புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013





            ஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணி,  தற்போது விவசாயிகளின் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில்... அமைச்சர் ஓ.பி.எஸ். தலைமையிலான ஆய்வுக்குழுவை 10, 11 தேதிகளில் டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார் ஜெ.’ அந்தக் குழுவோடு நாமும் பயணிக்கத் தொடங்கினோம்.-நக்கீரன் 

ஓ.பி.எஸ்.தலைமையிலான அந்தக் குழுவில் சீனியர் அமைச்சர்களான  நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் போன்றவர்களும் கூடுதல் தலைமைச் செயலாளர் ஸ்ரீதர், வருவாய்த்துறை முதன்மைச் செயலா ளர் ராஜீவ் ரஞ்சன், வேளாண்மைத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா போன்றோரும் இருந்ததால் கருகிய பயிர்கள் குறித்த விபரங்களைத் துல்லியமாகக் குறிப்பெடுத் துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை முதலில் விவசாயி கள் மத்தியில்  இருந்தது. ஆனால் நடந்ததோ வேறு.

முதல்நாள் இரவே மயிலாடுதுறை காவேரி இல்லத்துக்கு வந்து ஹால்ட் அடித்த ஓ.பி.எஸ், 10-ந் தேதி காலை அங்குள்ள வள்ளலார் கோயிலுக்கு சென்று ""பயபக்தியோடு சாமி கும்பிட்டார். டீம் அசெம்பிள் ஆனதும் ‘பத்தரைக்கு நல்ல நேரம். கிளம்பலாம்''’ என்றபடி எல் லோரும் கிளம்பினர்.  கூடவே ர.ர.க்களும் கார்களில் ஏகத்துக்கும் பின் தொடர்ந்து அணிவகுக்க ஆரம்பித்த னர். செம்பனார்கோயிலில் இருந்தே விவசாயிகள் சாலை ஓரங்களில்  திரண்டிருந்தனர்.  ஆனால் அவர்களைக் கண்டு கொள்ளாமல் நேராகத் தரங்கம்பாடி அருகே இருக் கும்  காழியப்பநல்லூ ருக்கு வந்தனர். காரில் இருந்து இறங்கிய குழுவினர், விவசாய நிலங்களை, யாரோ வெளிநாட்டுக்காரர்கள் போல எட்ட நின்றே  வேடிக்கை பார்த்தனர்.. குழுவைக் கண்டு ஓடிவந்த விவசாயிகளை ர.ர.க்கள் நெருங்கவிடாமல் தடுத்தனர். இருந்தும் தூர இருந்தபடியே ’""அய்யாமார்களா, பாருங்கய்யா... எங்க விவசாய நிலத்தை. பயிர் பச்சை எல்லாம் காஞ்சிக் கருகிப்போயிடிச்சிய்யா. நஷ்டப்பட்ட விவசாயிகளை அரசாங்கம்தான் காப்பாத்தணும்''’என ஆதங்கமும் அழுகையுமாய் குரல்கொடுத்தனர்.

ஓ.பி.எஸ்.சோ, ""எல்லாம் அம்மா பார்த்துக்கு வாங்க''’என்றபடி காரில் ஏறிவிட்டார். வண்டிகள் எங்கும் நிற்காமல் வேளாங்கண்ணியை நோக்கிச்சென்றன.. வேளாங் கண்ணியில் இருக்கும் அந்த தனியார் உணவு விடுதிக்கு கார்கள் போய் நிற்க, அனைவருக்கும் மீன்வளத்துறை அமைச் சர் ஜெயபால் தடபுடலாக விருந்து கொடுக்க ஆரம்பித்தார்.. அங்கு இரண்டு மணி நேரத்தைக் கழித்த குழுவினர், ஈசனூர், வாய்மேடு போன்ற ஒரு சில இடங்களை மட்டும் பார்த்துவிட்டு  திருவாரூரில் போய் ஹால்ட் அடித்துவிட்டனர்.

