புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்த இடத்தை இடித்து தள்ளிய
 மீனவர்கள்- பதற்றத்தால் போலீஸ் குவிப்பு 
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே மீனவக் கிராமத்தை மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிர மித்துக் கட்டியதாகக் கூறப்படும் சுவரை,  இன்று
அப்பகுதி பொதுமக்கள் இடித்துத் தள்ளியதால், அங்
கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நீலாங்கரை அருகே உள்ள கரிக்காட்டுக் குப்பம் என்ற கிராம த்தில் மத்திய அமைச்சர்  சிதம்பரத்தின் குடும்பத் தினருக்கு சொந்தமாக இடம் உள்ளது. இதற்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை, அவர்கள் ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டியதாகக் கூறப்படுகிறது. 
இது தொடர்பாக, அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மீனவ மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், இன்று அவர்கள் தாங்களாகவே கடப்பாரை, கம்பிகளுடன் வந்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்பட்ட சுவரை இடித்து தள்ளினர். குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் சுவரை இடித்துத்  தள்ளியதால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ad

ad