புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013



தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதம் தொடரும் வரையில் ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள நேரிடும் என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டுமென சிலர் கருதுகின்றனர்.

பௌதீக ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் கடந்த 2009ம் ஆண்டு முடிவுறுத்தப்பட்டது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகள் இன்னமும் முடிவுறுத்தப்படவில்லை.
2010ம் ஆண்டில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பின்னணியிலும் இந்த சர்வதேச சக்திகள் செயற்பட்டன. மஹிந்த ராஜபக்சவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என நன்கு அறிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் இந்த சூழ்ச்சித் திட்டங்களுக்கு உடந்தையாக செயற்படுகின்றன.
இதற்கு முன்னரும் பிரதம நீதியரசர்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நீதிமன்றக் கட்டமைப்பின் சுயாதீனத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக பிரசாரம் செய்யப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஓர் சட்டத்தரணி 30 ஆண்டு கால அனுபவம் காணப்படுகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தை பலவீனப்படுத்த முயற்சிக்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகுரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ad

ad