புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நளினி – முருகன் இன்று சந்திப்பு 
தமிழகத்தின் வேலூர் சிறையில் சில மாதங்களுக்கு முன்னர் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முருகன் அறியில் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் குற்றஞ்சுமத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சந்தேக நபர், முருகன் அறையில் இருந்து சிம்கார்டு, மெமரிகார்டு, ஹெட்போன் என்பன சிக்கியது என்று கூறபடுகிறது. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அதன்படி முருகன் பெண்கள் சிறையில் இருக்கும் அவரது மனைவி நளினியை சந்திக்க தடை செய்யப்பட்டது. கடைசியாக நவம்பர் 24-ம்திகதி நளினி-முருகன் சந்திப்பு நடந்தது. மேலும் முருகனை உறவினர்கள் பார்வையாளர்கள் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டது. முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 48 நாட்கள் இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் சிறைத்துறை நன்னடத்தை விதியின் கீழ் எடுக்கபட்ட தடை நீக்கபட்டுள்ளது. இதனையடுத்து பெண்கள் சிறையில் உள்ள நளினியை முருகன் இன்று சந்தித்து பேசினார் என அதிர்வு இணையம் அறிகிறது.

காலை 8.30 மணி முதல் 9 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. வேலூர் ஆயுதபடை டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையிலான பொலிசார் முருகனை பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். முருகன்-நளினி சந்திப்பையொட்டி சிறை வட்டாரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.


ad

ad