புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2013

சேவை வரிக்கு எதிரான தமிழ் திரையுலகினரின் உண்ணாவிரதம் இன்று காலை தொடங்கியது. இந்த உண்ணாவிரதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார். 


திரையுலகின் பல பிரிவினருக்கும் சேவை வரி என்ற பெயரில் 12.36 சதவீதம் விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டு, அது கடந்த ஜூலை மாதத்திலிருந்து அமலில் உள்ளது. இந்த வரிவிதிப்பை ரத்து செய்யக் கோரி இன்று தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

வள்ளுவர் கோட்டம் எதிரில் போடப்பட்ட ஷாமியானா பந்தலில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. உண்ணாவிரதம் தொடங்கிய சில நிமிடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்துவிட்டார். அவர் வந்தது தெரிந்ததும் ஆயிரக்கணக்கானோர் அங்கே திரண்டுவிட்டனர். 

இரண்டு மணி நேரம் வரை உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்திருந்த ரஜினி, பின்னர் உண்ணா விரதத்தை வாழ்த்திப் பேசிவிட்டு விடைபெற்றார். விஜய், சரத்குமார், ராதாரவி உள்பட பல நடிகர்கள் உண்ணாவிரதத்தில் வந்திருந்தனர். கமல் பிற்பகல் வரை வரவில்லை. மாலையில் வருவார் என்று கூறப்பட்டது. 

முன்னணி நடிகைகள் யாரும் வரவில்லை. சினிமாவிலிருந்து டிவி பக்கம் ஒதுங்கிவிட்ட சில நடிகைகள் மட்டும் வந்திருந்தனர். 

ad

ad