புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013



கலைஞர் கூறுவதை  மக்கள் நம்பமாட்டார்கள் : ராமதாஸ் பேட்டி
வன்கொடுமை தடுப்பு சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதையும் நாடக காதல் திருமணங்களால் அப்பாவி பெண்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதையும் தடுப்பதற்கு அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை  கலந்தாய்வு கூட்டம் திருச்சியில்
சங்கம் ஓட்டலில் இன்று நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ் ராமதாஸ் தலைமை தாங்கினார்.


அதன்பிறகு நிருபர்களுக்கு ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர்,   ’’தர்மபுரி சம்பவத்தை தொடர்ந்து காதல் நாடங்களால் பெண்கள் பெற்றோர் பாதிக்கப்படுவதை தடுக்க அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை  தொடங்கி உள்ளோம். சென்னை, மதுரையை தொடர்ந்து திருச்சியில் இன்றும் அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் நடத்துகிறோம். எங்கள் அமைப்புக்கு அனைவரிடமும் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
சில கட்சிகள் இந்த கூட்டத்தை நடத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள். அதற்கு பதில் அவர்களை படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர்கள் கூற வேண்டும்.


எங்கள் அமைப்பின் கோரிக்கைகள் உடனே நிறைவேறும் என்று கூறமுடியாது. இது மத்திய அரசின் கையில் உள்ளது. எனவே இது தொடர்பாக  முதலமைச்சர், பிரதமர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து  பேசுவோம்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை  போராடுவோம். காதல் திருமணம் எதிர்ப்பு வன்கொடுமை தடுப்பு சட்டம் திருத்தம் போன்ற நடவடிக்கைகளால் பா.ம.க. விற்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. அதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை.
மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் பா.ம.க.வுக்கு ஓட்டு கிடைக்காது என்றார்கள். அதையும் மீறித்தான் போராடுகிறோம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு நான்தான் பாதுகாப்பு அரண் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறுவதை  மக்கள் நம்பமாட்டார்கள். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் வல்லவர். நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த அமைப்பை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்று கூறினார்.

ad

ad