புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013

"ஹலோ தலைவரே... தனித்துப்போட்டின்னு ஜெ. அறிவிச்சபிறகு, ஒவ்வொரு கட்சியிலும் தேர்தல் வியூகங்கள் வேகமா போய்க்கிட்டிருக்கு.''

""நடக்கப்போறது எம்.பி. தேர்தலாச்சே.. தேசிய கட்சிகள் ரொம்ப கவனிக்குமே!''
""எல்லாக் கட்சிகளும் எம்.பி. தேர்தலில் சீரியஸா இருக்குது. போன திங்கட்கிழமையன்னைக்கு டெல்லி 10, ஜன்பத் ரோட்டில் உள்ள சோனியா வீட்டில்  ராகுல்காந்தி, அகமது பட்டேல், ப.சிதம்பரம், கமல்நாத், வோரா, ஷிண்டே உள்பட முக்கியமான தலைகள் கூடி ஆலோசனை நடத்துனாங்க. பிரதமர் மட்டும் இல்லை. ஜனவரி 18, 19 தேதிகளில் ஜெய்ப்பூரில் நடக்கும் காங்கிரஸ் மாநாடு பற்றி ஆலோசித்துவிட்டு
அப்படியே பேச்சு, கூட்டணி விவகாரம் பற்றி வந்திருக்கு. ஒவ்வொரு மாநில நிலவரத்தையும் பேசிக்கிட்டே தமிழ்நாட்டுப் பக்கம் வந்தப்ப, ஜெ. முடிவு பற்றி கேட்டிருக்கிறார் ராகுல். ப.சி.தான் பதில் சொன்னாராம்?''

""என்ன பதில்?''

""எம்.பி. தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலக்கட்சிகள்தான் அதிக சீட் வாங்கும்னும், தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் சீட் கிடைக்கும்னும் ஜெ. நம்புவதாகவும், அதனாலதான் பிரதமர் கனவில் இருக்கிற அவர் 40 சீட்டிலும் போட்டிபோட்டு பிரதமராகவோ பிரதமரைத் தீர்மானிக்கிற ஆளாகவோ வரணும்ங்கிறதுக்காகத்தான் இந்த முடிவு எடுத்திருக்கிறார்னு சொன்ன ப.சி.,  தன்கிட்டே அதிகார பலமும் பணபலமும் இருப்பதால ஜெயிச்சிடலாம்னு ஜெ. நினைக்கிறார். ஆனா, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. அல்லது அ.தி.மு.க. இரண்டுமே கூட்டணி பலத்தோடு நிற்கும் போதுதான் வெற்றி பிரகாசமா இருக்கும். அ.தி.மு.க. எடுத்திருக்கும் முடிவால், தி.மு.க. பலமான கூட்டணி அமைச்சதுன்னா அதுதான் ஜெயிக்கும்னு சொல்லி யிருக்கிறார்.''


""டெல்லித் தலைமையோட ரியாக் ஷன் என்ன?''

""அரசியல் கட்சித் தலைமைகள் மனதில் நம்பிக்கைக்குரிய தலைவரா ஜெ. இல்லைங்கிறது அவரோட மைனஸ் பாயிண்ட்டுன்னு சோனியா சொல்லியிருக்காரு. மற்ற தலைவர்களோட மனநிலையும் அதுதானாம். இங்கே சத்தியமூர்த்தி பவனிலும் நியூ இயர் அன்னைக்கு ஜி.கே.வாசன், ஞானதேசிகன், எஸ்ஆர்.பி. இவங்களெல்லாம் இது சம்பந்தமா ஆலோசிச்சிருக் காங்க. அப்ப வாசன், இது அவசரப்பட்டு எடுத்திருக்கிற முடிவாகத் தெரியுது. எம்.பி. தேர்தல்னா தேசியக் கட்சியோடு சேர்ந்து போட்டியிடுற கட்சிதான் ஜெயிக்கும்னு சொல்லியிருக்கிறார்.''

""பா.ஜ.க. தரப்பில் என்ன சொல்றாங்க?''