விவசாயியும் சமூக ஆர்வலருமான மோகன்குமார் நம்மிடம் ""ஜாலி டூருக்கு வந்தது போல் ஆய்வுக்குழு நடந் துக்குது. உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவங்க பார்வையிடவே இல்லை. மயிலாடுதுறையையோ, திருவிடை மருதூர், நன்னிலம் பகுதிகளையோ, குடந்தை பகுதிகளையோ இவங்க பார்வையிடாதது ஏன்?. இந்தப் பகுதியை எந்தக் குழுவும் ஒரு பொருட்டாகாக் கருதாததால்தான் மயிலாடுதுறை அல்லது குடந்தையை தலைநகரமாக்கி ஒரு புதிய மாவட்டத்தை உருவாக் கணும் என்கிற கோரிக் கையை மக்கள் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க''’என்றார் காட்டமாக. சுவாமிமலை விவசாயி சுந்தர விமலநாதனோ, ‘""பேராவூரணி, அதிராம்பட்டினம்ன்னு எதையும் பார்வையிடாமலே இந்தக்குழு  எப்படி அரசுக்கு அறிக்கை கொடுக்கப்போகுது? விவசாயிகளை ஏமாற்ற ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்காங்க போலிருக்கு''’என்றார் எரிச்சலாய்.

மறுநாள் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை இந்தக்குழு சந்தித்தது. அப்போது விவசாய சங்கப் பிரதிநிதி பாண்டியன், குழுவினரிடம் ""நட்ட பயிர்கள் அத்தனையும் கருகிடிச்சி.. குறிப்பிட்ட நாட்களுக்குள் அரசு கர்நாடகாவிடம் பேசி தண்ணீர் பெற்றுக் கொடுத் திருந்தால், சம்பா சாகுபடியாவது விளைந்திருக்கும். இப்போது ஏக்கருக்கு 20 ஆயிரம் வீதம் செலவு செய்துவிட்டு கருகிய பயிரைக் கண்டு கண் ணீர் வடிச்சிக்கிட்டு  இருக்கோம்.  விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யுங்க''’என்றார் கலங்கிய விழிகளோடு. இதையே எல்லோரும் சொல்ல.. ஒ.பி.எஸ்.சோ ""எல்லாவற்றையும் அம்மாகிட்ட போய்ச் சொல்றோம்.. அம்மா பார்த்துக்குவாங்க''’என்றார் கிளிப்பிள்ளையாய்.

மதியத்திற்கு மேல் தஞ்சை மாவட்ட பகுதிக்குள் வந்தது ஆய்வுக் குழு. அப்போது பெரியகோட்டை விவசாயி துரைராஜ், பக்கிரிசமி ஆகியோர் ""கடன் வாங்கி விவசாயம் பண்ணிட்டோம். கடனைக் கட்டாமப்போனா நாண்டுக்கிட்டு சாகணும். அதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாவரை அரசுக்கிட்ட  இழப்பீடு வாங்கிக் கொடுங்க''’என்றனர் பரிதாபமாக. அங்கும் ஓ.பி.எஸ்.சி அதே பல்லவி. பின்னர்  பாப்பாநாடு, ஒரத்தநாடு, வாடிக்காடு, ஒக்கநாடு, புலவன்காடு ஆகிய கிராமங்களுக்குச் சென்றது டீம்.  விவசாயிகளோ தங்களது கருகிப்போன பயிர்களைக் காட்டி ‘இது நெற்பயிர் இல்லைய்யா; எங்க வாழ்க்கை என்று கண்ணீர் விட்டனர். அங்கும் ஓ.பி.எஸ்.சிடமிருந்து அதே ரெக்கார்டர் வாய்ஸ்தான். ஆய்வுகளை முடித்துக் கொண்டு ஒரத்தநாட்டில் பேசிய  ஓ.பி.எஸ். ""தமிழக அரசு உழவு, விதை மானியம் கொடுத்தது. ஆனால் பருவ மழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் நீர் இல்லாததாலும்  பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை எல்லாம் முதல்வர் அம்மாவிடம் சொல்லி உரிய நிவாரணம் பெற்றுத்தருவோம்'' என்றபடி புறப்பட்டார். ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அன்பான உபசரிப் பிற்குப் பிறகு, ஆய்வுக்குழு சென்னைக்குப் புறப்பட்டுவிட்டது.  காவிரி உரிமை  மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நம்மிடம்... ""இந்த குழுவானது உயர் மட்டக் குழு. இந்த குழு  எல்லா இடங்களையும் பார்க்கவில்லை என்றாலும், நேரில் பார்த்த பாதிப்புகளை  ஆய்வு செய்து   பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வெளிப்படையான அறிக்கையைக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் மக்கள் ஆய்வுக்குழுவை நம்புவார்கள்'' என்றார் அழுத்தமாய்.

"ஓ.பி.எஸ். தலைமையிலான டீம், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளைப் பார்க்காமல், ஓ.பி. அடிக்கிற டீமாத்தான் வந்துட்டுப் போயிருக்கு''’என்கிறார்கள் பலரும்.

ad

ad