புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2013




             கில இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் இருக்கும் ஒரு ஊழல் திமிங்கிலத்தை, பொறி வைத்து மடக்கியிருக்கிறது சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்புத்துறை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இவர், புரோக்கராக இருந்து, வாங்க வேண்டியதை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்ததால், எங்கே தங்கள் குட்டும் வெளியே வந்துவிடுமோ என கைபிசைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். என்ன நடந்தது?

அகில இந்திய அளவில் எல்லா மருத்துவக் கல்லூரிகளும் பல் மருத்துவக் கல்லூரிகளும் மாண வர்களின் நெஞ்சில் கத்தியை வைக்காத குறையாய், நன்கொடை என்ற பெயரில் லட்சக் கணக்கில் கொள்ளையடிக்கின்றன. போதாக்குறைக்கு எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் மேற்படிப்பான எம்.டி. மற்றும் எம்.எஸ். படிக்கவேண்டும் என்றாலும், பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். முடித்தவர்கள் மேற்படிப்பான எம்.டி.எஸ். படிக்கவேண்டும் என்றாலும் லட்சங்களில், கோடிகளில் வழிப்பறி பாணியில் பறித்துவிடுகிறார்கள்.  இது இந்திய நாட்டின் ஜனாதிபதி முதல் சாதாரண பாமரர்கள் வரை அறிந்த கதைதான்.

தமிழக சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்புத் துறை யிடம் மருத்துவக் கல்லூரிகளிலும் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் தாறுமாறாக நன்கொடை வசூலிக்கப்படுவது குறித்து ஏராளமான புகார்கள் குவிந்தபடியே இருந்தன. அதேபோல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல் லூரிகள் மேற்படிப்பிற்கான பாடங்களை நடத்துவதற்கான அங்கீ காரத்தை, தகுதியற்ற கல்லூரிகளுக்கும் வாங்கித் தருவதாக கூறிக்கொண்டு  ஒரு புரோக்கர் கும்பலே அலைந்து திரிவது குறித்தும் புகார்கள் வந்தபடியே இருந்தன. 

இந்தப் புகார்களைக் கையில்....

ad

ad