""காவிரி பிரச்சினையில்  கர்நாடக பா.ஜ.க. தமிழகத்துக்கு ஆதரவா இல்லைங்கிறதுதானே ஜெ.வின் தனித்துப்போட்டி முடிவுக்கான காரணங்களில் ஒன்றா சொல்லப்பட்டது. அதைப் பற்றி டெல்லி பா.ஜ.க. தலைமைக்கிட்டே தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுறப்ப, காவிரி பிரச்சினையில் ஜெ. எடுக்கிற முடிவு களுக்கு ஆதரவாகத்தான் தமிழக பா.ஜ.க. இருக்குன்னு சொல்லியிருக்காரு. ஆனாலும், டெல்லி பா.ஜ.க.வில் ஜெ.வின் முடிவை வேறுமாதிரி யோசிக்கிறாங்க.''

""எந்த மாதிரி?''

""பா.ஜ.க.வில் பிரதமர் கனவில் இருக்கும் நரேந்திர மோடியும் பா.ஜ.க கூட்டணியில் அதை எதிர்க்கும் நிதீஷ்குமாரும் எதிரும்புதிருமாக இருந்தாலும் இரண்டு பேருமே ஜெ.வுக்கு நண்பர்கள்தான். அவங்க இரண்டு பேருமே ஜெ.கிட்டே தனித்தனியா, அதிக எம்.பி.க்கள் உங்க கையில் இருந்தால்தான் கிங்மேக்கரா இருக்க முடியும்னு சொன்னதன்பேரில்தான் ஜெ. இந்த முடிவை எடுத்திருக்கிறார்னு ஒரு பேச்சு உலவுது. மோடி பிரதமராவதற்கு பா.ஜ.க. தரப்பில் முட்டுக்கட்டை போட்டால் அப்போது, ஜெ.வின் வசமுள்ள எம்.பி.க்கள் மோடிக்கு பயன்படு வாங்கன்னு கணக்குப் போடப்படுது. ஜெ.வும் மத்திய அரசு தன் தலைமையிலேயோ அல்லது தன் கட்டுப்பாட்டிலேயோ இருக்கணும்னு நினைக்கிறார். மோடி பதவியேற்பு விழாவிற்கு ஜெ. போனப்பவே இது பற்றியெல்லாம் அலசப் பட்டிருக்கு. யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பரஸ்பர ஒத்துழைப்பு கொடுக்கணும்ங்கிறது தான் இருவருக்குமான புரிந்துணர்வாம். மத்திய உளவுத்துறை மூலமா  டெல்லிக்குப் போயிருக்கிற ரிப்போர்ட்டிலும் இதுதான் சொல்லப் பட்டிருக்காம்.''

""பா.ஜ.க.வையோ மற்ற கட்சிகளையோ கூட்டணியில் சேர்த்து, சீட் ஒதுக்கினால் எக்ஸ்ட்ரா லக்கேஜ்தான்னும் ஜெ. நினைச் சிருக்கலாம்.''

""ஆமாங்க தலைவரே.. .. ஜெ.விடம் சீட் எதிர்பார்த்திருந்த கட்சிகளுக்கெல்லாம் ஷாக்தான். ஆனா, தனித்துப் போட்டிங்கிற முடிவை வெளிப்படையா வரவேற்றிருப்பது பா.ம.க.தான். போனமுறையே அதைப் பற்றி பேசினோம். ஜெ.வின் இந்த அறிவிப்பு, தி.மு.க.வும் தனித்துப் போட்டியிடவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குவதா ராமதாஸ் நினைக்கிறார். இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் வடமாவட்டங்களில் பா.ம.க.வுக்குப் போதுமான வெற்றி கிடைக் கும்ங்கிறது அவரோட கணக்கு. ஒருவேளை, அ.தி.மு.க. தனித்து நிற்பதால் தி.மு.க. பக்கம் மற்ற எல்லாக் கட்சிகளும் போனாலும் அங்கே ஒதுக்கித்தர சீட் இருக்காது. குழப்பம்தான் வரும்னும் காங்கிரசோ, தே.மு.தி.க.வோ சீட் குறைந்தால் கூட்டணி அமைக்காதுன்னும் இப்படி ஏற்படக்கூடிய குழப்பமும் பா.ம.கவுக்குக் கை கொடுக்கும்னு ராமதாஸ் உறுதியா இருக்கிறார். அதனால், சமுதாய அமைப்புகளின் ஆதரவில் பா.ம.க. தனித்துப் போட்டிங்கிறதில் அவர் உறுதியா இருக்காருன்னு தைலாபுரம் வட்டாரம் சொல்லுது.''

