புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2013



சிகரெட் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களுக்கு நன்றி - ரஜினி
புத்தாண்டில் ரசிகர்களை சந்திந்த ரஜினி: புகை பிடிப்பதை கைவிட்டதற்கு பாராட்டு

       புத்தாண்டையொட்டி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களையும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் ரஜினி சந்தித்து பேசினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகேவந்திரா திருமண மண்டபத்தில் இச்சந்திப்பு நடந்தது. 

கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால் தனது உடல் நலம் பாதித்தது என்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ரசிகர்கள் அதனை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்.


சைதாப்பேட்டையில் சைதை ரவி தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் பொன்னேரி சேகர் தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள். 

இதை தொடர்ந்து ரசிகர்களை நேற்று சந்தித்து புகை பழக்கத்தை விட்டதற்காக பாராட்டு தெரிவித்தார். அவருக்கு ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து கூறினர். ரஜினியிடம் ரசிகர்கள் கூறும்போது, தினமும் ஆறு பாக்கெட் சிகரெட் பிடிப்போம். உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். இதனால் தினமும் ரூ. 300 வரை மிச்சமாகிறது. குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள் என்றனர். 

இதற்கு ரஜினி மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் 20 ரசிகர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து பத்திரங்களை ரஜினியிடம் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக் கொண்டார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்.ராம்தாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி, சூளைமேடு ஆர்.ரவிச்சந்திரன், ரஜினி ஆனந்தன், ரஜினி சுகுமார், ரஜினி டில்லி, எழில்அரசு, சைதை ஜி.ரவி, சைதை ஆர்.முருகன், சூளைமேடு கோ.சம்பத்குமார், ரஜினி கேசவன், ஜி.மணி, டி.முருகன், ரஜினி பித்தன், பன்னீர்செல்வம், பி.செல்வம், ஜி.எஸ்.ஸ்ரீகாந்த், டி.தாமஸ், நியூஸ் பேப்பர் சீனு, சண்முக பாண்டியன், டி.சுந்தர் ஆகியோர் ரஜினியை சந்தித்தார்கள். 

புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் மேலும் நூற்றுக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இன்று முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டனர்.

ad

ad