புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2013


யாழ்.பல்கலைக்கழக விவகாரம்; உயர்கல்வி அமைச்சரைச் சந்திக்கிறது நிர்வாகம்


யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது குறித்து பல்கலை நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் நாளை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் அனைத்து பீடங்களின் பீடாதிபதிகளும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று கொழும்புக்கு செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி கார்த்திகை விளக்கீடு அன்று பல்கலையில் தீபம் ஏற்றிய சம்பவத்தையடுத்து மாணவர் விடுதிகளுக்குள் அத்துமீறி படையினர் நுழைந்திருந்தனர். இதனைக் கண்டித்து மறுநாள் 28 ஆம் திகதி மாணவர்கள் கண்டன போராட்டம் நடத்தினர்.

இதன்போது பொலிஸாரால் மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதன் பின்னர் வேறு காரணங்களை வைத்து மாணவர்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் நால்வர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டநிலையில் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை புறக்கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உயர்கல்வி அமைச்சை சந்தித்து பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மேற்படி குழுவினர் கலந்துரையாடுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad