹானா வில் அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம், சொரூப் ரெட்டி, அம்பத்தூர் ராக்கி தியேட்டர் டாக்டர் ஹரி, ஆடிட்டர் சண்முகம் உள் ளிட்டவர்கள் கூடி விவாதித்தார்கள்.

"டி.டி.ஹெச். நிறுவனம் வழக்குத் தொடுப்பதாகச் சொல்லியிருப்பதால் ஒளிபரப்பு செய்தே ஆகவேண்டும்' என சண்முகம் சொன்னார். 

தியேட்டர் சங்க செயலாளர் பன்னீர் செல்வம் வக்கீல் என்பதால், "டி.டி.ஹெச். நிறு வனங்களுக்கும், அதன் ஆபரேட்டர்களுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்த நகல் கிடைத் தால் கொண்டுவாருங்கள். அதில் நமக்கு சாதகமான அம்சம்... ஏதாவது இருக்கும். இல்லேன்னா ஆபரேட்டர்கள் சிலரை கூட்டிட்டு வாங்க பேசலாம்' எனச் சொன்னார். ஆனால் ஆபரேட்டர்கள் வரவும் மறுத்தனர், அக்ரிமெண்ட் நகலை தரவும் மறுத்தனர்.

"நமக்கெதிரா டி.டி.ஹெச். நிறுவனங்கள் சட்டரீதியாக வந்தா என்ன செய்வது? அதிலிருந்து தியேட்டர் சங்கம் நம்மை எப்படி விடு விக்கும்?' என்கிற கேள்வியை கமல், கூட்டம் நடந்த ஹோட்டலுக்கு பாஸ் பண்ணினார்.

க்ளைமாக்ஸின் நான்காவது ஸீன்!

அன்று இரவு கமலின் அலுவலகத்தில் அனைத்துத் தரப்பினரும் கூடினார்கள். கமலிடம் நேரடியாகப் பேசியதில் மனம் உருகிப் போனார்கள் பன்னீரும், "அபிராமி' ராமநாதனும்.

""இப்போதும், எப்போதும் "விஸ்வரூபம்' படம் சம்பந்தமாக தியேட்டர் அமைப்புகள் மீது  சட்டரீதியான நடவடிக்கைகள் எதையும் கமல் எடுக்கக்கூடாது. "விஸ்வரூபம்' திரை யரங்குகளில் வெளியான பிறகு நான்கு நாட்கள் கழித்து டி.டி.ஹெச்.சில் ஒளிபரப்பிக்கொள்ள லாம். திரையரங்குகள் மீது கமல் அக்கறை காட்டியிருப்பதால் பதிலுக்கு நாங்கள் டி.டி.ஹெச்.  ஒளிபரப்பிற்கு சம்மதிக்கிறோம். "கமல் எனும் சிறந்த கலைஞனை  பாதுகாக்க வேண்டும்' என்கிற அடிப்படையில் இந்த முடிவை எடுக்கிறோம். இனிமேல் யார் படம்  டி.டி.ஹெச்.சில் ஒளிபரப்பினாலும் அந்தப் படத்தை புறக்கணிப்போம்'' என்றனர்.

கடந்த 35 நாட்களாக நிலவிய "விஸ்வ ரூபம்' பரபரப்பு ஒரு வழியாய் சுமுக நிலைக்கு வந்தது.

9-ந் தேதியன்று மீடியாவை சந்தித்த கமல், ""நான் நேர்மையாக தொழில் செய் கிறேன். எனது படம் நிச்சயம் டி.டி.ஹெச்.சில் ஒளிபரப்பாகும்.  அது எப்போது? திரையரங்கு களில் ரிலீஸாவது எப்போது? என்கிற தேதியை முடிவு செய்வது என் உரிமை'' என்றார்.

ஜனவரி 25-ல் "விஸ்வரூபம்' தியேட்டர் களில் ரிலீஸ். ஜனவரி 28-ல்  டி.டி.ஹெச். ஒளி பரப்பு... என்கிறது கடைசி கட்ட தகவல்கள்.

-இரா.த.சக்திவேல்

ad

ad