புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013


அரசு இப்படி செய்வதால்
கருப்பு பணம்தான் அதிகரிக்கும் :
ரஜினி பேச்சு
 


மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


இந்த உண்ணாவிரதத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்ய ராஜ்,பிரபு, சரத்குமார், ராதாரவி, விஜய்,சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், நடிகைகள், தயாரிப்பாளர்களும் பங்கேற்றனர்.
   உண்ணாவிரத மேடையில் ரஜினி பேசியபோது,  ‘’ கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்றும், கருப்பு பணத்தை குறைக்க வேண்டும் என்றும் அரசு பெரிய பெரிய திட்டங்களை போடுகிறது.  அதனால் மறுபடியும் மறுபடியும் சேவை வரிகளை அதிகப்படுத்திக்கொண்டே போகிறது.


இவ்வாறு சேவை வரியை அதிகப்படுத்துவதால் கருப்பு பணம் தாம் அதிகமாகும் என்பது அரசுக்கு தெரியாமல் இல்லை.   வரியை யார் சரியாக செலுத்தாமல் இருக்கிறார்களோ அவர்களை கடுமையாக தண்டிப்பதற்கு  கடுமையான சட்டத்தை கொண்டுவந்தாலே,  சரியான முறையில் அரசுக்கு வருவாய்  அதிகம் கிடைக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். 
 இங்கு வந்திருக்கும் எல்லோருடைய வேண்டுகோளையும் ஏற்று, அரசு சேவை வரியை திரும்பி பெறுவார்கள் என்று நம்பி விடைபெறுகிறேன்’’ என்றார்.

ad

ad