""தி.மு.க.வோட மூவ் என்ன? தன் இறுதி மூச்சு உள்ளவரை சமுதாயத்திற்குப் பாடுபடு வேன்னும் தனக்குப் பிறகு அந்தப் பணியை மு.க.ஸ்டாலின் தொடர்வார்னும் தி.மு.க.வில் பா.ம.க.வினர் இணைந்த விழாவில் கலைஞர் பேசியிருக்காரு. 6-ந் தேதி மா.செ.க்கள் கூட்டத்தையும் தி.மு.க. நடத்துது. எம்.பி. தேர்தல் பற்றி அதில் முடிவெடுக்கப்படுமா?''

""தனித்துப்போட்டின்னு ஜெ. அறிவிச்சது பற்றி தி.மு.க. சீனியர்களிடையே விவாதம் நடந்தப்ப, நாமதான் உள்ளாட்சித்  தேர்தலில் தனித் துப்போட்டின்னு முதன்முத லில் அறிவிச்சோம்னு சொன்ன கலைஞர், இப்ப எம்.பி. எலக்சனில் அவங்க முந்திக்கிட்டாங்க. ஜெயிச்சபிறகு பா.ஜ.க.வை சப்போர்ட் பண்ணுவதற் காகத்தான் இப்படி அறிவிக்கப்பட்டிருக்கு. அ.தி.மு.க. வெற்றிக்கு நாம் இடம் கொடுத்திடக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு. அதற்குத் தகுந்த மாதிரி பலமான கூட்டணியோடு அதிக இடங்களை நாம ஜெயிக்கணும்னு சொல்லி யிருக்காரு. மா.செ.க்கள் கூட்டத்தில் தேர்தல் பற்றி டீடெய்லா விவா திக்கப் படும்னு அறிவாலய ஏரியா சொல்லுது.''

""தே.மு.தி.க.?''

""விஜய காந்த் முகத்திலே அப்படி  ஒரு தெளிவும் சந்தோஷமும் இருக்குன்னு தே.மு.தி.க. நிர்வாகிகள் சொல்றாங்க.. சட்டமன்றத்  தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலே நாம இருந்ததாலதான் அவங்க இந்தளவு ஜெயிச்சாங்க. இப்ப தனியா நிற்கும்போது அவங்க பலம் என்னங்கிறது தெரிஞ்சிடும். நாம நிறைய சீட் கிடைக்கிற கூட் டணியா அமைப்போம்னு விஜய காந்த் சொல்லியிருக்காராம். மீண்டும் தேர்தல் களத்தை சந்திக்க விரும்பும் ம.தி.மு.க.வுக்கு தி.மு.க. கூட்டணியில் சரியான  இடம் கிடைக்காது. அங்கே விஜயகாந்த் இருந்தால் வைகோவுக்கு மதிப்பு இருக்காது. அதனால, அ.தி.மு.க பக்கம் போயிடலாம்ங்கிறதுதான் அவரோட கணக்கு. கரண்ட்  கட்டுக்கு தி.மு.க. ஆட்சிதான் காரணம்னெல்லாம் பிட் போட்டி ருக்காரு. ஆனாலும், தனித்துப்போட்டிங்கிற ஜெ. அறிவிப்பு, வைகோவையும் கலங்க வச்சிருக்கு. கடைசி நேரத்தில் சகோதரியின் முடிவு மாறும்னு எதிர்பார்த்திருக்காராம்.''

