புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2013




        ""ஹலோ தலைவரே... ஒவ்வொரு கட்சியும் இப்பவே எம்.பி. தேர்தல் கூட்டணிக்கான காய்களை மூவ் பண்ண ஆரம்பிச்சிடிச்சி.''

""பொங்கல் விடுமுறை நாட்களில்கூட அரசியல் வட்டாரங்களில் பிஸியா இருந்ததா சொன்னாங்கப்பா..''
நக்கீரன் 
""ஆமாங்க தலைவரே...… பொங்கல் வாழ்த்து சொல்றதுக்காக விஜய காந்த்தோட வீட்டுக்கு வந்த தே.மு.தி.க. மா.செ.க்கள்கிட்டே விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் 3 பேரும் தேர்தல் கூட்டணி பற்றி விசாரித்திருக்காங்க. 25-ந் தேதி நடக்கவிருக்கும் கட்சியோட பொதுக்குழுவில் இதைத்தான் டிஸ்கஸ் பண்ணப் போறாங்களாம். தனித்து நிற்பதா, மூன்றாவது அணியா, தி.மு.க. கூட்டணியாங்கிறது பற்றித்தான் டிஸ்கஷன் நடந்திருக்குது. எந்தக் கூட்டணியா இருந்தாலும் அது அ.தி.மு.க.வைத் தோற்கடிக்கக்கூடிய வலிமையோடு இருக்கணும்னும் அதை மையப்படுத்தி பேசணும்னும் மா.செ.க் கள்கிட்டே பிரேமலதாவும் சுதீஷும் சொல்லியிருக்காங்க.''


""மா.செ.க்களோட மனநிலை என்னவாம்?''

பெரும்பாலான மா.செ.க் களுக்கு தி.மு.க.வோடு கூட்டணி வைக்கிற மனநிலை இருக்குது. ஆனால், சட்ட மன்றத்  தேர்தல் மாதிரி வெறும் கூட் டணியா இல்லாமல், விஜயகாந்த் நினைப் பதுபோலவே 10  எம்.பி. சீட்டு, மத்திய அமைச்சரவையில் கேபினட், இணையமைச்சர் பதவின்னு எதிர்பார்க்குறாங்க. மூன்றாவது அணி அமைச் சாலும் தனித்து நின்றாலும் அது அ.தி.மு.க.வுக்குத்தான் சாதகமாக இருக்கும்னு நினைக்கிறாங்க. ஒரு சிலர், தனித்துப் போட்டியிட்டால்தான் நாம தாக்குப்பிடிக்க முடியும்னும் நினைக்கிறாங்க. இதெல்லாம் பொதுக்குழுவில் எதிரொலிக்குமாம்.''

""அதிகளவு விருப்பம்ங்கிறது தி.மு.க. பக்கம் இருப்பதால அந்தக் கூட்டணிக்கான முடிவு நோக்கி பொதுக்குழு செல்லுமா?''

""அந்த விஷயத்தைப் பொறுத்தவரை, மு.க.அழகிரி மேலே பிரேமலதா கோபத்தில் இருக்கிறார். தே.மு.தி.க. பற்றிய அழகிரியின் விமர்சனம்தான் இதற்கு அடிப்படைன்னாலும், அழகிரி தரப்பின் உள்ளடி வேலைகள் பற்றியும் பிரேமலதாவுக்கு பயம் இருக்குதாம். ஆனாலும், அ.தி.மு.க.வை ஜெயிக்க விடக் கூடாதுங்கிறதில் விஜயகாந்த்தும் அவரோட குடும்பத்தினரும் தெளிவா இருக்காங்க. பண்ருட்டி ராமச்சந்திரனுக்குத்தான் தி.மு.க.வுடனான கூட்டணியில் விருப்பம் இல்லை.  அவரோட மகனுக்கு எம்.பி. சீட் எதிர்பார்க்கிறாராம். மொத்தமா குடும்பத்தோடு கிளம்பி அ.தி.மு.க.வுக்குப் போகப் ப்ளானான்னு தே.மு.தி.க மா.செ.க்கள்கிட்டே பேச்சு அடிபடுது.'' 

""மற்ற கட்சிகளில் கூட்டணி தொடர்பா என்னென்ன பேச்சுகள் நடக்குதாம்?''

