புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2013


வட, கிழக்கின் தோற்றத்தினை மாற்றியமைக்க அரசு பல கோணங்களில் முயற்சி: சம்பந்தன்

 

வட, கிழக்கின் தோற்றத்தினை மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் பல கோணங்களில் பல விதங்களில் செயற்பட்டுவருகின்றன. இவை எமக்கு ஆபத்திலேயே முடியும். இதனை தொடர அனுமதிக்கமுடியாது. இந்த நிலைமை தொடருமாகவிருந்தா
ல்virakesari நாங்கள் சாத்வீக போராட்டத்தை ஆரம்பிப்பதைத்தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், அவ்வாறு ஒரு போராட்டம் நடைபெறும் போது இளைஞர் யுவதிகள் பாரியளவில் அந்தப்போராட்டத்தில் பங்குகொள்ளவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான சி.மு.இராசமாணிக்கத்தின் 100வது ஜனனதின விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ் மக்கள் ஒரு தமிழ் தேசிய இனம் என்பதில் இராசமாணிக்கம் உறுதியாக இருந்தார். அவர்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. ஒரு பண்பாடு,கலாசாரம் இருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை, அவர்களின் சுதந்திரம், அவர்களின் சுயாட்சி என்பது தொடர்பான நோக்கங்கள் கைவிடப்படப்படாமல் தொடர்ந்துவந்ததற்கு தலைவர் இராசமாணிக்கம் போன்றவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இந்த நாட்டிலே சிங்கள மொழிக்கு இணைவாக தமிழ் மொழிக்கு அந்தஸ்த்தை கோரியது தமிழரசுக்கட்சியே. தமிழர்களுக்கு சுயாட்சி வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுகைவிடப்படாத நிலையில் உள்ளது என்றால் தந்தை செல்வாவினதும் அவருக்கு ஆதரவாக இருந்த இராசமாணிக்கம் போன்றவர்களின் முயற்சி என்பதை யாரும் மறந்துவிடமுடியாது.

தலைவர் இராசமாணிக்கம் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்கவில்லை. அவர் ஒரு மிதவாத தலைவர். தமிழினம் ஏமாற்றப்பட்ட சூழலில் தமிழ் தேசிய இனம் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட சமயத்தில் அவர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்தப்பட்டதன் காரணத்தினால் தமிழ் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

அந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த போராட்டம் நீண்டகாலமாக நடைபெற்றுள்ளது. ஏறத்தாள 25 வருடமாக நடைபெற்றது. எமது ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும் கூட அந்த போராட்டம் இன்று வேறு ஒரு அடிப்படையில் தொடர்கின்றது.

எமது விடுதலைப்போராட்டம் தந்தை செல்வாவினால் அகிம்சை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது எவ்வாறு இராசமாணிக்கம் கருமங்களை முன்னெடுத்தாரோ அதனை தொடர்வதன் மூலமாக இன்றைய சூழலில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில், சர்வதேச சமூகம் எமது போராட்டத்தில் உள்ள நியாயங்களை தெளிவாக புரிந்துகொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இராசமாணிக்கம் தலைவர்கள் காட்டிய வழியில் சென்று நிதானமாக எமது போராட்டத்தினை முன்னெடுப்பதன் மூலமாகத்தான் இந்த பிரச்சினையை தீர்க்கலாம் என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டிலே யுத்தம் ஒன்று நடைபெற்று 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் அது முடிவுக்கு வந்தது. அதன்போது இடம்பெற்ற சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும். யுத்தம் நடைபெற்ற விதம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் விசாரணைகள் நடைபெற்றிருக்கின்றன.

சர்வதேச ரீதியாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் 40000 பொதுமக்கள் அந்த யுத்தத்தின் போது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்து வெளிவந்தது. தற்போது வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் அந்த தொகை சுமார் 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சர்வதேச ரீதியில் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சர்வதேச அரங்குகளில் இந்த விடயம் விவாதிக்கப்படுகின்றது.

யுத்தத்துக்கு அடிப்படையான காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன. இந்த நிலையை எதிர்காலத்தில் எவ்வாறு தவிர்க்கலாம், தடுக்கலாம் என்பதும் விவாதிக்கப்பட்ட விடயமாக அதனை எவ்வாறு அடையளாம் என்பது தொடர்பில் தற்போது பரிசீலனைகள் இடம்பெற்றுவருகின்றன.

சென்றவருடம் பங்குனிமாதம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் பல்வேறு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. விசேடமாக சர்வதேச மனித உரிமை சட்டங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டன என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உண்மை நிலையை அறிய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

வடகிழக்கில் இராணுவ மயமாக்கல் குறைக்கப்பட வேண்டும். பொதுமக்களின் நிலங்களில் குடியேற இராணுவம் இடமளிக்க வேண்டும். காணி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். சிவில் நிறுவனங்கள் செயற்பட ஆரம்பிக்க வேண்டும். இராணுவத்தின் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விரைவான முடிவுகள் எடுக்கப்படவேண்டும்,எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் இவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டும் இவற்றை அவதானி;த்து மனித உரிமை பேரவையின் ஆணையாளர் 2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

ad

ad