புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013


இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி!

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ரெங்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி பாதுகாப்பாக உள்ளது. கடந்த 1945ல் இருந்து கோயிலின் மூன்று தலைமுறை குருக்கள் இதை பாதுகாத்து வருகிறார்கள். 


இந்தநிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை இறுதி சடங்கு செய்வதற்காக இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளது. 

இந்த அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வந்து கங்கை நதியில் கரைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது குறித்து உலக அமைதி மையத்தின் தலைவர் டாக்டர் விஸ்வநாத் கராட், நேதாஜி நினைவகம், இந்தோ ஜப்பான் சங்கத்தின் தலைவர் தேஷ்முக் ஆகியோர் நாசிக்கில் அளித்த பேட்டியில்.. 

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக, ஜப்பான் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்ட கமிட்டி ஒன்றை அமைக்கும்படி இரு நாடுகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்களை கேட்டுக்கொள்வோம். 

இவ்வாறு அவர்கள் கூறினார். 

இவர்களில் தொழிலதிபரான தேஷ்முக், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானில் வசித்து வருகிறார். 

நேதாஜியின் மரணம் குறித்து சர்ச்சை நிலவுவது பற்றி அவரிடம் கேட்டதற்கு... 

“ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய், சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த கோயிலுக்கு சென்று நேதாஜியின் அஸ்தி இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.
 

ad

ad