புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2013





          யிரை உறைய வைக்கும் அந்தக் கொடூரத் தாக்குதலை தமிழகம் மறக்கவில்லை. 2012 ஜனவரி 7-ந்தேதியன்று காலையில் 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரை கும்பல் கும்பலாக ஆளுங்கட்சியினர் 2000 பேர், கல், கட்டை, பாட்டில் என நக்கீரன் அலு வலகத்தை சரமாரியாகத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நக்கீரனை கைப்பற்றி எரித்தனர். அலுவலகத்தில் இருந்த ஊழியர்களையும் செய்தி சேகரிக்க வந்த பிற ஊடகத்தினரையும் கல், கட்டை, பாட்டில்களாலும் தாக்கினார்கள். அ.தி.மு.க. அவைத் தலைவரில் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளால் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஜெ.வின் உணவுப்பழக்கம் பற்றிய ஒரு செய்திக்காகத்தான் இத்தனை தாக்குதல்கள். ஜெ. உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். தமிழகம் முழுவதும் ஆசிரியர் மற்றும் இணையாசிரியர் மீது 245-க்கும் மேற்பட்ட எஃப்.ஐ. ஆர்.கள் போடப்பட்டன. ஜெ. சார்பில் அரசு சார்பாக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஒரே செய்திக்காக இத்தனை நட வடிக்கை மேற்கொண்டபிறகும், பழிவாங்கும் உணர்ச்சி குறை யாமல், மேலும் ஒரு தாக்குதலாக சட்டசபை உரிமையை மீறியதாக சபாநாயகர் சார்பாக ஆசிரியர் மற்றும் இணையாசிரியருக்கு விளக்கம் கேட்டு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த ஆசிரியர் ""ஜெயலலிதாவே இது தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்தி எனக்கூறி நீதிமன்ற அவ மதிப்பு தொடர்ந்துள்ளார். எனவே அந்த செய்தி சபை உறுப்பினர் என்ற முறையிலான செயல்பாடு களை பற்றியதல்ல. எனவே இது உரிமை மீறல் அல்ல என்பதை நீதிமன்ற ஆவணங்கள் மூலம் நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்'' என தனது வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், எட்விக், சிவகுமார் ஆகியோருக்கு வக்காலத்து மூலம் அதிகாரம் வழங்கி அந்த பதிலை சட்டசபை செயலருக்கு அனுப்பினார்.

அதற்கு சட்டசபை செயலரோ, "சட்டசபை உரிமை குழுவின் முன் ஆசிரியரும் இணை யாசிரியரும் மட்டுமே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கறிஞர் ஆஜராவதோ, வக்காலத்து தாக்கல் செய்வதோ சட்டசபை நடைமுறையில் இல்லை. அதை அனுமதிக்க முடியாது' என்று மறுத்தார்கள்.

உரிமைக்குழுவின் இந்த அனுமதி மறுப்பு சட்டவிரோதமானது எனக் கூறி உயர்நீதி மன்றத்தில் ஆசிரியர் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட ரிட் மனுவில்,


""சம்பந்தப்பட்ட செய்தி பிரசுரம் முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்தது. எவ்விதத்திலும் அது சட்டசபையின் கண்ணி யத்தை குறைக்காது என்கிற தனது எதிர்வாதத்தை நக்கீரன் சார்பில் நிலைநாட்ட சட்ட விளக்கங்களும் நீதிமன்ற தீர்ப்புகளையும் அளிக்க வழக் கறிஞரால்தான் முடியும்.

உரிமைக் குழுவில் அறிஞர்கள் உறுப்பின ராகவும் உதவியாக நூலகர்கள், செயலாளர்கள், உதவி செயலர்கள் என பலரும் உள்ளனர். எனவே ஒரு பத்திரிகையாளராகிய எனக்கு வழக்கறிஞர் மூலம்தான் தகுந்த சட்ட விளக்கம் அளிக்க முடியும். மேலும் கிட்டத்தட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் போல செயல்படும் உரிமைக் குழுவின் முன்பு எனது சார்பில் ஆவணங்களை தாக்கல் செய்யவும் சாட்சிகளை விசாரணை செய்யவும், இந்திய அரசியலமைப்பு பிரிவுகள் 20 மற்றும் 21-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்ட உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் சட்டம் தெரிந்த நபரின் உதவி மறுக்க இயலாதது.