""அ.தி.மு.க.வுக்கு எதிரா தே.மு.தி.க. வரிந்துகட்டிக் கிட்டிருக்கிற நேரத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸோ, நமக்கு அ.தி.மு.க. கூட்டணிதான் பாதுகாப்புன்னு நினைக்கிறாராம். கட்சித் தலைவரா ஜி.கே.மணிக்குப் பதில் ஏ.கே.மூர்த்தியை நியமிப்பது பற்றியும் ஆலோசிக்கிறாராம். அ.தி.மு.க. சைடிலிருந்து 3 சீட்டுகளுக்கு மட்டுமே ஆஃபர் வந்திருப்பது மட்டும்தான் ராமதாஸை யோசிக்க வைக்குது. அதற்கு ஓ.கே. சொல்லி வந்தால் வரட்டும்ங்கிறதுதான் ஜெ.வின் நிலைப்பாடாம்.''

""கம்யூனிஸ்ட்டுகள்?''

""தா.பா. கிட்டதட்ட அ.தி.மு.க. உறுப்பினராகத்தான் இருக்கிறார்னு சி.பி.ஐ. கட்சித் தோழர்களே சொல்றாங்க. சி.பி.எம்.மும் அ.தி.மு.க. லைனில்தான் இருக்குது. சென்னை மாநகராட்சியில் குறைந்த விலை உணவகங்கள் திறக்கப்படும்னு ஜெ. அறிவிப்பு மட்டும்தான் வெளியிட்டிருக்கிறார். அதற்கு, அ.தி.மு.க.வினருக்கு முன்பாக வரவேற்பு அறிக்கை கொடுத் திருப்பவர் சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்தான். அ.தி.மு.கவுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி கட்சியின் மத்திய குழுவில் இந்த வாரம் டி.கே.ரங்கராஜன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்வாருன்னும் சி.பி.எம் தோழர்கள் சொல்றாங்க. அ.தி.மு.க.வுடன் இணக்கமாகப் போங்கன்னு  கட்சியின் மத்திய கமிட்டி ஏற்கனவே சிக்னல் தந்ததையும் நாம பேசியிருக்கோமே.''…

""அ.தி.மு.க கூட்டணிக்கு ம.தி.மு.க.வை மீண்டும் இழுக்கவும் பேச்சு நடந்திருப்பது பற்றி போன முறையே பேசியிருந்தோமே..''

""ஆமாங்க தலைவரே.. அ.தி.மு.க. தரப்புடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகிட்டுத்தான் இருக்குது. வைகோவுக்கு சுகர். அதனால்தான் அவர் வாக்கிங் போகிறார்னு துக்ளக் ஆண்டுவிழாவில் சோ கிண்டலடித்ததில் வைகோ அப்செட்டாம். தன்கிட்டே பேசும் அ.தி.மு.க. நண்பர்கள்கிட்டே இது பச்சைப்பொய்னு இதைச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். தேனி  லோயர் கேம்ப்பில் நடந்த பென்னிகுயிக் மணிமண்டப திறப்பு விழாவிற்கு தமிழக அரசு சார்பில் தனக்கு அழைப்பு வரும்னு வைகோ ரொம்ப எதிர் பார்த்திருந்தாராம்.''


""பென்னிகுயிக் மணிமண்டப திறப்பு விழாவில் தமிழறிஞர்களுக்கான விருதுகளையும் ஜெ. வழங்கினாரே?''

""ஆமாங்க தலைவரே.. போனமுறை பெரியார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் சுலோச்சனா சம்பத். கடைசியில் அது விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு  கொடுக்கப்பட்டது. அண்ணா விருதை நாவலர் நெடுஞ் செழியனின் தம்பி இரா.செழியனுக்கு கொடுத்தாங்க. ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு விருதான்னு அப்போதே சர்ச்சை ஏற்பட்டது. இந்தமுறை எப்படியாவது  தனக்கு விருது கிடைக்கும்னு சுலோச்சனா சம்பத் எதிர்பார்த்திருந்தார். ஆனா, பட்டியலில் பெயர் இல்லாததால் அவர் அப்செட். அதுபோல கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும் அப்செட்டாம்.''

""அவருக்குத்தான் அம்பேத்கர் விருதை ஜெ. தன் கையால் வழங்கி சிறப்பித்திருக்காரே!''

""இப்படி விருதுகள் வழங்கப்படும்போது விருது பெற்றவர்கள்  சார்பில் யாராவது ஒருவர் பேசுவது வழக்கம். போனமுறை, இரா.செழியனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதுபோல இந்த முறை தனக்கு பேச வாய்ப்பு கிடைக்கும்னு தா.பா. எதிர்பார்த்திருந்தார். ஆனா, அவர் உள்பட யாரையும் மேடையில் பேச அனுமதிக்கலை. விருது வாங்குறவங்க சார்பில் யாரையும் பேச அனுமதிக்க வேணாம்னு ஜெ. உத்தரவாம்.'' 

