புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2013


ஆனந்தசங்கரியுடன் பேசாது சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் மூத்த அரசியல்வாதியுமான வி. ஆனந்தசங்கரியை வைபவம் ஒன்றில் சந்தித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவருடன் பேசாது சென்ற நிகழ்வு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து தெரியவருவதாவது:
கொழும்பு, கொம்பனித்தெரு கங்காராம விகாரையில் விசேட வைபவம் ஒன்று கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயலத் ஜெயவர்த்தன, ரவி கருணாநாயக்க மற்றும் தமிழர் விடுதலைக் கூட்ணியின் செயலாளர் ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஆனந்தசங்கரி ஜனாதிபதியின் அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த போதிலும் எந்தவித சம்பாஷணையும் இடம்பெறவில்லை. ஆனந்தசங்கரியுடன் ஜனாதிபதி எத்தகைய உரையாடலையும் மேற்கொள்ளவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆனந்தசங்கரி நீண்ட கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். அதில் பல விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

ad

ad