மேலும், எல்லை இல்லாத அதிகாரங்கள் உள்ள இந்த சபை என் மீது உரிமை பிரச்சினை எழுப்பி என்னை தண்டிக்க முயலும்போது என் தரப்பு வாதங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க சட்டம் கற்றறிந்த நீதிமன்ற நெறிமுறை கள் அறிந்த வழக்கறிஞர்கள் உதவி தேவை. அதை அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

நமது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.டி.பெருமாள், ஜூனியர்கள் எல்.சிவகுமார், வி.வர்கீஸ் ஆகியோர் "தமிழக சட்டசபை விதிமுறையில் வழக்கறிஞர்கள் ஆஜராகக் கூடாது என எந்த விதியும் இல்லை' என்று ஆணித்தரமாக வாதாடினர்.

தமிழக அரசு சார்பில் டெல்லியிலிருந்து இதற்கென பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ""இது இந்திய வரலாற்றில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இல்லாத நடைமுறை என்றும், உரிமைக் குழுவின் முன்பு சாட்சிகளை விசாரிக்கவோ, பதிலளிக்கவோ வழக்கறிஞரை சட்டசபையில் அனுமதிக்க முடியாது எனவும், இந்தியாவில் எந்த சட்டமன்றத்திலும் வழக்கறிஞர்கள் ஆஜரானதாக முன்னுதாரணம் இல்லை'' எனவும் வாதிட்டார். இந்த வழக்கில் திங்களன்று (21-1-2013) தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிமான் கே.சந்துரு...

""தமிழக சட்டசபை விதிமுறைகளில் உரிமைக்குழு முன்பு ஆஜராகும் நபர்களுடன் சட்ட உதவிக்காக வழக்கறிஞர்களும் உடன் ஆஜராகக் கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை, வழக்கறிஞர் சட்டம் பிரிவு 30-ன் படி ஒருவர் மீது குற்றம் சுமத்தி சாட்சியம் பதிவு செய்து அவரை தண்டிக்கக் கூடிய எந்த அமைப்பின் முன்பும் பாதிக்கப்படும் நபர்களுக் காக ஆஜராக வழக்கறிஞர்களுக்கு உரிமை உண்டு. அரசு தரப்பில் கூறும் காரணங்களும், முன்னுதாரண தீர்ப்புகளும் (Citations) இந்த வழக்கிற்கு சற்றும் பொருந்தாதவை.

இந்த வழக்கில் நக்கீரன் ஆசிரியர் சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள் சட்டசபையின் எந்த விதியையும் மீறவில்லை. எனவே இந்த வழக்கு ஏற்கத்தக்கது. நிலுவையில் இருக்கும் இந்த விவகாரத்தில் உரிமைக்குழு முன்பு நக்கீரன் கோபாலுக்காக அவரது விருப்பத்திற்கேற்ற வழக்கறிஞரை அவருடன் அனு மதிக்க வேண்டும்'' என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இதே பிரச்சினையில் "வழக்கறிஞரை அனு மதிக்க மறுப்பது சட்ட விரோதமானது' எனக் கூறி நமது வழக்கறிஞர் எட்விக் தாக்கல் செய்த மற்றொரு ரிட் மனுவில் நக்கீரன் ஆசிரியர் சார்பில் தான் தாக்கல் செய்த வக்காலத்தை சட்டமன்ற உரிமைக்குழு அனுமதிக்க மறுப்பது வழக்கறிஞர் சட்டப்பிரிவு 30-க்கு எதிரானது. ஒருவர் மீது குற்றம் சுமத்தி சாட்சியம் பதிவு செய்து தண்டிக்க முற்படும் எந்த ஒரு அமைப்பின் முன்பும் பாதிக்கப்படுபவர்கள் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகும் உரிமையை உரிமைக்குழு மறுப்பது சட்ட விரோதம்' எனக் கூறியிருந்தார். எட்விக் சார்பில் வழக்கறிஞர் ரூபர்ட் பர்னபாஸ் ஆஜராகி வாதாடினார். இந்த ரிட் மனுவையும் ஏற்றுக் கொண்டு "சட்டசபை உரிமைக் குழுவின் முன் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கறி ஞர்கள் ஆஜராகலாம்' என நீதிமான் சந்துரு ஒரு புதிய தீர்ப்பை வழங்கியுள்ளார்.

""நீதித்துறை வரலாற்றி லேயே ஒரு மைல் கல்லாக சட்ட மன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜ ராகலாம் என்ற முதல் முன்னு தாரண தீர்ப்பாக இது அமைந் துள்ளது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  இந்தத் தீர்ப்பின் மூலம் பத்திரிகை சுதந்திரம், தனி மனித உரிமை, வழக்கறிஞர்கள் உரிமை ஆகியவை ஒரே நேரத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது நக்கீரனின் சாதனைகளில் மேலும் ஒரு சாதனையாகும்'' என்கிறார்கள் சட்ட வல்லுநர்களும் பத்திரிகை உலகத்தினரும்.

அட்டை மற்றும் படங்கள் : ஸ்டாலின்

ad

ad