""எப்போதும் அ.தி.மு.க. அணி என்பதுபோல செயல்படும் சி.பி.ஐ. தா.பாண்டியன் தரப்பு என்ன சொல்லுது?''

""தோழர்கள் பலரும் அவர்கிட்டே, ஜெ.வின் தனித்துப் போட்டி அறிவிப்பு பற்றிக் கேட்டிருக்காங்க. அது ஒரு ஸ்ட்ரேட்டஜிதான். அப்படியேதான் இருப்பாங்கன்னு நினைச் சிடாதீங்க. யார் இருக்காங்களோ இல்லையோ நாம அந்தக் கூட்டணியில் இருப்போம்னு தா.பா. சொல்லியிருக்காரு. சி.பி.எம். தங்களோட மத்திய குழு கூட்டத்திலேயே அ.தி.மு.க. ஆதரவு நிலை பற்றி பேசியிருக்குது. அவங்க தரப்பும் ஜெ. முடிவால் ஷாக்தான்னாலும், பிரதமர் கனவில் இருக்கும் ஜெ.வுக்கு மூன்றாவது அணிங்கிற அஸ்திரம் தேவைப்படும். அதற்கு கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவு வேணும்ங்கிற அடிப் படையில் நம்மை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு 2 எம்.பி. சீட்டுகளாவது கொடுப் பார்னு மார்க்சிஸ்ட் தோழர்கள் நம்பிக்கையோடு இருக் காங்க.''

 ""மற்ற கட்சிகளெல்லாம்?''

""விடுதலை சிறுத் தைகளைப் பொ றுத்தவரை திரும்பவும் திமு.க. கூட்டணி, சிதம்பரம் தொகுதியில் வெற்றி, திருமா மீண்டும் எம்.பி.ங்கிற நம்பிக்கையில் இருக்காங்க. புதிய தமிழகத்திற்கு அ.தி.மு.க. கூட்டணியில் சரியான மரியாதை இல்லை. தி.மு.க.வில் அந்த  மரியாதை கிடைத்தால் போகலாம்ங்கிற மனநிலை இருக்குதாம். மனிதநேய மக்கள் கட்சியைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வை நம்பலை. மத்தி யில் மதவாதத்திற்கு இடமளிக்காமல், மதசார்பற்ற அரசு அமையணும்ங்கிறது தான் அவங்க கணக்கு. தங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பொறுத்து கூட்டணியில் சேருவாங்களாம். தனித்துப் போட்டின்னு ஜெ. அறிவிச் சிருந்தாலும் காங்கிரசையும் பா.ஜ.க.வையும் தவிர மற்ற கட்சிகளோடு கூட்டணி சேருவார்ங்கிறதுதான் பெரும்பாலான கட்சிகளோட எதிர்பார்ப்பா இருக்கு.''

""எல்லாக் கட்சிகளையும் எம்.பி. தேர்தலுக்கு ஸ்பீடு பண்ணிவிட்டுவிட்டு, ஜெ. கொடநாட்டுக்குப் போயிட்டாரே!''

""அது சம்பந்தமா நான் சொல்றேன்.. நீலகிரியில் உள்ள எடக்காடு தேயிலைத் தொழிற்சாலையின் 50-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜெ. வந்திருக்காரு. இது கொட நாட்டுக்குப் பக்கத்திலே இருக்குது. கொடநாட்டின் பார்வையோ மஞ்சூரை அடுத்துள்ள தாய்ச்சோலை எஸ்டேட் மேலே பதிஞ்சிருக்காம். ஊட்டியின் முதல் எஸ்டேட்டுன்னு சொல்லப்படும் இந்த எஸ்டேட்டை ஜெயில் எஸ்டேட்டுன்னு சொல்லுவாங்க. வெள்ளைக்காரர்கள் காலத்தில் கைதான சுதந்திரப் போராட்ட தியாகிகளை இங்கேதான் அடைச்சி வச்சிருந்தாங்க. அதன் மீதுதான் பார்வை பதிஞ்சிருக்குது. ஜெயில் எஸ்டேட்டுன்னு சொன்னாலும் அதிலும் ஜெ. இருக்குல்லன்னு சொல்லுது கொடநாடு தரப்பு.''  

