புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013



ஏற்காடு லாட்ஜில் சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்ம மரணம்
 
ஏற்காட்டில் உள்ள லாட்ஜில் நள்ளிரவில் சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 133 பேர் ஒரு வார காலம் தங்கி திட்ட அறிக்கை தயார் செய்ய ஏற்காடுக்கு நேற்று இரவு 8 மணியளவில் வந்தனர்.
அவர்கள் அனைவரும் ஏற்காடு படகு இல்லம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் 23 அறைகளில் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். மாணவர்கள் அனைவரும் நேற்று இரவு தூங்கி கொண்டு இருந்தனர். 
அப்போது விக்னேஷ்வரன் (20) என்ற மாணவர் நள்ளிரவு 2-30 மணிக்கு எழுந்து தனக்கு வாந்தி வருவதாக கூறி கழிவறைக்கு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் சத்தம் கேட்டது. 
இதையடுத்து மற்ற மாணவர்கள் ஓடிச்சென்று பார்த்த போது விக்னேஷ்வரன் கழிவறையில் வழுக்கி கீழே விழுந்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறினர். பின்னர் இதுகுறித்து ஏற்காடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் போலீசார் மாணவர் விக்னேஷ்வரன் சாவுக்கு காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்று அவருடன் தங்கி இருந்த மற்ற மாணவர்களை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மாணவர் விக்னேஷ்வரனின் தந்தை அன்பழகன். சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் இவர் தபால் அலுவலகத்தில் வேலைப்பார்த்து வருகிறார். மகன் இறந்த தகவல் தெரிந்தவுடன் அவர் குடும்பத்துடன் சேலம் வந்து கொண்டு இருக்கிறார். 
திட்ட அறிக்கை தயார் செய்ய வந்த இடத்தில் சக மாணவர் இறந்து விட்டதால் மற்ற மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

ad

ad