""ஓ''…

""ஜனவரி 17-ந் தேதி எம்.ஜி. ஆரின் 96-வது பிறந்த தினத்தை நீலகிரி மலையில் உள்ள கோத்தகிரியில் சிலை  திறப்பு விழா வோடு ஜெ. கொண்டாடினார். அதனால், மந்திரிகளும் கோத்தகிரிக்கு மலையேறிட்டாங்க. சென்னை ராயப் பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒவ்வொரு வருடமும் ஜெ. மாலை போடுவார். கோலாகலமா விழா நடக்கும். இந்தமுறை முக்கியஸ்தர்கள் யாரும் இல்லாததால், தலைமைக் கழகத்துக்கு வந்த லோக்கல் ர.ர.க்கள் பலரும், தலைமைச் செயலகம்தான் தற் காலிக மாக கொடநாட்டுக்கு டிரான்ஸ்ஃபர் ஆயிடிச்சி. தலைமைக் கழகமும் அப்படித்தானான்னு அவங்களுக்குள்ளே பேசிக்கிட்டே போனாங்க.'' 

""கொடநாட்டிலிருந்து ஜெ. ரிட்டன் ஆனதும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்னு பரபரப்பு கிளம்புதே.''…

""ஆமாங்க தலைவரே.. கட்சி சீனியர்கள் வட்டாரத்திலேயே பதட்டம் கலந்த எதிர்பார்ப்பு இருக்குது. செந்தில் பாலாஜி, கோகுல இந்திரா, டாக்டர் விஜய், வளர்மதி, மாதவரம் மூர்த்தின்னு 5 மந்திரிகளும் 15 மா.செ.க்களும் மாற்றப்படலாம்னு பேச்சு கிளம்பியிருக்கு. 26-ந் தேதி குடியரசு தினம். 27-ந் தேதி கசாப்பு தினமாம்.'' 

""தி.மு.க. தரப்பில் என்ன நடக்குது?''

""புதன்கிழமை யன்னைக்கு மதுரைக்கு வந்த  முரசொலி  செல்வத்தை, ஏர்போர்ட்டுக்கு காரில் போய் வரவேற்று அழைத்து வந்தார் மு.க.அழகிரி. செல்வத்தோட நண்பர் வீட்டுத் திருமணம். அதற்காகத்தான் இந்த விசிட்டுன்னாலும் அரசியல் ரீதியாத்தான் டிஸ்கஷன் நடந்ததுன்னு மதுரை உ.பி.க்களிடம் பேச்சு அடிபடுது. அழகிரியிடம் பேசாமல் இருக்கும் கலைஞர்தான் முரசொலி செல்வத்தை அனுப்பி வச்சதாகவும், விரைவில் ஸ்டாலினும் அழகிரியும் ஜாயிண்ட்டா பிரஸ் மீட் தரணும்னு தலைமை விரும்புவதாகவும் அது சம்பந்தமாகத்தான் அழகிரியும் செல்வமும் பேசுனாங்கன்னு மதுரை தி.மு.க.வினரிடம் தகவல் பரவியிருக்கு.''

""சட்ட வல்லுநர்கள் வட்டாரத்தில் பரபரப்பா பரவுற ஒரு தகவலை நான் சொல்றேன்.. பக்கத்து மாநிலத்தில் நடக்கிற நம்ம ஊர் சம்பந்தப்பட்ட வழக்கின் நீதிமானோட சொந்தக்கரர் ஒருத்தர் அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு, பக்கத்து மாநிலத் தலைநகரில் தங்கியிருக்காராம். அவரைத் தோட்டத்து தரப்பினர் சந்தித்துப் பேச, இதையடுத்து நீதிமான் ஒரு கோயி லுக்கு வந்தபோது அவரை அந்த அமெரிக்க ரிட்டன் உறவினர் சந்தித்துப்  பேச விரும்பியிருக்கிறார். எதற் காக சந்திக்க நினைக்கிறார் என்பதை புரிந்துகொண்ட நீதிமான், என் சொந்தக்காரர் மேலே நல்ல மரியாதை இருக் குது. அதை அவர் கெடுத்துக்க வேணாம்னு பக்குவ மாக சொல்லித் தவிர்த்து விட்டாராம்.''

ad

ad