புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013




            மிழர்களின் பண் பாட்டோடு இரண்டற கலந் திருக்கும் ஜல்லிக்கட்டு விழா விற்கு இந்த வருடமாவது முழுமையான தடை வாங்கிவிட வேண்டும் என்று பிராணிகள் நல வாரியம் துடித்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. 

தமிழர்களின் மிக முக்கியமான திருவிழா பொங்கல். 4 நாட்கள் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழாவான இந்த பண்டிகை, தமிழகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் என தமிழர்கள் மிகுந்துள்ள நாடுகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் நான்காவது நாள் நடக்கும் மாடு பிடி திருவிழாவான ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீரத்தையும் காதலையும் பறைசாற்றும்.

தமிழர்களின் இந்த வீரவிளையாட்டை தடுத்து நிறுத்த வேண்டுமென்று "ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் மாடுகளை வதைக்கிறார்கள்... கொடுமைப்படுத்துகிறார்கள்... சாராயம் குடிக்க வைக்கிறார்கள்... கண்ணில் மிளகாய்ப்பொடி தூவுகிறார்கள்...' என்றெல்லாம் சொல்லி "அதற்கு தடை விதிக்க வேண்டும்' பல வழக்குகளை தாக்கல் செய்தனர் பிராணிகள் நல வாரியத்தினர். ஆனால், சில கட்டுப்பாடுகளையும் விதிகளையும் பின்பற்றுமாறு கூறி தடை விதிக்க மறுத்துவிட்டன நீதிமன்றங்கள். வழக்குகள் மட்டும் இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது.

"இயற்கைக்கான உலக நிதியம்-இந்தியா' என்ற அமைப்பின் அறங்காவலர் தியோடர் பாஸ்கர னிடம் நாம் பேசியபோது,’""தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. இந்த மாடுபிடி திருவிழா, தமிழர்களின் கலாச்சாரத் தோடும் உணர்வுகளோடும் பிணைந்தவை. சங்க இலக்கியங்களில் தமிழினத்தின் பண்பாட்டின் குறியீடாகவே இந்த ஜல்லிக்கட்டு அடையாளப் படுத்தப்படுகிறது. இதற்கு சான்றாகப் பல சங்கப்பாடல்களை சுட்டிக்காட்ட முடியும். வீரர்கள் ரத்தம் சிந்தினாலும் மாட்டிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான் தமிழன். ஜல்லிக்கட்டிற் காகவே காளைகள் வளர்க்கப்படுகின்றன. அந்தக் காளைகளை வேறு எந்த வேலைகளுக்கும் பயன்படுத்துவதில்லை உழவர்கள். 

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் நபர்கள், மாட்டைக் கொடுமைப்படுத்துறாங்க, கண்ணுல மிளகாய்ப்பொடி தூவுறாங்க, சாராயம் ஊத்துறாங்கன்னு புகார் சொல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் நடப்பதில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு கள். ஏனெனில்  ஒவ்வொரு கிராமத்திலும் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகள், ஒரு குடும்பத்தின் குழந்தைகள் போலவே பேணி பாதுகாக்கப்படுகிறது. தமிழினத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு கூறுகளை அழிப்பதற்காக நடத்தும் தாக்குதல்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் விவகாரம். எத்தனை வழக்குகள் போட்டாலும் தமிழர்களின் வீரத்தையும் தமிழினத்தின் உணர்வுகளையும் சட்டத்தின் மூலமாக தடுத்திட முடியாது'' என்கிறார் உணர்வுபூர்வமாக.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவையின் தலைவர் ராஜசேகரன் நம்மிடம், 

""ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென 2007-ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கலானபோது அதை ஏற்று தடை கொடுக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டதை அறிந்து ஒவ்வொருத்தரும் துடித்துப்போனோம். அப்போது மதுரைக்கு வந்திருந்த அப்போதைய முதல்வர் கலைஞரின் கவனத்துக்கு இது போனபோது, உயரதி காரிகளோடு கலந்துபேசி அப்போதைய மதுரை கலெக்டர் உதயச்சந்திரனுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார் கலைஞர். அதன்படி, கோர்ட்டில் மிக கனமான ஒரு அஃபிடவிட்டை தாக்கல் செய்தார் உதயச்சந்திரன். 

அதில், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக எப்படியெல்லாம் இந்த வீர விளையாட்டு நிலைகொண்டது என்பதை சங்க இலக்கியங்கள் தொடங்கி பல்வேறு சரித்திரச் சான்றுகளுடன் விவரித்துவிட்டு, "இயல்பாகவே காளைகளை அடக்கத் துடிக்கும் வீரமறவர் குல இளைஞர்களின் குருதியிலும் சுவாசத்திலும் நெருங்கியத் தொடர்புடையது இந்த விளையாட்டு. காதலும் வீரமும் தமிழர்களின் ஒழுக்கமாகும். அதைத்தான் இந்த விளையாட்டு உலகிற்கு உணர்த்துகிறது. இந்த விளையாட்டும் பொங்கல் பண்டிகையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அந்த வீர விளையாட்டை தொடர்ந்து தமிழகத்தில் நடத்திட நீதி வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 

அஃபிடவிட்டை படித்து உணர்ந்த நீதிபதி, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட் முதலில் தடைவிதித்து பிறகு தடையை நீக்கியது.

இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் உற்சாகத்தைக் கொடுத் தது. ஜல்லிக்கட்டும் எப்போதும் இல்லாத அளவுக்கு 2008-ல் வெகு சிறப்பாக நடந்தது. 

இதனையடுத்து, 2009-ல் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக சட்டத்தை நிறை வேற்றினார் கலைஞர். இந்தச் சட்டம்தான், இப்போதும் ஜல்லிக்கட்டிற்கு தடை விழாமல் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. இதை எப்படியும் உடைத்துவிட வேண்டுமென்று பகீரத முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

கடந்த வாரம், ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஏற்கனவே கூறப்பட்ட அதே காரணங்களைச் சுட்டிக்காட்டி தடை விதிக்க வேண்டுமென சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது பிராணிகள் நல வாரியம். ஆனா, தடை விதிக்க மறுத்து விட்டது கோர்ட். நீதிபதிகள் மாறும்போதெல்லாம், தடை கோருவதை வழக்கமாக வைத்திருக் கிறார்கள்.

என்ன முயற்சித்தாலும் நம் வீர விளையாட்டை முடக்கிவிட முடியாது. ஏன்னா... ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டல்ல; அது தமிழனின் சுவாசம்''’என்று ஜல்லிக்கட்டிற்கு ஏற்பட்ட தடைகளை உடைத்த பின்னணிகளை  நினைவு கூர்ந்தார் ராஜசேகர-நகெரன் 

ad

ad