புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2013


யாழ்.குப்பிளான் பகுதியில் இந்து- கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையே முரண்பாடு
யாழ். குப்பிளான் பகுதியில் இந்து - கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையில் தேவாலயம் ஒன்று அமைவது தொடர்பாக கடுமையான முரண்பாடு நிலவிவரும் நிலையில், இந்து மதம் சார்ந்த மக்கள் இன்று காலை அப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் திடீரென கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்றினை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விரைவாக அந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
இந்நிலையில் குறித்த தேவாலயத்தை திறப்பதற்கு இந்து மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக சிறிது காலம் திறக்கப்படாமலிருந்த தேவாலயம் இன்று திறப்பதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.
இதனையடுத்து, தேவாலயத்திற்கு முன்னால் வந்த இந்து மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவ மக்களே இல்லாத இடத்தில் தேவாலயம் தேவையில்லை எனவும், அதற்கான சட்டரீதியான அனுமதிகள் பெறப்படவில்லை எனவும் கூச்சலிட்டனர்.
தொடர்ந்து அந்தப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தினர். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் மக்களை துரத்தி நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் யாழ்.மாவட்டத்தில், கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையினைப் போன்று மீண்டும் மதச்சண்டைகளும், சாதிச் சண்டைகளும் அடிக்கடி நடந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேவசபை கட்டிடத்தை அகற்றுமாறு பெருமளவு பொதுமக்கள் ஆர்பாட்டம், அதற்கெதிராக தேவசபையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள்.
குப்பிழான் பகுதியல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேவசபை கட்டிடத்திற்கு எதிர்பு தெரிவிக்குமுகமாக, இன்று அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் தேவ சபையினரின் தான்றதோன்றித்தனமான வன்முறைகளால் ஒரு களபரமே ஏற்பட்டு, வன்முறையாக சித்தரிக்கப்பட்டு பொலிஸ், இராணுவம் வரவழைக்கப்பட்ட சம்பவமாக இடம்பெற்றது.
இந்த சம்பவம் பற்றி அறிய முடியதாவது
நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தேவசபை கட்டிடம் முற்றாக அலங்கரிக்கப்பட்டு, வெளியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, இரவிரவாக ஒலிபெருக்கியில் கூச்சல்கள் போடப்பட்டு, வெளியூர்களிலிருந்தும் பெருமளவு தேவசபை தொண்டர்கள் வரவழைக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமர்சையாக இடம்பெற்றது.
புதிதாக இணைந்தவர்களுக்கு ஞானஸ்தானமும் வழங்கப்பட்டது. இன்றும் பெரியளவில் கொண்டாட்டம் இடம்பெறபோவதாகவும் அறிவிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக குடிமனைகள் செறிந்து வாழும் பகுதியில் அமைக்கப்பட்ட தேவசபைக் கட்டிடமானது உள்ளுராட்சி சபையினராலும், பொலிசாரினாலும் மூடி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதை திறப்பதற்கு இன்னும் அனுமதி பெறப்படவில்லை. நேற்றிரவு நடந்த சம்பவங்களால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் இன்று காலை மிகப்பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை சொக்கர்வளவு ஆலயத்திலிருந்து தேவசபை கட்டிடம் வரை சென்று, தேவசபை கட்டிடத்திற்கு முன்னால் கோசங்களை எழுப்பி அமைதி முறையில் சாத்வீக போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்த்தில் அயலில் உள்ள ஏழாலை மக்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினர். சிறுவர் முதல் வயது முதிர்ந்தோர் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர்.
பொதுமக்கள் கட்டிடத்திற்கு வெளியில் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிக்கொண்டு இருந்த போது தேவசபை கட்டிடத்திற்கு உள்ளிலிருந்து வந்தவர்களால் முதியவர்கள் என்றும் பார்க்காமல் வன்முறை கலந்த பாணியில் பயமுறுத்தி அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தார்கள்.
அதன் பிறகு தாமே ஒரு சில கண்ணாடிகளை உடைத்துவிட்டு பொலிசாரயும் இராணுவத்தையும் வரவழைத்தார்கள்.
தேவ சபையின் முறைப்பாட்டை உடனடியாக ஏற்ற பொலிசார் வழக்கை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கு முன்னர் நடந்த சம்பவம் பற்றி அறிய முடியதாவது,
தனி இந்துக்கள் வாழும் குப்பிழான் கிராமத்தில் வீட்டுக்கு பின்புறமாக மிகப் பாரிய தேவசபை கட்டிடத்தை அமைத்தார்கள். இதற்கான அரச அனுமதி பெறப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இதன் திறப்பு விழா அறிவிக்கப்பட்ட போது அயலில் உள்ள பொதுமக்களின் எதிப்பினால் திறப்பு விழா நிறுத்தப்பட்டது.
சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றுமாறு பொதுமக்கள் பொலிசாரிடம் எழுத்து மூலமான முறைப்பாட்டை செய்தனர்.
இதுவரையில் பொலிசார் எந்தவகையான நடவடிக்கையும் எடுக்கமாலும், வழக்கை பதிவு செய்யாமலும் இழுத்தடித்து வருகிறார்கள்.
அதேசமயம் பிரதேசசபை ஆணையாளரிடமும் இது சம்பந்தமாக முறைப்பாடு செய்யப்பட்டது.
பிரதேசசபை ஆணையாளரும் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றுவதற்கு முயற்சி செய்வதற்கு பதிலாக அதற்கு அனுதி பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்வதாக பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டு வருகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக அண்மையில் நடந்த சில சம்பவங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
அனுமதியை பெறுவதற்காக பெருமளவு லட்சங்களை தேவசபை செலவு செய்து வருகின்றது. சம்பந்தப்பட்டவர்களிடமும் கை மாறியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எது எவ்வாறெனினும் அமைதியான முறையில் எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க தயார் செய்து வருகிறார்கள்.
கலாச்சார ரீதியாக பெரும் மாற்றங்களை ஏற்படுத்த 

ad

ad