புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


ஐந்நூறு பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டிவரும்: அசாத்சாலி

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றிபெறலாம். ஆனால் முடியுமானால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றோம். அரசாங்கம் 500 பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டியேற்படும் என்பதனை எச்சரிக்கின்றோம் என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார்.


பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இதுவரை பதவி விலகாமல் இருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். மேலும் குற்றப் பிரேரணையில் கையொப்பம் இட்ட அனைத்து ஆளும் கட்சி எம்.பி.க்களையும் நாங்கள் நீதிமன்றத்துக்கு அழைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்
.

ad

ad