புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்து , உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
. செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள 10 பேர், தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றக்கோரி, கடந்த சில தினங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 


அவர்களில் சிலரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மருத்துவமனைக்குச் சென்று, அகதிகளின் உடல் நலம் குறித்து விசாரித்தார். 

அகதிகள் விடுதலைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் கொடுப்பதாக அவர்களிடம் வைகோ கூறினார்.

ad

ad