புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013


ராஜீவ் காந்தி கொலையில் சந்தேக நபராக் சுப்ரமணிய சுவாமி !
தூக்குக் கயிற்றில் நிஜம் என்னும் புத்தம் தற்போது லண்டனில் வெளியாகியுள்ளது. மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான திரு. திருச்சி வேலுசாமி அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். ராஜீவ் கொலையில் அவர் தெரிந்துவைத்திருந்த பல விடையங்களை மனம் திறந்து எழுதியுள்ளார். இதில் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி , இரவு 10.15 க்கு குண்டு வெடித்ததாகவும், அதில்
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும், பின்னர் 30 நிமிடங்கள் கழித்தே அவ்விடத்திற்கு மேலதிகப் பொலிசார் வந்ததாகவும் குறிப்பிடும் அவர். அச் செய்தி அங்கிருந்து வெளியே செல்ல குறைந்தது மேலும் ஒரு 30 நிமிடங்களாவது பிடித்திருக்கும் , ஆனால் நான் 10.25 மணிக்கு டெல்லியில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவேளை, என்ன ராஜீவ் இறந்துட்டார் அதனைத் தானே சொல்ல வருகிறீர்கள் என்று சுப்ரமணிய சுவாமி கேட்டுள்ளார். 

இதில் விநோதமான விடையம் என்னவென்றால், தமிழ் நாட்டில் அப்போது இருந்த திருச்சி வேலுசாமிக்கு கூட தெரியாது ராஜீவ் கொல்லப்பட்டது. ஆனால் 20 நிமிடங்களில் டெல்லியில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு எப்படி இத்தகவல் தெரியும் ? என்று திருச்சி வேலுசாமி அவர்கள் தனது நூலில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுமட்டும் அல்ல பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் தனது புத்தகத்தில் பதிவுசெய்ய தவறவில்லை. மிகவும் சுவாரசியமான இப் புத்தக வெளியீடு , நேற்றைய தினம்(ஞாயிற்றுக் கிழமை) மாலை குரொய்டனில் இடம்பெற்றது. மூத்த ஊடகவியலாளட்கள் பலர் இதில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.


ad

ad