புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2013


ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமைப் பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகியவற்றுக்கு “வீடோ’ அதிகாரம் உள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற 10 நாடுகள் தாற்காலிக உறுப்பினர்கள்.
அவை 2 ஆண்டுகளுக்கு மட்டும் அப்பதவியில் இருக்கும்.
இந்தச் சபையின் தலைமைப் பதவி, சுழற்சி முறையில் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும். அந்த வகையில், ஜனவரி மாதத்துக்கான தலைமைப் பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் வெவ்வேறு தலைப்புகளில் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் தலைமை வகிப்பார்.
ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. அமைதிப்படையின் செயல்பாடுகள் தொடர்பான கூட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் தலைமை வகிப்பார்.
இது தொடர்பாக ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மசூத் கான் கூறியதாவது:÷”"தலைமைப் பதவியில் திறம்பட செயல்படுவோம். முக்கிய பிரச்னைகள் தொடர்பாக உறுப்பினர்களிடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி எடுப்போம். பயங்கரவாதம் தொடர்பாக சிறப்பு விவாதக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
விரிவான நடவடிக்கை,
பேச்சுவார்த்தை, மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றின் மூலம்தான் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும்” என்றார் மசூத் கான்.

ad

ad