புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013


  

சாதாரண நிலக்கடலை வியாபாரியிடம் ரூ.27,500 கோடி வந்தது எப்படி? அதிர்ச்சியில் வருமானவரித்துறை.


www.thedipaar.com
27,500 கோடி ரூபாய் முகமதிப்புள்ள அமெரிக்க நாட்டுப் பத்திரங்களை வீட்டுக்குள் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்தவர், பில்கேட்ஸோ.. அம்பானியோ அல்ல. தாராபுரத்தைச் சேர்ந்த சாதாரண நிலக்கடலை வியாபாரி என்றால் நம்ப முடிகிறதா?  வருமானவரித் துறையினர் அந்த அளவுக்கான மலைக்க வைக்கும் ஆவணங்களை அள்ளிவந்து காட்டுகிறார்கள்! 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையம் என்ற கிராமத்தில் நிலக்கடலை வியாபாரம் செய்பவர் ராமலிங்கம். புத்தாண்டு பிறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன், வருமான வரித் துறை அதிகாரிகள் ராமலிங்கத்தின் வீட்டுக்குள் புகுந்த​னர். பல மணி நேர சோதனைக்குப் பிறகு, அவரது வீட்டுக்குள் இருந்த ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 27,500 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க நாட்டின் பாண்டுகள் மற்றும் அதற்கான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
ராமலிங்கத்தை கோவைக்கு அழைத்துச் சென்று விசாரணையைத் தொடங்கினர். அதன்பிறகு, தாராபுரத்தில் உள்ள சில வங்கிகளுக்கு அழைத்துச் சென்று ராமலிங்கத்தின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தனர். ராமலிங்கத்தின் மற்ற சொத்து மதிப்புக்கள் பற்றிய விசார ணையும் தொடர்கிறது.
யார் இந்த ராமலிங்கம்? அவரிடம் எப்படி வந்தது இத்தனை ஆயிரம் கோடிகள்?
பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர்தான் ராமலிங்​கத்தின் சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், நிலக்​கடலை தொழில் செய்வதற்காக, கடந்த 94-ம் வருடம் தாராபுரம் பகுதிக்கு குடிபெயர்ந்தவர். நிலக்கடலையும் தேங்காயும்தான் ராம​லிங்கத்தின் அப்போதைய பிசினஸ். சாதாரணமான ஓட்டு வீட்டில் வாடகைக்கு இருந்துகொண்டு, பைக்கில் சென்றுதான் வியாபாரம் செய்துவந்து இருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன், உப்புத்துறை மக்களே 'உச்’ கொட்டும் அளவுக்கு பிரமாண்டமான வீடு ஒன் றைக் கட்டினார். பல லட்சங்களைப் போட்டு சொகுசு காரையும் வாங்கி வீட்டுக்கு முன் நிறுத்தி இருக்கிறார். நிலக்கடலையிலும் தேங்காயிலும் இவ் வளவு லாபமா என்று ஒட்டுமொத்த கிரா மமே மூக்கு மேல் விரல்வைத்தது.
தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதி கேட்டு, 2,500 கோடி ரூபாய் தொகை குறிப்​பிடப்பட்ட காசோலை ஒன்றை மத்திய ரசாயனத் துறை அலுவலகத்துக்கு அனுப்பியதுதான் ராமலிங்கம் அவருக்கு அவரே வைத்துக்கொண்ட ஆப்பு. நிலக்கடலை வியாபாரிக்கு எப்படி இவ்வளவு பணம் என்று  மத்திய ரசாயனத் துறை அதிகாரி ஒருவர் வருமான வரித் துறையை உஷார் செய்து இருக் கிறார்.
''இந்தியாவில் உள்ள ஒருவர் வெளிநாட்டில் ஒரு வருடத்துக்கு 90 லட்சம் ரூபாய் மட்டும்தான் முதலீடு செய்ய முடியும். இவர் கோடிகளில் புரண்டு இருக் கிறார் என்றால், பின்னணியில் வெளி நாட்டில் வசிக்கும் யாராவது இருக்க வேண்டும். இங்கு இருக்கும் சிலரே வெளிநாட்டில் புரோக்கர்​களை வைத்துக் கொண்டு, பணப் பரிமாற்றம் செய் கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் யாராவது  பின்னணியில் இருப்பார்கள். வருமான வரி அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தினால் உண்மை வெளிவரும். ஐந்து வருடங்களாக பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் வெளிநாட்டு பாண்டுகளுடன் புரோக்கர்கள் வலம் வருகிறார்கள். ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பாண்டுகளை 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்றனர். அப்படி விற்கப்பட்ட பாண்டுகள் எல்லாம் ராமலிங்கம் மூலமாக விற்கப்பட்டதா என்பதையும் விசாரிக்க வேண்டும். ராமலிங்கத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 30 கோடி ரூபாய் சில வாரங்களுக்கு முன் யாரோ ஒருவருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நபர் யார் என்பதையும் கண்டுபிடித்தால் ஒட்டுமொத்த உண்மைகளும் வெளிவரும்'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
விசா​ரணைக்குப் பிறகு, ரத்த அழுத்தம் காரணமாக தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்​கப்பட்டு இருந்த ராமலிங்கத்திடம் பேசினோம். ''1.25 லட்சம் கோடியில் ஒரு புராஜெக்ட் ஆரம்பிக்கப் போகிறேன். அதற்கு அனுமதி கேட்டு 2,500 கோடிக்கு ஒரு செக் அனுப்பி இருந்தேன். அதைப்பற்றி விசாரிக்க அதிகாரிகள் வந்தனர். என்னிடம் இருக்கும் ஆவணங்களை எல்லாம் பார்த்து விட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பல நூறு ஏக்கரில் அமைக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். இந்தியாவில் ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களுக்கு அடுத்த​படி நாங்கள்தான் இந்தத் தொழிலைத் தொடங்கப் போகிறோம். எங்கள் நிறுவன முதலீட்​டாளர்களின் கேஷ் வேல்யூ பத்திரங்களைத்தான் வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். வெளி நாட்டில் எனக்கு நண்பர்​கள் கிடையாது. எனக்குப் பின்னணியில் அரசியல்​வாதிகளும் இல்லை. என் னிடம் எப்படி இவ்வளவு பணம் என்று கேட்கலாம். அதை மட்டும் இப்போது சொல்ல முடியாது. விசா ரணை முடியட்டும். விரிவாகவே பேசுகிறேன்'' என்று சாதாரணமாகச் சொல்கிறார்.
நமக்குத்தான் தலை சுத்துதே!

ad

ad