 லாஸ்ட் புல்லட்!

ஆங்கிலப்புத்தாண்டு நாள் என்றாலும் ஜனவரி 1 அன்று கலைஞ ரைக் கட்சி நிர்வாகிகளும் குடும்ப உறுப்பினர்களும் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். எப்போதும் உற்சாகமாக இருக்கும் கலைஞரின் முகத்தில் அன்று சிரிப்பு மிஸ்ஸிங். முரசொலி படங்களை பார்த்து உ.பி.க்கள் இதனை கவனிக்கத் தவறவில்லை.  சுப.தங்கவேலன் வாழ்த்து பெறும் போட்டோவில் சுப.த.வின் முகம் இறுகிக் கிடந்தது. 133 அடி உயர திருவள்ளுவர் சிலை பராமரிப்பு தொடர்பான செய்திகள்தான் கலைஞரின் மனநிலைக்குக் காரணமாம். கவிஞர் வைரமுத்து போன்றவர்களிடம் இதுபற்றி கவலையோடு விவாதித்திருக்கிறார் கலைஞர். தமிழறிஞர்களின் அமைப்பு களமிறங்கப் போகுதாம்.

ஜனவரி 6-ந்தேதி தமிழக சுற்றுப்பயணத்திற்கு நித்தி திட்டமிட்டி ருக்கும் நிலையில், நாமக்கல் கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் ஜனனி இன்ஃபோடெக் நிறுவனத்தின் செங்கோட்டுவேல் புகார் அளித்துள்ளார். வியாபாரத் தொடர்பில் 4 லட்ச ரூபாயை நித்தி மோசடி செய்துவிட்டதாகவும் பணத்தைக் கேட்டால் கொலைமிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கைது பயத்தில் தமிழகம் வர யோசிக்கிறாராம் நித்தி.

முன்னாள் பிரதமர் வாஜ் பாய்க்கு பாரத்ரத்னா விருது அளிக்க வேண்டும் என பா.ஜ.க கோரிக்கை வைத்துள்ளது. சமீபத்தில் அவரது பிறந்த நாளின்போது சீனியர்தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கச் சென்றனர். அப்போது வாஜ்பாய் டி.வி பார்ப்பது போல உட்கார்ந்திருந்தார். ஆனால், அவருக்கு டி.வி. காட்சிகள் எதுவுமே தெரியவில்லையாம். உணர்வுகள் மெல்ல மெல்ல குறைந்து வருகிறதாம். 

மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தனது  சொந்த மாநிலத்திற்குப் போயிருந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டு  பட்டா, சிட்டா போன்றவை எரிந்ததுடன்,  வடக்கு மற்றும் மேலூர் தாலுகா அதி காரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ஃபைல்களும் எரிந்துள்ளன. இந்த தீவிபத்தில் குவாரி அதிபர் பி.ஆர்.பி. வாங்கிய நிலம் தொடர்பான சிட்டாக் களும் எரிந்துள்ளனவாம். விவரமறிந்து ஊரிலிருந்து திரும்பியுள்ள கலெக்டர் ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான அதிகாரிகளின் லிஸ்ட்டை கேட்டு வாங்கியுள்ளார். தீவிபத்துக்கான உண்மைக் காரணம் ஆராயப் படுகிறது.

தாராபுரத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங் கத்தின் வீட்டில் 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு அமெ ரிக்க பத்திரங்கள் கண்டுபிடிக் கப்பட்டது தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. பலருக்கு கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து மிரட்டி வசூலித்த ராமலிங்கம், இன்னும் பலரிடம் கடன் வாங்கி விட்டு கொடுக்காமல் மிரட்டியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள்தான் வருமான வரித்துறையிடம் போட்டுக் கொடுத்திருக் கிறார்கள். ராமலிங்கத்தின் வங்கிக் கணக்கு முடக்கப் பட்ட நிலையில், இது அவரது பணமா, பெரிய இடங்களின் பினாமி பணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ad

ad