புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


பா.உ. சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வினோதமான விசாரணையும்! அம்பலத்துக்கு வந்த சில நடவடிக்கைகளும்-TAMILWIN
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வினோதமான விசாரணை நடவடிக்கையொன்றினை இன்று இராணுவத்தினரும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரும் நடத்தியிருக்கின்றனர்.
அதாவது இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு ஊடகத்தை மட்டுமே வைத்துக் கொண்டு நடத்தப்பட்ட முதலாவது சோதனை நடவடிக்கை இதுவாகவே இருக்கும் என அரசியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினரிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் திடீரென இராணுவத்தினரும், பொலிஸாரும் வீட்டினுள் புகுந்து சோதனை நடத்தியதுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரையும் கைதுசெய்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 3மணிக்கு இடம்பெற்றிருந்தபோது யாழ்ப்பாணத்திலுள்ள எந்தவொரு ஊடகங்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் தினமுரசு பத்திரிகையாளர்களும், ஈ.பி.டி.பி அங்கத்தவர் றுசாங்கனும் உள்ளேயே இருந்துள்ளதுடன், உள்ளேயிருந்த ஆபாச பட இறுவெட்டுக்களையும், ஆணுறைகளையும் தாம் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் தனது செய்தி தளத்தில் பரபரப்புச் செய்தியினை வெளியிட்டிருக்கின்றார்.
இன்று மாலை 3மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்குள் பொலிஸாரும், இராணுவத்தினரும் நுழைந்து சில நிமிடங்களிலேயே அலுவலகத்திற்குள் றுசாங்கன் சிறப்பு அனுமதியுடன் நுழைந்திருக்கின்றார்.
மேலும் புகைப்படங்களை கூட தான் எடுத்திருப்பதாக அவர் செய்தி வெளியிட்டிருக்கின்றார். எனவே பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் திடீர் சோதனையொன்று நடத்தப்படவுள்ள விடயம் றுசாங்கனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது.
இதேபோல் ஏனைய ஊடகங்களுக்கு வழங்கப்படாத அனுமதி றுசாங்கனுக்கு மட்டும் வழங்கப்பட்டது எவ்வாறு? யாழ்ப்பாணத்திலுள்ள உதயன், தினக்குரல், வலம்புரி பத்திரிகைகளை ஏற்கனவே அரச தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சியில் எள்ளி நகையாடும் றுசாங்கன் யாழில் ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பலவற்றுக்கு காரணகர்த்தாவாக இருந்து வருகின்றார் என்ற விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
புலிகளுடைய காலத்தில் புலிகளின் அதி தீவிர ஆதரவாளராக இருந்து றுசாங்கன், 2009ம் ஆண்டின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் அதி தீவிர விசுவாசியாக மாறியிருக்கின்றார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு மாவட்டத்திலிருக்கும் நற்பெயரை சிதைக்கும் நோக்கில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரினால் இவர் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.
மேலும், மீட்கப்பட்டதாக கூறப்படும் ஆணுறைகளும், ஆபாசப் பட சீடிகளும் எங்கிருந்து எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினரோ அவ்வாறான இடங்களே அலுவலகத்தில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையும், மாவட்ட அமைப்பாளர் வேளமாலிகிதனின் கைதும், சீடி மீட்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளும் நன்கு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது வெளிப்பட்டிருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனை சிக்க வைப்பதற்கு பல வழிகளில் முயன்று வரும் இலங்கை அரசாங்கம் ஈழப் போராட்டத்தை ஆதரித்து தனிநாட்டுக் கோரிக்கைக்கு வலுச் சேர்த்து இந்தியா பெங்களூரில் சிறீதரன் உரையாற்றினார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து சிக்க வைக்க முயன்றனர்.
பின்னர் அண்மையில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் குறித்து ஊடகங்களுக்கு செவ்வி வழங்கினார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 4ம் மாடிவரை அழைத்து விசாரணை செய்து சிக்க வைக்க முயன்றனர்.

இவை தவிர அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசினதும் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவுடன் இயங்கும் சில இணையங்களும் சிறீதரனை இலக்கு வைத்து தொடர்ச்சியான சேறடிக்கும் பிரச்சாரங்களை நடத்தி வந்தன.
அதில் குறிப்பாக அண்மையில் ஒரு செய்தியை பிரசுரித்திருந்தன. கிளிநொச்சியில் 15 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்களை வெளியிட்டு இருந்தன. எனினும் இது தொடர்பில் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை என்பதனை கூட்டமைப்பு உறுதி செய்திருந்தது.

இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்த அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அவர்களின் பாதுகாப்பு படைகள் புலனாய்வு கட்டமைப்புகள் இறுதியில் அலுவலகத்தில் திடீரென புகுந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இது தொடர்பில் சி.சிறிதரன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டவேளை, கிளிநொச்சியில் இருக்கும் தமது அலுவலகத்தில் இருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிசார் ஒரு பாலிதீன் பையை எடுத்துச் சென்றுள்ளனர் என கொழும்பில் இருக்கும் அவருக்கு அவரது கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இருந்து தெரிவித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
ஆனால் அவ்வாறானதொரு பையையோ, ஆயுத ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான பொருட்கள் எதுவும் அலுவலகத்தில் இருந்து மீட்டிருக்க முடியாது, இது ஒரு சதிச் செயல் என்றும் சிறீதரன் கூறினார்.

ad

ad